settings icon
share icon
கேள்வி

திறமை மற்றும் ஆவிக்குரிய வரத்திற்குள்ள வித்தியாசம் என்ன?

பதில்


திறமைகளுக்கும் ஆவிக்குரிய வரங்களுக்கும் இடையில் ஒற்றுமைகள் மற்றும் வேறுபாடுகள் உள்ளன. இரண்டும் தேவனிடமிருந்து வந்த ஈவுகளாகும். இரண்டும் பயன்பாட்டுடன் செயல்படுகின்றன. சுயநல நோக்கங்களுக்காக அல்லாமல், மற்றவர்களுடைய பயனுக்காக இரண்டும் பயன்படுத்தப்பட வேண்டும். ஆவிக்குரிய வரங்கள் நமக்காக அல்ல மற்றவர்களுக்கு பயனளிக்கும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது என்று 1 கொரிந்தியர் 12:7 கூறுகிறது. இரண்டு பெரிய கட்டளைகள் தேவனையும் பிறரையும் அன்புகூறும் வகையில் நடந்துகொள்கையில், ஒருவர் தன்னுடைய திறமைகளை அந்த நோக்கங்களுக்காக பயன்படுத்த வேண்டும் என்பதைப் பின்பற்றுகிறது. ஆனால் யாருக்கு, எப்போது, திறமைகள் மற்றும் ஆவிக்குரிய வரங்கள் வித்தியாசப்படுத்தப்படுகிறது. ஒரு நபருக்கு (அவர் தேவனில் அல்லது கிறிஸ்துவில் நம்பிக்கை கொண்டுள்ளாரா என்பதை பொருட்படுத்தாது) இருக்கிற இயல்பான திறமை கொடுக்கப்பட்டுள்ளது அவரது மரபணு வழியாக வருவதன் விளைவாகும் (சிலர் இசை, கலை அல்லது கணிதத்தில் இயல்பான திறனைக் கொண்டுள்ளனர்) மற்றும் சூழலில் (ஒரு இசைக் குடும்பத்தில் வளரும் ஒருவர் இசையில் தன் திறமை வளர்ப்பதில் ஒன்று), அல்லது தேவன் சில திறமைகளை சில தனிநபர்கள் சாதிக்க வேண்டும் என்பதால் அளிப்பது (உதாரணமாக, யாத்திராகமம் 31:1-6ல் கூறப்பட்டுள்ள பெசலெயேல்). ஆவிக்குரிய வரங்கள் பரிசுத்த ஆவியானவர் மூலம் எல்லா விசுவாசிகளுக்கும் அளிக்கப்படுகிறது (ரோமர் 12:3, 6), அந்த நேரத்தில் அவர்கள் தங்கள் பாவங்களை மன்னிப்பதற்காக கிறிஸ்துவை விசுவாசிக்கிறார்கள். அந்த நேரத்தில், பரிசுத்த ஆவியானவர் புதிய விசுவாசிக்கு ஆவிக்குரிய வரத்தை அவர் விரும்புகிறபடி கொடுக்கிறார் (1 கொரிந்தியர் 12:11).

ரோமர் 12:3-8ல் பின்வருமாறு ஆவிக்குரிய வரங்கள் பட்டியலிடப்படுகிறது: தீர்க்கதரிசனம், பிறரை சேவித்தல், போதித்தல், அறிவுரை செய்தல், தாராள குணம், தலைமைத்துவம், இரக்கம் காட்டுதல். 1 கொரிந்தியர் 12:8-11 வரையிலுள்ள வசனங்களில், ஞானம் (ஆவிக்குரிய ஞானத்தைத் தெரிவித்தல்), அறிவு (நடைமுறை சத்தியத்தைத் தெரிவிப்பது), விசுவாசம் (தேவன் மீது அசாதாரண நம்பிக்கை), அற்புதங்கள், தீர்க்கதரிசனம், ஆவிககளை பகுத்தறிதல், அந்நியபாஷை (தான் அறிந்திராத மொழியில் பேசும் திறன்), மற்றும் அந்நியபாஷையில் பேசுவதற்கான விளக்கம் ஆகியவற்றைக் கண்டறிதல். மூன்றாவது பட்டியல் எபேசியர் 4:10-12 ல் காணப்படுகிறது, இது தேவன் அவருடைய சபைக்கு கொடுத்த அப்போஸ்தலர்கள், தீர்க்கதரிசிகள், சுவிசேஷகர்கள் மற்றும் மேய்ப்பர்கள்-போதகர்கள் ஆகியோர் அடங்கும். எத்தனை ஆவிக்குரிய வரங்கள் உள்ளன என்பதிலும் ஒரு கேள்வி உள்ளது, ஏனெனில் இரண்டு பட்டியல்களும் ஒரே மாதிரி இல்லை. வேதாகம பட்டியல்கள் முழுமையாக இல்லை, வேதாகமத்தில் குறிப்பிட்டுள்ளதற்கு அப்பால் கூடுதலான ஆவிக்குரிய வரங்கள் இருக்கின்றன என்பதும் சாத்தியமாகும்.

ஒருவர் தன்னுடைய திறமைகளை வளர்த்துக் கொண்டு, பின்னர் அவரது தொழில் அல்லது பொழுதுபோக்காக அதனை வழிநடத்திக்கொள்ளலாம், ஆவிக்குரிய வரங்கள் பரிசுத்த ஆவியினால் கிறிஸ்துவின் சபையைக் கட்டியெழுப்புவதற்கு கொடுக்கப்பட்டதாகும். இதில் கிறிஸ்தவர்கள் அனைவரும் கிறிஸ்துவின் நற்செய்தியை மேம்படுத்துவதில் பங்கு வகிக்கிறார்கள். அனைத்து "ஊழியத்தின் வேலை" (எபேசியர் 4:12) சம்பந்தமாக அழைக்கப்படுவதுடன், பொருத்தப்படவும் வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக பரிசுத்த ஆவியானவர் கிறிஸ்துவுக்குள்ளாக அவர் செய்த அனைவருக்குமே நன்றியுணர்வைக் கொடுத்தார். அவ்வாறு செய்வதன் மூலம், கிறிஸ்துவிற்காக வேலை செய்வதன் மூலம் அவர்கள் வாழ்க்கையில் பூர்த்தி செய்யப்படுகிறார்கள். பரிசுத்தவான்களை வளர்ப்பதற்கு உதவி செய்யும் சபைத் தலைவர்களின் வேலை இது, தேவன் அவர்களை அழைத்திருக்கும் ஊழியத்திற்காக இன்னும் கூடுதலாகப் பயன்படுத்த முடியும். ஆவிக்குரிய வரங்களை நோக்கமாகக் கொண்டது என்னவெனில், சபை முழுவதுமாக வளர்ந்து, கிறிஸ்துவின் சரீரத்தின் ஒவ்வொரு அங்கத்தினரிடமும் ஒருங்கிணைந்த கொடுத்தல் மூலம் பலப்படுத்தப்படுகிறது.

ஆவிக்குரிய வரங்கள் மற்றும் திறமைகளுக்கு இடையிலான வேறுபாடுகளை சுருக்கமாக கூறுவோமானால்: 1) திறமை ஒரு மரபியல் மற்றும் / அல்லது பயிற்சியின் விளைவு ஆகும், அதே சமயம் ஆவிக்குரிய வரங்கள் பரிசுத்த ஆவியின் வல்லமையினால் அருளப்படுகிறதாக இருக்கிறது. 2) தாலந்து அல்லது திறமையானது கிறிஸ்தவர்கள் மற்றும் அவிசுவாசிகள் என யாராலும் அடையமுடியும், ஆவிக்குரிய வரங்கள் கிறிஸ்தவர்களால் மட்டுமே அடைய முடியும். 3) தாலந்துகள் மற்றும் ஆவிக்குரிய வரங்கள் தேவனுடைய மகிமைக்காகவும் மற்றவர்களுக்கு சேவை செய்யும்போதும் பயன்படுத்துகிறதாய் இருக்க, ஆவிக்குரிய வரங்கள் இந்த பணிகள் மீது கவனம் செலுத்துகின்றன, அதே நேரத்தில் தாலந்துகளை ஆவிக்குரிய நோக்கங்களுக்கு அல்லாதவைகளுக்கு முழுமையாக பயன்படுத்தலாம்.

English



முகப்பு பக்கம்

திறமை மற்றும் ஆவிக்குரிய வரத்திற்குள்ள வித்தியாசம் என்ன?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries