சமய மரபிற்குள் அல்லது பொய்யான மதத்தில் இருக்கும் ஒருவருக்கு சுவிசேஷம் அறிவிக்க சிறந்த வழி எது?


கேள்வி: சமய மரபிற்குள் அல்லது பொய்யான மதத்தில் இருக்கும் ஒருவருக்கு சுவிசேஷம் அறிவிக்க சிறந்த வழி எது?

பதில்:
சமய மரபிற்குள் அல்லது பொய்யான மதத்தில் இருப்பவர்களுக்கு நாம் செய்யக்கூடிய மிக முக்கியமான காரியம் அவர்களுக்காக ஜெபிப்பதே ஆகும். அவர்களுடைய மனதில் தேவன் மாற்றத்தை உண்டாக்கவும் மற்றும் சத்தியத்திற்கு அவர்கள் கண்கள் திறக்கப்பட நாம் ஜெபிக்க வேண்டியது அவசியம் ஆகும் (2 கொரிந்தியர் 4:4). கிறிஸ்துவின் மூலம் இரட்சிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை அவர்கள் உணரும்படிக்கு தேவன் அவர்களிடத்தில் மாற்றத்தை ஏற்படுத்த ஜெபிக்க வேண்டும் (யோவான் 3:16). தேவனுடைய வல்லமை மற்றும் பரிசுத்த ஆவியினுடைய உணர்த்துதல் இல்லாதபோது நாம் யாரையும் சத்தியத்தை அறிந்துகொள்ளும்படி செய்து வெற்றி பெற முடியாது (யோவான் 16:7-11).

நாமும் தேவ பக்தியுள்ள கிறிஸ்தவ வாழ்க்கை வாழ வேண்டும், சமய மரபிற்குள் அல்லது பொய்யான மதத்தினால் இழுக்கப்பட்டவர்கள் நமது வாழ்க்கையில் தேவன் ஏற்படுத்தின மாற்றத்தை பார்க்க முடியும் (1பேதுரு 3:1-2). வல்லமையான முறையில் இவர்களிடம் ஊழியம் செய்ய தேவையான ஞானத்திற்காகவும் நாம் ஜெபிக்க வேண்டும் (யாக்கோபு 1:5). இவை எல்லாவற்றிற்கும் மேலாக இவர்களிடம் சுவிசேஷத்தை பகிர்ந்து கொள்ளும் தைரியம் நமக்கு இருக்க வேண்டும். இயேசு கிறிஸ்துவின் மூலம்தான் இரட்சிப்பு என்கிற செய்தியை நாம் பிரஸ்தாபப்படுத்த வேண்டும் (ரோமர் 10:9-10). நம்மிலிருக்கிற நம்பிக்கையைக்குறித்து நம்மிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் உத்தரவுசொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருக்க வேண்டும் (1 பேதுரு 3:15). ஆனால் நாம் சாந்தத்தோடு வணக்கத்தோடும் உத்தரவுசொல்ல வேண்டும். நாம் உபதேசத்தை சரியாக பகிர்ந்து கொண்டு வார்த்தையின் வாதத்தில் வெற்றிபெற்றாலும் இந்த அனுகுமுறை தடையை உருவாக்கி கோபத்தையும் உண்டுபண்ணலாம்.

மேலும் தேவனை குறித்து யாரிடம் சாட்சி பகிருகிறோமோ அவர்களுடைய இரட்சிப்பை தேவனுடைய கரத்தில் விட்டுவிட வேண்டும். இரட்சிப்பது தேவனுடைய வல்லமையும்; கிருபையுமே தவிர நம்முடைய சொந்த முயற்ச்சியல்ல. தீவிர எதிர்வாதத்தை கொடுக்க மற்றும் தவறான விசுவாசத்தை குறித்த அறிவு ஆகியவற்றில் ஆயத்தத்தோடு இருப்பது நல்லது. ஆனால் இவைகளில் எதுவும் சமய மரபிற்குள் அல்லது பொய்யான மதத்தில் பிடிபட்டு இருப்பவர்களுக்கு மனந்திரும்பச் செய்யாது. நாம் செய்யக்கூடிய சிறந்த காரியம் என்னவென்றால் அவர்களுக்காக ஜெபித்தல், சாட்சி பகிருதல், அவர்களுக்கு முன்பாக நல்லதொரு கிறிஸ்தவ ஜீவியத்தை ஜீவித்தல், மற்றும் பரிசுத்த ஆவியானவர் அவர்களில் தேவனை நெருங்கவும், உணரவும் மற்றும் மனமாறவும் செய்யும்படிக்கு நம்பவேண்டும்.

English
முகப்பு பக்கம்
சமய மரபிற்குள் அல்லது பொய்யான மதத்தில் இருக்கும் ஒருவருக்கு சுவிசேஷம் அறிவிக்க சிறந்த வழி எது?