நான் விவாகரத்து ஆனவன்/ஆனவள். வேதத்தின் படி நான் மறுமணம் செய்துக்கொள்ளலாமா?


கேள்வி: நான் விவாகரத்து ஆனவன்/ஆனவள். வேதத்தின் படி நான் மறுமணம் செய்துக்கொள்ளலாமா?

பதில்:
கீழ்க்கானும் கேள்விகள் அநேக நேரம் நம்மிடத்தில் கேட்கப்படுகின்றன. “இன்னின்ன காரணத்தினால் நான் விவாகரத்து அடைந்தேன். நான் மீண்டும் திருமணம் செயல்லாமா? “நான் இரண்டு முறை விவாகரத்து பெற்றவள்—முதல் முறை என் புருஷனின் வேசித்தனத்தினால், இரண்டாவது முறை கறுத்து வேறுபாடுகளினால் விவாகரத்து அடைந்தேன். இப்போது நான் ஒரு நபரை காதலிக்கிறேன் அவர் மூன்று முறை விவாகரத்து பெற்றவர்— முதல் முறை வேறுபாடுகாளினால், இரண்டாவது முறை அவரின் வேசித்தனத்தினால், மூன்றாவது முறை அவரது மனைவியின் வேசித்தனத்தினால் விவாகரத்து பெற்றவர். நாங்கள் இருவரும் மறுமணம் செய்துக்கொள்ளலாமா?” இப்படிப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிப்பது மிகவும் கடினமானது, ஏனென்றால் விவகரத்திற்கு பிறகு மருமணம் செய்துகொள்வதை பற்றிய விவரங்கள் வேதத்தில் இல்லை.

திருமணமான தம்பதியினர் அவர்கள் உயிரோடிருக்கும் வரை இணைந்து தான் வாழவேண்டும் என்பதே தேவ திட்டம் என்பதை நாம் நிச்சயமாக அறிந்திருக்கிறோம் (ஆதியாகமம் 2:24; மத்தேயு 19:6). வேசித்தனத்தின் காரணமாக மாத்திரம் விவாகரத்து செய்யலாம் என்று வேதத்தில் கூறப்பட்டிருக்கிறது (மத்தேயு 19:9), ஆனால் இதை பற்றியும் கிறிஸ்தவர்கள் விவாதிக்கின்றார்கள். ஒரு அவிசுவாசியான கணவன்/மனைவி தன்னை விட்டு போனால் (1 கொரிந்தியர் 7:12—15) அந்த நபர் மீண்டும் திருமணம் செய்துக்கொள்ளலாம். ஆனாலும் இந்த வேத பகுதி மறுமணம் செய்துகொள்வதை பற்றி ஒன்று சொல்லவில்லை; அந்த திருமணத்திறக்கு உட்பட்டிருப்பதை குறித்து மட்டும் சொல்லுகிறது. சரீரத்தில், பாலியல் உறவில், அல்லது மனோரீதியாக கொடுமைப்படுத்தபடுகிறவர்கள் பிரிந்து போகவேண்டும் என்றால் அப்படி பிரிந்து போகலாம், ஆனால் இந்த பாவங்களை குறித்து விவாகரத்து அல்லது மறுமணம் செய்வதை பற்றி வேதத்தில் எங்கும் கூறவில்லை.

இரண்டு காரியங்கள் நமக்கு நன்றாக தெரியும். தேவன் விவாகரத்தை வெறுக்கிறார்(மல்கியா 2:16), மற்றும் தேவன் கிருபை உள்ளவரும் மன்னிக்கிறவருமாக இருக்கிறார். எல்லா விவாகரத்தும் பாவத்தினால் உண்டாகின்றன: கணவன் அல்லது மணைவி பாவம் செய்திருக்கலாம், அல்லது இருவரும் பாவம் செய்திருக்கலாம். தேவன் விவாகரத்தை மன்ணிப்பாரா? நிச்சயமாக மன்னிப்பார்! எல்லா பாவங்களும் மன்னிக்கப்படுவது போல, விவாகரத்தையும் தேவன் மன்னிப்பார். கிறிஸ்து இயேசுவின் மேலுள்ள விசுவாசத்தினால் எல்லா பாவங்களும் மன்னிக்கப்படுகின்றன (மததேயு 26:28; எபேசியர் 1:7). தேவன் விவாகரத்தை மன்னிப்பதினால், நாம் மறுமணம் செய்துகொள்ள சுதந்திரம் உண்டா? அப்படி இருக்க அவசியம் இல்லை. சிலரை தனித்திருக்க தேவன் அழைத்திருக்கிறார் (1 கொரிந்தியர் 7:7-8). தனித்திருப்பதை ஒரு சாபமாகவோ தண்டனையாகவோ என்ன கூடாது, அது தேவனை முழு உள்ளத்தோடு சேவிக்க ஒரு தருணமாக நினைக்க வேண்டும் (1 கொரிந்தியர் 7:32-36). இச்சிப்பதை பார்க்கிலும் திருமணம் செய்துகொள்வது நல்லது என்று வேதம் சொல்லுகிறது (1 கொரிந்தியர் 7:9). இந்த வார்த்தை விவாகரதிற்கு பிறகு மறுமணம் செய்வதற்கும் பொருந்தலாம்.

நீங்கள் மறுமணம் செய்துக்கொள்ளலாமா? நாம் இந்த கேள்விக்கு பதில் அளிக்க முடியாது. அது, உங்களுக்கும், நீங்கள் மறுமணம் செய்ய இருக்கும் நபருக்கும், மற்றும் மிக முக்கியமாக தேவனுக்கும் சம்மந்தபட்ட காரியம். நாங்கள் உங்களுக்கு கொடுக்கும் அறிவுரை என்னவென்றால், இந்த விஷயத்தில் என்ன செய்ய வேண்டும் என்று தேவன் விரும்புகிறார் என்ற ஞானம் பெற்றுக்கொள்ள ஜெபியுங்கள் (1 கொரிந்தியர் 7:9). திறந்த மனதோடே ஜெபியுங்கள் மற்றும் தேவ விருப்பங்களை தேவன் உங்கள் இருதயத்தில் வைக்கும்படி அவரிடம் உண்மையாக கேளுங்கள் (சங்கீதம் 37:4). தேவ சித்தத்தை நாடுங்கள் (நீதிமொழிகள் 3:5-6) மற்றும் அவர் நடத்துதலை பின்பற்றுங்கள்.

English
தமிழ் முதற் பக்கத்திற்குச் செல்க
நான் விவாகரத்து ஆனவன்/ஆனவள். வேதத்தின் படி நான் மறுமணம் செய்துக்கொள்ளலாமா?