தேவன் எல்லோரையும் நேசிக்கிறாரா அல்லது கிறிஸ்தவர்களை மட்டும் நேசிக்கிறாரா?


கேள்வி: தேவன் எல்லோரையும் நேசிக்கிறாரா அல்லது கிறிஸ்தவர்களை மட்டும் நேசிக்கிறாரா?

பதில்:
ஒரு வகையில் பார்த்தோமானால் உலகிலுள்ள அனைவரையும் தேவன் நேசிக்கிறார் (யோவான் 3:16; 1 யோவான் 2:2; ரோமர் 5:8). இந்த அன்பு நிபந்தனையுள்ளதல்ல – அது தேவனுடைய குணாதிசயமாக இருக்கிறது, அதன் அடிப்படையில் அவர் ஒரு அன்பின் தேவனாக இருக்கிறார் (1 யோவான் 4:8, 16). எல்லோருக்கும் தேவனுடைய அன்பு இருக்கிறது என்பது அவருடைய "இரக்கமுள்ள அன்பாக" கருதப்படுகிறது, ஏனென்றால் தேவன் உடனடியாக ஜனங்களை அவர்களுடைய பாவங்களுக்காக தண்டிக்கவில்லை என்கிற சத்தியத்தைக் காண்பிக்கிறது (ரோமர் 3:23; 6:23). “பரலோகத்திலிருக்கிற உங்கள் பரம பிதா...தீயோர் மேலும் நல்லோர் மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள் மேலும் அநீதியுள்ளவர்கள் மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார்” (மத்தேயு 5:45). இது அனைவருக்குமுள்ள தேவனுடைய அன்பின் மற்றொரு உதாரணம் – அவருடைய இரக்கமுள்ள அன்பு, அவருடைய தாராளமான இரக்கத்தை அனைவருக்கும் நீட்டிகிறார், கிறிஸ்தவர்களுக்கு மட்டுமல்ல.

உலகின்மேல் இருக்கிற தேவனுடைய இரக்கமுள்ள அன்பு, தேவன் அவர்கள் மனந்திரும்ப வாய்ப்பு கொடுக்கிறது என்பதை வெளிப்படுத்தப்பட்டுள்ளது: “தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்” (2 பேதுரு 3:9). தேவனுடைய நிபந்தனையற்ற அன்பு இரட்சிப்பிற்காக அவரது பொதுவான அழைப்புடன் தொடர்புள்ளதாகவும் மற்றும் பெரும்பாலும் அவரால் அனுமதிக்கப்பட்ட அல்லது பரிபூரண சித்தம் – அது அவரது விருப்பம் என்னவென்பதை வரையறுக்கிறதாகவும் மற்றும் அவரது சுபாவத்தை வெளிப்படுத்துகிறதுமான தேவனுடைய சித்தத்தின் அம்சமாக இருக்கிறது.

இருப்பினும், தேவனுடைய அன்பு அனைவருக்கும் உள்ளது என்பதற்காக எல்லோரும் இரட்சிக்கப்படுவார்கள் என்று அர்த்தமில்லை (மத்தேயு 25:46). தேவன் பாவத்தை கண்டுகொள்ளாமல் விட்டுவிட மாட்டார், ஏனென்றால் அவர் நீதியுள்ள தேவனாக இருக்கிறார் (2 தெசலோனிக்கேயர் 1:6). பாவம் என்றென்றைக்குமாய் தண்டனைப்பெறாமல் போவதில்லை (ரோமர் 3:25-26). தேவன் வெறுமனே பாவத்தை ஒரு பொருட்டாக கருதாமல் புறக்கணித்து அதை நிரந்தரமாக விட்டு பேரழிவை தொடர்ந்து அனுமதிப்பாரானால், அவர் அன்புள்ளவராக இருக்கமுடியாது. தேவனுடைய இரக்கமுள்ள அன்பை புறக்கணித்து, கிறிஸ்துவை நிராகரித்து அல்லது நம்மை இரட்சிக்கிற இரட்சகரை மறுதலிக்கும் (2 பேதுரு 2:1) செயல் நித்தியமாக தேவனுடைய கோபத்திற்கு நம்மை கீழ்ப்படுத்துகிறோம் (ரோமர் 1:18), அவருடைய அன்பிற்கு அல்ல.

பாவிகளை நீதிமானாக்கும் தேவனுடைய அன்பு எல்லோருக்கும் நீட்டிக்கப்படவில்லை, அது இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிறவர்களுக்கு மட்டுமே (ரோமர் 5:1). ஜனங்களை தம்மோடு நெருக்கமாக உள்ள தொடர்பிற்கு கொண்டுவருகிற தேவனுடைய அன்பு எல்லோருக்கும் நீட்டிக்கப்படாது, அது தேவனுடைய குமாரனை நேசிக்கிறவர்களுக்கு மட்டுமே (யோவான் 14:21). இந்த அன்பை தேவனுடைய "உடன்படிக்கையின் அன்பாக" கருதலாம், அதாவது இயேசுவின் இரட்சிப்புக்காக அவரில் விசுவாசம் வைப்பவர்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்ட நிபந்தனை இதிலடங்கும் (யோவான் 3:36). கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவில் விசுவாசிக்கிறவர்கள் நிபந்தனையற்ற, பாதுகாப்பான, என்றென்றுமுள்ள நேசத்தால் நேசிக்கப்படுகிறார்கள்.

தேவன் எல்லோரையும் நேசிக்கிறாரா? ஆம், அவர் எல்லோருக்கும் தமது இரக்கம் மற்றும் கருணையைக் காண்பிக்கிறார். தேவன் கிறிஸ்தவரல்லாதவர்களை நேசிப்பதைக்காட்டிலும் கிறிஸ்தவர்களை அதிகம் நேசிக்கிறாரா? அவருடைய இரக்கமுள்ள அன்பைப் பொறுத்தமட்டில், இல்லை. தேவன் கிறிஸ்தவரல்லாதவர்களை நேசிப்பதைப்போலில்லாமல் கிறிஸ்தவர்களை வேறு விதத்தில் நேசிக்கிறாரா? ஆம்; விசுவாசிகள் தேவனுடைய குமாரனில் தங்கள் விசுவாசத்தை வைத்திருக்கிறார்கள், அவர்கள் இரட்சிக்கப்பட்டவர்கள். தேவன் கிறிஸ்தவர்களோடு பிரத்யே உறவைக் கொண்டிருக்கிறார், அதில் தேவனுடைய நித்திய கிருபையின் அடிப்படையில் கிறிஸ்துவர்கள் மட்டுமே மன்னிப்பை பெற்றிருக்கிறார்கள். அனைவருக்கும் தேவன் கொண்டிருக்கிற நிபந்தனையற்ற, இரக்கமுள்ள அன்பு எல்லோரையும் விசுவாசத்திற்குக் கொண்டுவரவேண்டும், நிபந்தனையுள்ள நன்றியறிவுள்ள நிலையில் ஏற்றுக்கொள்ளவேண்டும், இயேசு கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக்கொள்பவர்களுக்கு அவர் உடன்படிக்கையின் அன்பை அளிக்கிறார்.

English


முகப்பு பக்கம்
தேவன் எல்லோரையும் நேசிக்கிறாரா அல்லது கிறிஸ்தவர்களை மட்டும் நேசிக்கிறாரா?