settings icon
share icon
கேள்வி

பழைய ஏற்பாடு vs புதிய ஏற்பாடு - வேறுபாடுகள் என்ன?

பதில்


வேதாகமம் ஒரு ஐக்கியப்பட்ட புத்தகம் என்றாலும், பழைய ஏற்பாட்டிற்கும் புதிய ஏற்பாட்டிற்கும் இடையில் வேறுபாடுகள் உள்ளன. பல வழிகளில், அவைகள் ஒன்றுக்கொன்று நிரப்புகின்றன. பழைய ஏற்பாடு அடித்தளம்; புதிய ஏற்பாடு அந்த அஸ்திவாரத்தில் தேவனிடமிருந்து வரும் வெளிப்பாட்டிலிருந்து கட்டி எழுப்புகிறது. பழைய ஏற்பாட்டில் புதிய ஏற்பாட்டு சத்தியங்களை எடுத்துக்காட்டுவதாக இருக்கும் கொள்கைகளை நிறுவுகிறது. புதிய ஏற்பாட்டில் நிறைவேறும் பல தீர்க்கதரிசனங்கள் பழைய ஏற்பாட்டில் உள்ளன. பழைய ஏற்பாடு மக்களுடைய வரலாற்றை வழங்குகிறது; புதிய ஏற்பாட்டின் பார்வை முழுவதும் ஒரு நபர் மீது உள்ளது. பழைய ஏற்பாட்டில் பாவத்திற்கு எதிராக தேவனின் கோபத்தை காட்டுகிறது (சிறிதளவு அவரது கருணையும்); புதிய ஏற்பாடு பாவிகளுக்கு தேவனுடைய கிருபையைக் காட்டுகிறது (சிறிதளவு அவரது கோபத்தையும்).

பழைய ஏற்பாடு மேசியா வருவார் என்று முன்னுரைக்கிறது (ஏசாயா 53-ஐ பார்க்கவும்), மேசியா யார் என்று புதிய ஏற்பாடு வெளிப்படுத்துகிறது (யோவான் 4:25-26). பழைய ஏற்பாடு தேவனுடைய நியாயப்பிரமாணம் கொடுக்கப்படுதலையும், புதிய ஏற்பாடு மேசியாவாகிய இயேசு நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுதளையும் குறிப்பிடுகிறது (மத்தேயு 5:17; எபிரெயர் 10:9). பழைய ஏற்பாட்டில், தேவனுடைய இடைபடுதலும் செயல்களும் முக்கியமாக அவரால் தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்களான யூதர்களோடு இருந்தது; புதிய ஏற்பாட்டில், தேவனின் செயல்கள் பிரதானமாக அவருடைய திருச்சபையோடு உள்ளன (மத்தேயு 16:18). பழைய உடன்படிக்கையின் கீழ் சரீரப்பிரகாரமான ஆசிர்வாதங்களும் (ஆதியாகமம் 29:9), புதிய உடன்படிக்கையின் கீழ் ஆவிக்குரிய ஆசீர்வாதங்களும் அருளப்பட்டுள்ளன (எபேசியர் 1:3).

பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசனங்கள், கிறிஸ்துவின் வருகை சம்பந்தமாக மிகவும் விரிவானவை என்றாலும், சில தெளிவின்மையை கொண்டிருக்கிறது, ஆனாலும் புதிய ஏற்பாட்டில் அது தெளிவைக் கொண்டிருக்கிறது. உதாரணமாக, ஏசாயா தீர்க்கதரிசி மேசியாவின் மரணத்தை (ஏசாயா 53) மற்றும் மேசியாவின் ராஜ்யத்தை (ஏசாயா 26) ஸ்தாபிக்கிறார், இரண்டு சம்பவங்களின் காலவரிசையைப் பற்றிய குறிப்புகள் எதுவும் இல்லை - துன்பமும் ராஜ்யம் கட்டப்படலும் ஆயிரம் ஆண்டுகளினால் பிரிக்கப்பட வேண்டும் என்பதைக் குறித்த ஒரு குறிப்பும் இல்லை. புதிய ஏற்பாட்டில், மேசியாவை இரண்டு வருகைகளைக் கொண்டிருப்பார் என்பது தெளிவாகிறது: முதலாவது அவர் துன்பப்பட்டு மற்றும் மரித்தார் (மற்றும் மீண்டும் உயர்த்தெழுந்தார்), இரண்டாவதாக அவர் தனது ராஜ்யத்தை ஸ்தாபிப்பார்.

வேதாகமத்தில் தேவனுடைய வெளிப்பாடு முற்போக்கானதாக முன்னேறுகிற நிலையில் இருப்பதால், புதிய ஏற்பாடு பழைய ஏற்பாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட கொள்கைகளில் தெளிவான கவனம் கொண்டு வருகிறது. இயேசு எப்படி பிரதான ஆசாரியராக இருக்கிறார் என்பதை எபிரெயர் புத்தகம் விவரிக்கிறது. அவருடைய ஒரே பலி எல்லா முந்திய பலிகளையும் எவ்வாறு மாற்றுகிறது போன்றவைகளுக்கு இவை வெறும் முன்நோக்குகளாக இருந்தன. பழைய ஏற்பாட்டின் பஸ்கா ஆட்டுக்குட்டி (எஸ்றா 6:20) புதிய ஏற்பாட்டில் தேவ ஆட்டுக்குட்டி (யோவான் 1:29) ஆகிறது. பழைய ஏற்பாடு நியாயப்பிரமாணத்தைக் கொடுக்கிறது. புதிய ஏற்பாடு நியாயப்பிரமாணம் மனிதர்களுக்கு இரட்சிப்பு தேவை என்பதையும், இரட்சிப்பின் வழிமுறையாக கருதப்படவில்லை என்றும் விளக்குகிறது (ரோமர் 3:19).

பழைய ஏற்பாடு ஆதாமினால் இழக்கப்பட்ட பரதீசுவை காண்கிறது; இரண்டாவது ஆதாமினால் (கிறிஸ்து) எவ்வாறு பரதீசு திரும்பப்பெறுகிறது என்று புதிய ஏற்பாடு காட்டுகிறது. பழைய ஏற்பாடு மனிதன் பாவதின் மூலம் தேவநிடமிருந்து பிரிக்கப்பட்டான் என்று கூறுகிறது (ஆதியாகமம் 3), புதிய ஏற்பாடு மனிதன் தேவனுடன் தனது உறவு மீண்டும் புதுப்பிக்க முடியும் என்று அறிவிக்கிறது (ரோமர் 3-6). பழைய ஏற்பாடு மேசியாவின் வாழ்க்கையை முன்னறிவித்தது. சுவிசேஷங்கள் இயேசுவின் வாழ்க்கையை பதிவு செய்கின்றன, மற்றும் நிருபங்கள் அவருடைய வாழ்க்கையை விளக்குகின்றன, அவர் செய்த அனைத்தையும் எவ்வாறு பிரதிபலிப்போம் என்பதையும் காண்பிக்கின்றன.

சுருக்கமாக, பழைய ஏற்பாடு உலகின் பாவங்களுக்காக தன்னையே பலியாக கொடுப்பார் என்று மேசியா வருவதற்கு அடித்தளமாக அமைகிறது, (1 யோவான் 2:2). புதிய ஏற்பாடு இயேசு கிறிஸ்துவின் ஊழியத்தை பதிவுசெய்துகொண்டு, அவர் செய்ததைப் பின்னாக பார்த்து, நாம் எப்படி மாறுத்திரம் அளிக்கிறோம் என்பதைப் பார்க்கிறோம். இரண்டு ஏற்பாடுகளும் ஒரே பரிசுத்த, இரக்கமுள்ள, பாவத்தைக் கண்டிக்கிற நீதியுள்ள தேவனை வெளிப்படுத்துகின்றன. இரண்டு ஏற்பாடுகளிலும், தேவன் தம்மை நமக்கு வெளிப்படுத்துகிறார் என்றும், விசுவாசத்தின் மூலமாக நாம் எப்படி அவரிடத்தில் வரவேண்டும் என்றும் நமக்குக் காட்டுகிறது (ஆதியாகமம் 15:6; எபேசியர் 2:8).

English



முகப்பு பக்கம்

பழைய ஏற்பாடு vs புதிய ஏற்பாடு - வேறுபாடுகள் என்ன?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries