எப்படி என் நண்பர்களை மற்றும் உறவினர்களை பாதிக்காமல் அல்லது அவர்கள் என்னை விட்டு ஒதுங்கி போகாதபடி நற்செய்தி சொல்லுவது?


கேள்வி: எப்படி என் நண்பர்களை மற்றும் உறவினர்களை பாதிக்காமல் அல்லது அவர்கள் என்னை விட்டு ஒதுங்கி போகாதபடி நற்செய்தி சொல்லுவது?

பதில்:
ஒரு கிறிஸ்தவனுக்கு கிறிஸ்தவனல்லாத குடும்பத்தினர், ஒரு நண்பன், உடன் வேளையால் அல்லது தெரிந்தவர் இருக்க கூடும். மற்றவர்களுடன் சுவிசேஷத்தை அறிவிப்பது கஷ்டமான காரியம், அதுவும் உற்றாருடன் நாம் சுவிசேஷத்தை அறிவிப்பது இன்னும் கடினமான ஒன்று. சிலர் சுவிசேஷத்தின் நிமித்தம் இடறல் அடைவார்கள் என்று வேதம் சொல்லுகிறது (லூக்கா 12:51–53). ஆனாலும், சுவிசேஷத்தை அறிவிக்க நமக்கு கட்டளை இடப்பட்டிருக்கிறது, மற்றும் போக்கு சொல்ல நமக்கு இடமில்லை (மத்தேயு 28:19–20; அப்போஸ்தலர் 1:8; 1 பேதுரு 3:15).

அதனால், நாம் எப்படி நமது நண்பர்களுக்கு, உடன் வேளையாலுக்கு அல்லது தெரிந்தவர்களுக்கு நற்செய்தி அறிவிப்பது. நாம் அவர்களுக்காக ஜெபிப்பதே நாம் செய்ய வேண்டிய மிக முக்கியமான காரியம் ஆகும். தேவன் அவர்கள் இருதயங்களை மாற்றவும் அவர்கள் கண்கள் சுவிசேஷத்தின் சத்தியத்திற்கு திறக்கப்படுவும் ஜெபிக்க வேண்டும் (2 கொரிந்தியர் 4:4). தேவனின் அன்பை அவர்கள் அறிந்து கொள்ளவும் இயேசு கிறிஸ்து மூலமாக அவர்கள் இரட்சிப்படையவும் வேண்டும் என்று அவர்களுக்கு தேவன் உணர்த்தும்படி ஜெபிக்க வேண்டும் (யோவான் 3:16). நாம் எப்படி அவர்களுக்கு ஊழியம் செய்யவேண்டும் என்ற தேவ ஞானத்திற்காக ஜெபிக்க வேண்டும் (யாக்கோபு 1:5).

சுவிசேஷம் சொல்ல நாம் வாஞ்சை உள்ளவர்களாக மற்றும் தைரியமும் உள்ளவர்களாக இருக்க வேண்டும். இயேசு கிறிஸ்த்துவின் மூலமாகத்தான் இரட்சிப்பு என்ற செய்தியை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினரிடம் சொல்லுங்கள் (ரோமர் 10:9–10). உங்கள் விசுவாசத்தை மற்றவர்களிடம் தன்மையாகவும் மற்றும் மரியாதையோடும் பேச எப்போதும் ஆயத்த முள்ளவர்களாக இருங்கள் (1 பேதுரு 3:15). தனிப்பட்ட முறையில் சுவிசேஷம் அறிவிப்பது ஒரு சிறந்த முறை: “ஆதலால் விசுவாசம் கேள்வியினாலே வரும், கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும்”(ரோமர் 10:17).

ஜெபிப்பதும் மற்றும் சுவிசேஷம் அறிவிப்பதோடு, நமது நண்பர்கள் மற்றும் உறவினருக்கு முன்பதாக நாம் தேவ பக்தியோடே நடப்பது முக்கியம், ஏனென்றால் அவர்களுக்கு தேவன் நமது வாழ்கையில் செய்த மாற்றங்களை அவர்கள் பார்ப்பார்கள் (1 பேதுரு 3:1–2). முடிவாக, நாம் நேசிப்பவர்களின் இரட்சிப்பை தேவனின் கரத்தில் நாம் அர்ப்பனிக்க வேண்டும். நமது பிரயாசங்கள் அல்ல, தேவனின் வல்லமை மற்றும் கிருபை மட்டுமே ஜனங்களை இரட்சிக்க கூடும். நாம் அவர்களுக்காக செய்யும் சிறந்த காரியமாய் இருப்பது என்னவென்றால் அவர்களுக்காக ஜெபிப்பது, சாட்சியாய் இருப்பது, மற்றும் அவர்கள் முன் தேவ பக்தியாய் வாழ்வது மட்டுமே. பெருக்கத்தை அளிப்பவர் தேவன் (1 கொரிந்தியர் 3:6).

English
தமிழ் முதற் பக்கத்திற்குச் செல்க
எப்படி என் நண்பர்களை மற்றும் உறவினர்களை பாதிக்காமல் அல்லது அவர்கள் என்னை விட்டு ஒதுங்கி போகாதபடி நற்செய்தி சொல்லுவது?