இயேசு உண்மையாகவே வாழ்ந்தாரா? அதற்கு வரலாற்றுச் சான்று உள்ளதா?


கேள்வி: இயேசு உண்மையாகவே வாழ்ந்தாரா? அதற்கு வரலாற்றுச் சான்று உள்ளதா?

பதில்:
இந்த கேள்வி கேட்கப்படும்போதே இதை கேட்கிறவர் வேதத்திற்கு புறம்பாகத்தான் கேட்கிறார். வேதம்தான் இயேசு வாழ்ந்ததற்கான சான்று. இதையெல்லாமல் வேறு கருத்தை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. புதிய ஏற்பாடு நூற்றுக்கும் மேற்பட்ட மேற்கோள்களைக் காட்டுகிறது. சிலர் சுவிஷேச புத்தகங்களை இரண்டாம் நூற்றாண்டில் அதாவது கிறிஸ்துவின் மரணத்திற்கு நூறு ஆண்டுகள் கழித்துதான் எழுதப்பட்டது என்று கூறுகிறார்கள். இது இப்படியாக இருந்தாலும் ( நாம் அதை முழுவதுமாக எதிர்கிறோம்). பண்டையக் காலச் சான்றுகளை வைத்து பார்க்கும்போது, இயேசுவின் சிலுவைக்கு இருநூறு ஆண்டுகளுக்குப்பின் எழுதப்பட்ட காரியங்களை நம்பப்படுகிற சான்றுகளாக நாம் எடுத்துக் கொள்ள முடியாது. மேலும் பெரும்பாலான அறிஞர்கள் (கிறிஸ்தவர்கள் மற்றும் கிறிஸ்தவரல்லாதவர்கள்) பவுலின் நிருபங்களை பவுல் முதலாம் நூற்றாண்டில், அதாவது இயேசு மரித்ததிலிருந்து நாற்பது ஆண்டுகளுக்கு முன்பாகத் தான் எழுதியிருக்க வேண்டும் என்று ஒத்துக்கொள்கிறார்கள். பண்டைக்காலத்தில் எழுதி வைக்கப்பட்ட சான்றுகளின்படி, இயேசு என்ற பெயர் கொண்ட ஒரு மனிதன் இஸ்ரவேலில் முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்தார் என்பதற்கு வலுவானச் சான்றுகள் உள்ளது.

கி.பி. 70-தில் ரோமர்கள் படையெடுத்து எருசலேம் மற்றும் இஸ்ரவேல் முழுவதையும் அழித்தார்கள். அதில் வாழந்தவர்களையும் கொன்றுப் போட்டார்கள். பட்டணங்கள் தரைமட்டமாய் தீக்கிரையாக்கப் பட்டது. இயேசு வாழந்ததற்கான சான்றுகள் அழிக்கப்பட்டிருப்பது ஆச்சரியப்படுவதற்கில்லை. இயேசுவை கண்ணால் பார்த்த சாட்சிகள் கொல்லப்பட்டிருக்கலாம். இந்த உண்மைகள் இயேசுவை கண்ணால் பார்த்த சாட்சிகளின் எண்ணிக்கையைக் குறைத்திருக்கலாம்.

இயேசு ரோமருடைய அதிகாரத்திற்கு கிழிருந்த சில முக்கியமில்லாத இடங்களில் ஊழியம் செய்தபடியால், இயேசுவைக் குறித்த சில விஷயங்கள் அந்தக்காலத்திலிருந்த வரலாற்றுச் சான்றுகளிலிருந்து எடுக்கலாம். இயேசுவைக் குறித்த வரலாற்றுச்சான்றுகளில் மிக முக்கியமான ஒன்று:

முதல் நூற்றாண்டில் வாழ்ந்த ‘டசிடஸ்’ மிகத்துல்லியமான வரலாற்று ஆசிரியரான இவர் தன்னுடைய எழுத்துக்களில் ‘‘கிறிஸ்தவர்கள்’’ (கிற்ஸ்தஸ் என்பது இலத்தீன் வார்த்தை) திபேரியாவை ஆண்ட பொந்தியு பிலாத்துவின் பாடனுபவித்தார்கள் என்று எழுதியிருக்கிறார். சுடோனியஸ், ராஜா ஆத்ரியன் என்பவருக்கு காரியதரிசியாயிருந்தவர்.

கிறிஸ்டா (கிறிஸ்து) என்ற பெயருடைய ஒரு மனிதன் முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்தான் என்று எழுதியிருக்கிறார் (ஆனல்ஸ் 15:44)

ஃபிளேவியஸ் ஜொசிபஸ் என்பவர் பிரபலமான யூத வரலாற்று ஆசரியர். அவருடைய ஆண்டிருயிடீஸ் –இல் “அவருடைய சகோதரரான இயேசு கிறிஸ்து என்று அழைக்கப்பட்டவர்” என்று யாக்கோப்புக்கு எழுதியுள்ளார். சர்ச்சைக்குரிய ஒரு வேதவாக்கியம் இருக்கின்றது.(18:3) அது இந்த காலத்தில் இயேசு, ஒரு ஞானவான், அவரை மனிதன் என்று கூறுவது தவறாக இருக்கும். அவர்தான் அநேகரை ஆச்சரியப்பட வைத்தவர்... அவர்தான் கிறிஸ்து... அவர் மூன்றாவது நாளிலே உயிரோடு அவர்களுக்கு தரிசனமானார். தீர்க்கதரிசிகள் இதையும் அநேக பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட அருமையான காரியங்களையும் அவரைக் குறித்து சொல்லப்பட்டிருந்தது”. மற்றொரு பதிப்பில் அந்த காலத்தில்இயேசு என்று பெயர் கொண்ட ஒரு ஞானமான மனுஷர் இருந்தார். அவர் நல்ல நடத்தை உள்ளவரும் நற்குணமுள்ளவராக இருந்தார். யூதர்கள் அநேகரும் மற்ற தேசத்து மக்களும் அவருக்கு சீஷரானார்கள். பிலாத்து அவரை குற்றப்படுத்தி சிலுவையிலறைந்துக் கொன்றான். ஆனால் அவருடைய சீஷர்கள் சீஷத்துவத்தைவிட்டு விலகவில்லை. அவர்களுக்கு அவர் சிலுவைக்குப்பிறகு மூன்றுநாள் கழித்து தரிசனமானார் என்றும் அவர் உயிரோடிருக்கிறார் என்றும், அவர்தான் மேசியா, தீர்க்கதரிசிகள் இவரைக்குறித்துதான் உரைத்தார்கள் என்றும் கூறியிருக்கிறார்கள்.

ஜீலியஸ் ஆப்பிரிகானஸில் ஒரு விவாவதத்தில் வரலாற்று ஆசிரியர் ‘தாலஸ்’ கிறிஸ்துவின் சிலுவைக்குப்பின் இருந்த இருளைக்குறித்து எழுதியிருக்கிறார். (எக்ஸான்ட ரைட்டிங்கள் 18)

பிளைனி தா யங்கள். லெட்டர்ஸ் 10:96 இல் அவருடைய குறிப்பில் ஆதி கிறிஸ்தவ ஆராதனை பழக்கவழக்கங்களைக் குறித்தும், கிறிஸ்தவர்கள் இயேசுவைக் கடவுளாக வணங்கியதையும், சீராக அன்பின் ஐக்கியத்தைக் குறித்து, அப்பம் பிட்குதலையும் குறித்து எழுதியிருக்கிறார். பாபிலோனியன் டலமட் (சன்ஹட்ரின் 43a) இயேசு அறையப்பட்டதையும் உறுதிச் செய்கிறது. சமோசாடாவைச் சேர்ந்த லூசியன் என்ற எழுத்தாளர் இரண்டாவது நூற்றாண்டில் வாழ்ந்து, கிறிஸ்தவர்களால் இயேசு வணங்கப்படுவார் என்றும், புதிய உபதேசங்களை கொண்டு வந்து அதற்காக சிலுவையில் அறையப்பட்டதையும் ஒத்துக்கொள்கிறார். அவர் இயேசுவின் போதனைகள், விசுவாசிகளின் சகோதரத்துவத்தைப்பற்றியும், மனந்திரும்புதலைப்பற்றியும் மற்ற தெய்வங்களை வெறுத்து தள்ளுவதையும் குறித்து இருந்ததாகவும் கூறியிருக்கிறார். கிறிஸ்தவர்கள் இயேசுவின் கட்டளைகள்படி வாழ்ந்தார்கள் மற்றும் தங்களுக்கு மரணம் இல்லை என்றும் நம்பினார்கள். மரணத்தை வெறுத்து தன்னார்வத்தோடு தங்களை தனித்துவப்படுத்திக்கொண்டு, உலகப்பொருட்களை உதறித்தள்ளினார்கள்.

மாறா பார்-செராபியோன் என்பவர் இயேசு ஞானவானாகவும் நற்பண்புள்ள மனிதனாக இருந்தார் என்று உறுதிச் செய்கிறார். அநேகரால் இஸ்ரவேலின் ராஜா என்று கருதப்பட்டு, யூதரால் மரணத்தை அடைந்தார், அவருடைய சீஷர்களின் போதனைகளில் இன்றும் வாழ்கிறார்.

நாஸ்டிக்கின் எழுத்துக்கள் இயேசுவைக் குறித்து கூறுகிறது. (தா காஸ்பல் ஆப் டு ரூத், தா அபொகரிபான் ஆப் ஜான், தா காஸ்பல் ஆப் தாமஸ், தாடிரியடைஸ் ஆன் சிரிசரெக்ஷன் மற்றும் பல.)

உண்மையில் பார்ப்போமானால் நாம் சுவிசேஷத்தை கிறிஸ்தவரல்லாத மூலக்காரணத்திலிருந்தே தொகுத்து விட முடியம். இயேசு, கிறிஸ்து என்று அழைக்கப்பட்டார். (ஜொசிபஸ்) ‘அற்புதம்’ செய்து புதிய உபதேசங்களைப் போதித்து யூதேயாவில் பஸ்காவின் போது கொல்லப்பட்டார். (பாபிலோனியன் டல்மட்) தன்னை கடவுள் என்று சொல்லி மறுபடி வரப்போவதாகவும் கூறினார் (எலியேசர்) அதை அவருடைய சீஷர்கள் நம்பி அவரை கடவுளாக வணங்கினார்கள் (பிளைனி தா யங்கள்).

இயேசு கிறிஸ்து வாழ்ந்ததற்கான திரளான சான்றுகள் உலகப்பிரகாரங்களிலும் வேதச்சரித்திரத்திலும் உள்ளது. மேலும் எல்லாவற்றையும்வி்ட மிகப்பெரியச்சான்று என்னவென்றால் முதல் நூற்றாண்டில் வாழ்ந்த ஆயிரங்கணக்கான கிறிஸ்தவர்கள், பன்னிரண்டு சீஷர்கள் உள்பட இயேசு கிறிஸ்துவுக்கு இரத்த சாட்சிகளாக மரிக்கவும் தயாராக இருந்தார்கள். ஜனங்கள் தாங்கள் நம்புகிற உண்மைக்கு ஜீவனைக் கொடுப்பார்களே தவிர பொய்காக மரிக்க மாட்டார்கள்.

English
தமிழ் முதற் பக்கத்திற்குச் செல்க
இயேசு உண்மையாகவே வாழ்ந்தாரா? அதற்கு வரலாற்றுச் சான்று உள்ளதா?