settings icon
share icon
கேள்வி

மரணத்திற்கு பின்பு வாழ்வு உண்டா?

பதில்


லூக்கா 23:43-ல், “இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்” என்று இயேசு அறிவித்தார். "பரலோகம்" என்பதற்கு இயேசு பயன்படுத்திய வார்த்தை பாரடெய்சோஸ் (paradeisos) அதாவது "ஒரு பூங்கா, அதாவது (குறிப்பாக) ஒரு ஏதேன் (எதிர்கால மகிழ்ச்சிக்கான இடம், பரதீசு)". பாரடெய்சோஸ் என்பது எபிரேய வார்த்தையான பர்தேஸ் (pardes) என்பதிலிருந்து எடுக்கப்பட்ட கிரேக்க வார்த்தையாகும், இதன் பொருள் "ஒரு பூங்கா: - வனம், பழத்தோட்டம்" (ஸ்ட்ராங்’ஸ்). இயேசு சொன்னார், "இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பாரடெய்சோஸில் (en paradeisos) இருப்பாய்" மாறாக நெஃபெலேயில் (en nephele) இருப்பாய் என்றல்ல, இது "மேகங்களில்" என்பதற்கான கிரேக்க மொழிபெயர்ப்பாகும். இங்கே கவனிக்கத்தக்க முக்கிய விஷயம் என்னவென்றால், "ஒரு பூங்கா" என்று அர்த்தம் வருகிற வார்த்தையை இயேசு தேர்ந்தெடுத்து பயன்படுத்தினார். அது எந்த பூங்காவும் அல்ல, ஆனால் "தேவனுடைய பரதீசு" அல்லது தேவனுடைய பூங்கா (வெளிப்படுத்துதல் 2:7) இது நமக்கு எதிர்கால மகிழ்ச்சியின் இடமாக இருக்கும். இது சலிப்பூட்டும் இடம் போல் இருக்கிறதா? நீங்கள் ஒரு பூங்காவை நினைக்கும் போது, நீங்கள் சலிப்பானது என்று நினைக்கிறீர்களா?

"உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக" (மத்தேயு 4:10) என்று இயேசு கூறினார். இங்கே "துதித்து ஆராதனை செய்" என்று இயேசு கூறவில்லை என்பது மிகவும் சுவாரஸ்யமானது. வேதாகமத்தில் உள்ள துதி என்ற வார்த்தையின் மிகவும் சுருக்கமான ஆய்வுக் கூட அது ஒரு வாய்மொழி செயல் மற்றும் பெரும்பாலும் பாடுவது என்பதைக் காட்டுகிறது. இருப்பினும், ஆராதனை இருதயத்தில் இருந்து வருகிறது. ஆராதனை துதியில் வெளிப்படுகிறது. தேவனை ஆராதிப்பது, நாம் பரலோகத்தில் தேவனைச் சேவிப்போம் என்று வேதம் தெளிவாக கூறுகிறது. "அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவித்து, அவருடைய சமுகத்தைத் தரிசிப்பார்கள்" (வெளிப்படுத்துதல் 22:3).

பாவத்தின் காரணமாக இந்த வாழ்க்கையில் நாம் தேவனுக்கு முழுமையாக சேவை செய்ய முடியாது, ஆனால் பரலோகத்தில் "இனி ஒரு சாபமுமிராது" (வெளிப்படுத்துதல் 22:3). நாம் இனி பாவத்தின் சாபத்திற்கு ஆளாக மாட்டோம், எனவே நாம் பரலோகத்தில் செய்வதெல்லாம் அவரை ஆராதிப்பதேயாகும். தேவன் மீதுள்ள அன்பைத் தவிர வேறு எதனாலும் நாம் ஒருபோதும் தூண்டப்பட மாட்டோம். நாம் செய்யும் அனைத்தும் தேவன் மீதுள்ள அன்பினால் மட்டுமே இருக்கும், அது நம் பாவச் சுபாவத்தால் கறைபடாமல் இருக்கும்.

அப்படியானால் நாம் பரலோகத்தில் என்ன செய்வோம்? ஒரு காரியம் என்னவெனில், அங்கே நாம் கற்றுக்கொள்வோம். "கர்த்தருடைய சிந்தையை அறிந்தவன் யார்? அவருக்கு ஆலோசனைக்காரனாயிருந்தவன் யார்?" (ரோமர் 11:34), "அவருக்குள் ஞானம் அறிவு என்பவைகளாகிய பொக்கிஷங்களெல்லாம் அடங்கியிருக்கிறது" (கொலோசெயர் 2:3). தேவன் "மகத்துவமும் உன்னதமுமானவர்" (ஏசாயா 57:15). தேவன் என்றென்றும் பெரியவர், மேலும் அது "சகல பரிசுத்தவான்களோடுங்கூடக் கிறிஸ்துவினுடைய அன்பின் அகலமும், நீளமும், ஆழமும், உயரமும் இன்னதென்று உணர்ந்து; அறிவுக்கெட்டாத அந்த அன்பை அறிந்துகொள்ள" நித்தியம் எடுக்கும் (எபேசியர் 3:18-19). வேறு வார்த்தைகளில் கூறுவதானால், நாம் கற்றுக்கொள்ளுதலை நிறுத்த மாட்டோம்.

நாம் அவருடைய பரதீசுவில் மட்டும் இருக்க மாட்டோம் என்று தேவனுடைய வார்த்தைக் கூறுகிறது. "இப்பொழுது நான் குறைந்த அறிவுள்ளவன், அப்பொழுது நான் அறியப்பட்டிருக்கிறபடியே, அறிந்துகொள்ளுவேன்" (1 கொரிந்தியர் 13:12). இது நம் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை மட்டும் தெரிந்து கொள்வோம் என்றில்லாமல், அவர்களை "முழுமையாக அறிவோம்" என்பதைக் குறிக்கிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பரலோகத்தில் இரகசியங்கள் தேவையில்லை. இதில் வெட்கப்பட ஒன்றுமில்லை. மறைப்பதற்கு எதுவும் இல்லை. "சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைகளிலிருமிருந்து வந்ததும், ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்களுடன்" தொடர்புகொள்வதற்கான நித்தியம் நமக்கிருக்கும் (வெளிப்படுத்துதல் 7:9). பரலோகம் எல்லையற்ற கற்றலின் கல்வியின் இடமாக இருப்பதில் ஆச்சரியமில்லை. எல்லோரையும் தெரிந்துகொள்வது நித்தியத்தை எடுக்கும்!

தேவனுடைய நித்திய பூங்காவான பரலோகத்தில் நாம் என்ன செய்வோம் என்பது பற்றிய எந்த எதிர்பார்ப்பும் மிக அதிகமாகவே இருக்கும், "அப்பொழுது, ராஜா தமது வலது பக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து: வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானதுமுதல் உங்களுக்காக ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிற ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள்" (மத்தேயு 25:34) என்பார். நாம் என்ன செய்தாலும், அது நம் கற்பனைகளுக்கு அப்பாற்பட்ட அற்புதமாக இருக்கும் என்று உறுதியாக நம்பலாம்!

English



முகப்பு பக்கம்

மரணத்திற்கு பின்பு வாழ்வு உண்டா?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries