settings icon
share icon
கேள்வி

கருணைக்கொலை / தற்கொலைக்கு உதவுதல் குறித்து வேதாகமம் என்ன சொல்லுகிறது?

பதில்


யுத்தநேஷியா என்பது சில சமயங்களில் “கருணைக் கொலை” என்று அழைக்கப்படுகிறது. இந்த கருணைக்கொலைக் குறித்த காரியம் மெய்யாகவே ஒரு கடினமான பிரச்சினையாக இருக்கலாம். ஒருபுறம், ஒரு நபரின் வாழ்க்கையை நம் கையில் எடுத்துக்கொண்டு அதை முன்கூட்டியே முடிக்க நாம் விரும்பவில்லை. மறுபுறம், தேவையானதை விட அதிகமாக நாட்கள் இறக்கும் நிலையை நீடிக்கச்செய்யவும் நாம் விரும்பவில்லை-அதாவது, உயிரைக் காக்கவே விரும்புகிறோம், ஆனால் மரணத்தை நீடிக்க விரும்பவில்லை. எந்தக் கட்டத்தில் ஒரு நபர் இறந்துபோக அனுமதிக்கிறோம், மேலும் அவரது ஆயுளை நீட்டிக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறோம்?

இதற்கு தொடர்புடைய ஒரு பிரச்சினை தான் தற்கொலைக்கு உதவிசெய்தல் ஆகும். முக்கியமாக, தற்கொலைக்கு விரும்பும் ஒருவர் தன்னை கருணைக்கொலை செய்ய விரும்பும் செயல், மற்றொரு நபரின் உதவியுடன் மரணம் விரைவாகவும் வலியற்றதாகவும் இருப்பதை உறுதிசெய்வதாகும். தற்கொலைக்கு உதவுபவர் ஆயத்தங்களை செய்து தேவையான உபகரணங்களை வழங்குவதன் மூலம் மரணத்தை எளிதாக்குகிறார்; ஆனால் மரணத்தைத் தேடும் அந்த நபர்தான் உண்மையில் இந்த செயல்முறையைத் தொடங்குகிறார். மரணத்திற்கு தான் உடந்தையில்லை என தனது கைகளை எடுத்துக்கொள்வதன் அணுகுமுறை மூலம், வசதியாளர் கொலைக் குற்றச்சாட்டுகளைத் தவிர்க்க முயல்கிறார். தற்கொலைக்கு உதவி செய்யும் ஆதரவாளர்கள் "கண்ணியத்துடன் மரணம்" போன்ற சுழற்சி சொற்களைப் பயன்படுத்தி நேர்மறையான முறையில் முயற்சிக்கிறார்கள். ஆனால் "கண்ணியத்துடன் மரணம்" என்பது மரணம் ஆகும், அதுபோலவே "தற்கொலைக்கு உதவி" தற்கொலை தான், ஆகவே தற்கொலை தவறு.

சில சமயங்களில் "கலாச்சார மரணம்" என்று விவரிக்கப்படும் காலத்தில் மற்றும் இடத்தில் நாம் வாழ்கிறோம். கோரிக்கையின் அடிப்படையில் கருக்கலைப்பு செய்தல் பல தசாப்தங்களாக நடைமுறையில் உள்ளது. இப்போது சிலர் சிசுக்கொலையை தீவிரமாக முன்மொழிகின்றனர். மேலும் கருணைக்கொலை பல்வேறு சமூக மற்றும் நிதி சிக்கல்களைத் தீர்ப்பதற்கான ஒரு சாத்தியமான வழியாகவும் ஊக்குவிக்கப்படுகிறது. உலகின் பிரச்சினைகளுக்கு விடையாக மரணத்தின் மீதான இந்த கவனம் வேதாகம மாதிரியின் மொத்த தலைகீழாகும். மரணம் ஒரு எதிரி (1 கொரிந்தியர் 15:26). வாழ்க்கை/ஜீவன் என்பது தேவனிடமிருந்து நாம் பெற்றிருக்கிற ஒரு புனிதமான பரிசாகும் (ஆதியாகமம் 2:7). வாழ்வா சாவா என்கிற தெரிவுகளுக்கு இடையில் தெரிவு செய்யப்படும்போது, தேவன் “வாழ்க்கையைத் தேர்ந்தெடுங்கள்” என்று இஸ்ரவேலரிடம் கூறினார் (உபாகமம் 30:19). கருணைக்கொலை தேவனுடைய பரிசை உதறி தள்ளிவிட்டு சாபத்தைத் தழுவுகிறது.

தேவன் இறையாண்மை உடையவர் என்கிற மிகமுக்கியமான உண்மை, கருணைக்கொலை மற்றும் தற்கொலைக்கு உதவுவதை தவறு என்கிற முடிவுக்குவர நம்மைத் தூண்டுகிறது. மனிதர்களுக்கு சரீர மரணம் தவிர்க்க முடியாதது என்பதை நாம் அறிவோம் (சங்கீதம் 89:48; எபிரெயர் 9:27). இருப்பினும், ஒரு நபரின் மரணம் எப்போது, எப்படி நிகழ்கிறது என்பதில் தேவன் மட்டுமே எல்லாவற்றையும் நிர்ணயிக்கிற இறையாண்மையைக் கொண்டவர். யோபு, யோபு 30:23-ல் சாட்சியம் அளிக்கிறார், “சகல ஜீவாத்துமாக்களுக்கும் குறிக்கப்பட்ட தாவரமாகிய மரணத்துக்கு என்னை ஒப்புக்கொடுப்பீர் என்று அறிவேன்.” “ஆவியை விடாதிருக்கிறதற்கு ஆவியின்மேல் ஒரு மனுஷனுக்கும் அதிகாரமில்லை; மரணநாளின்மேலும் அவனுக்கு அதிகாரமில்லை; அந்தப் போருக்கு நீங்கிப்போவதுமில்லை; துன்மார்க்கரைத் துன்மார்க்கம் விடுவிக்கவுமாட்டாது” என்று பிரசங்கி 8:8 கூறுகிறது. மரணத்தைக் குறித்து தேவனுக்கு இறுதிக் கூற்று இருக்கிறது (1 கொரிந்தியர் 15:26, 54–56; எபிரெயர் 2:9, 14-15; வெளிப்படுத்துதல் 21:4 ஐக் காண்க). கருணைக்கொலை மற்றும் தற்கொலைக்கு உதவி செய்தல் ஆகியவை தேவனிடமிருந்து அந்த அதிகாரத்தைப் பறிக்கும் மனிதனின் முயற்சிகள் ஆகும்.

மரணம் என்பது இயற்கையான நிகழ்வு. சில நேரங்களில் மரணம் ஏற்படுவதற்கு முன்பு ஒரு நபரை நீண்ட காலம் அவர் துன்பப்பட வேண்டுமென தேவன் அனுமதிக்கிறார்; மற்ற நேரங்களில், ஒரு நபரின் துன்பம் மிகவும் குறைவான நிலையில் குறைக்கப்படுகிறது. எந்த ஒரு நபரும் துன்பத்தை அனுபவிக்க விரும்புவதில்லை, ஆனால் அதற்காக அது ஒரு நபர் இறக்க வேண்டும் என்பதை தீர்மானிப்பது சரியானதல்ல. பெரும்பாலும், தேவனுடைய நோக்கங்கள் துன்பத்தின் மூலம் அறியப்படுகின்றன. “வாழ்வுகாலத்தில் நன்மையை அநுபவித்திரு, தாழ்வுகாலத்தில் சிந்தனைசெய்; மனுஷன் தனக்குப்பின் வருவதொன்றையும் கண்டுபிடியாதபடிக்கு தேவன் இவ்விரண்டையும் ஒன்றுக்கொன்று எதிரிடையாக வைத்திருக்கிறார்” (பிரசங்கி 7:14). உபத்திரவம் பொறுமையையும், பொறுமை பரீட்சையையும், பரீட்சை நம்பிக்கையையும் உண்டாக்குகிறதென்று ரோமர் 5:3 கற்பிக்கிறது. மரணத்திற்காக கூக்குரலிடுவோர் மற்றும் அவர்களின் துன்பங்களை முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என்று விரும்புபவர்களைப் பற்றி தேவன் அக்கறை கொண்டிருக்கிறார். தேவன் வாழ்க்கையின் இறுதிவரையிலுள்ள நோக்கத்தை தருகிறார். மேலும், எது சிறந்தது என்பது தேவனுக்கு மட்டுமே தெரியும், ஒருவரின் இறப்பு விஷயத்தில் கூட அவருடைய நேரம் மட்டுமே சரியானது ஆகும்.

வாழ்க்கையை முன்கூட்டியே முடிவுக்கு கொண்டுவர நாம் ஒருபோதும் முயலக்கூடாது, அதற்காக ஒரு உயிரைப் பாதுகாக்க எந்த அசாதாரண வழிமுறைகளுக்கும் நாம் செல்லக்கூடாது. மரணத்தை தீவிரமாக விரைவுபடுத்துவதும் தவறு; சிகிச்சையை செயலற்ற முறையில் நிறுத்துவதும் தவறானது; ஆனால் ஒரு நோய்வாய்ப்பட்ட நபருக்கு இயற்கையாகவே மரணம் ஏற்படுவதை அனுமதிப்பது தவறல்ல. இந்த சிக்கலை எதிர்கொள்ளும் எவரும் ஞானத்திற்காக கடவுளிடம் ஜெபிக்க வேண்டும் (யாக்கோபு 1: 5). நாம் எல்லோரும் முன்னாள் அறுவை சிகிச்சை ஜெனரல் சி. எவெரெட் கூப், மருத்துவ பயிற்சியை/செயல்முறையானது "நம்மை குணமாக்குகிறதாகவும் மற்றும் நம்மை கொலைசெய்கிறதாகவும் இருக்கமுடியாது" என்று கூப் எச்சரித்தை நினைவில் கொள்ளவேண்டும் (from KOOP, The Memoirs of America’s Family Doctor by C. Everett Koop, M.D., Random House, 1991).

English



முகப்பு பக்கம்

கருணைக்கொலை / தற்கொலைக்கு உதவுதல் குறித்து வேதாகமம் என்ன சொல்லுகிறது?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries