கடவுள் தீமையை உண்டாக்கினாரா?


கேள்வி: கடவுள் தீமையை உண்டாக்கினாரா?

பதில்:
தேவன் தான் சகலத்தையும் உண்டாக்கினார் என்று நாம் முதலில் பார்க்கும்போது தீமையையும் அவர்தான் உண்டாக்கியதுபோல தோன்றும். 'தீமை' என்பது பாறை, மின்சாரம் போல ஒரு பொருள் கிடையாது. ஒரு குப்பி நிறைய தீமையை எடுக்க முடியாது. தீமைக்கு தனியாக பிழைப்பு இல்லை, நன்மை இல்லாதிருப்பதே தீமை. (எ.கா.) துளை என்பது நிஜம் ஆனால் அது ஏதோ ஒன்றில்தான் இருக்க வேண்டும். அழுக்கு இல்லாமை இருப்பதை துளை என்கிறோம். ஆனால் அதை அழுக்கிலிருந்து பிரித்தெடுக்க முடியாது. ஆகவே தேவன் உண்டாக்கும்போது, அவர் உண்டாக்கின எல்லாமே நல்லதாகவே இருந்தது. தேவன் தேர்ந்தெடுத்துக்கொள்கிற உரிமையுடைய ஒரு சிருஷடிப்பை உண்டாக்கினார். அந்த தெரிந்துக்கொள்கிற உரிமை உண்மையாக இருக்க அவர் நன்மையோடு வேறொரு காரியத்தையும் அனுமதித்தார். எனவே தேவன் தேவதூதர்களுக்கும் மனிதர்களுக்கும் நன்மையை தெரிந்துக்கொண்டு தீமையை வெறுத்துவிடுவதை அனுமதித்தார். இரண்டு நல்ல காரியங்களுக்கும் இடையே தவறான உறவு இருக்குமானால் அதை நாம் தீமை என்று சொல்கிறோம். அது தேவனால் உண்டாக்கப்பட்ட 'பொருள்' ஆகிவிடுவதில்லை.

இன்னும் ஒரு விளக்கம் நாம் புரிந்துக்கொள்ள உதவும். ஒரு நபரிடம் 'குளிர் இருக்கிறதா? என்று கேட்கும்பொழுது அதற்கு பதில் 'ஆம்' என்றே இருக்கும். ஆனால் அது தவறு. குளிர் என்பது இருக்கவில்லை. குளிர் என்பது வெப்பம் இல்லாமை. அதுபோலவே இருள் என்பது இல்லை. அது ஒளியின்மையே. தீமை என்பது நன்மை இல்லாதிருப்பது அல்லது தீமை என்பது தேவனில்லாதிருப்பது. தேவன் தீமையை உண்டாக்க வேண்டியிருக்கவில்லை. ஆனால் நன்மை இல்லாதிருப்பதை அனுமதிக்க வேண்டியிருந்தது.

தேவன் தீமையை உண்டாக்கவில்லை, ஆனால் அவர் தீமையை அனமதித்தார். ஒரு வேளை வேதன் தீமையை அனுமதிக்காதிருந்தால் தேவதூதர்களும் மனிதர்களும் தேவனை கட்டாயத்தின்பேரில்தான் சேவை செய்வார்களேயன்றி அவர்களுடைய தெரிந்துகொள்ளுதலின்படி சேவை செய்யாதிருக்க மாட்டார்கள். 'தேவன் இயந்திர மனிதர்களைப்போல ஏற்கனவே திட்டமிட்ட காரியங்களை' செய்கிறதை அவர் விரும்பவில்லை. தேவன் நாம் உண்மையாகவே நம்முடைய சுயசித்தத்தை உபயோகப்படுத்தி அவருக்கு சேவை செய்ய தெரிந்து கொள்வதற்காக தீமையை அனுமதித்தார்.

வரையறைக்குட்பட்ட மனிதர்களாகிய நாம் எல்லையில்லாத தேவனை முழுவதும் புரிந்து கொள்ள முடியாது. (ரோமர் 11:33-34) சில நேரங்களில் நாம் தேவன் ஏன் ஒரு காரியத்தைச் செய்தாரென்று நினைக்கிறோம். ஆனால் பின்புதான் அது வௌ;வேறு எண்ணத்துடன் தேவன் செய்திருக்கிறாரென்று புரியும். தேவன் காரியங்;களை பரிசுத்தம், நித்தியம் என்ற பார்வையில் பார்க்கிறார். நாமோ பாவத்திலிருந்து உலகப்பிரகாரமான நம்முடைய பார்வையில் பார்க்கிறோம்.

ஆதாமும், ஏவாளும் பாவம் செய்து அதனிமித்தம் தீமை, மரணம் மற்றும் எல்லா வேதனைகளும் மனுகுலத்தின் மீது வரும் என்று அறிந்தும் ஏன் தேவன் மனிதனை பூமியில் வைத்திருக்க வேண்டும்? ஏன் இவர் நம்மை உண்டாக்கி பரிபூரணமும் வேதனை இல்லாத இடமாகிய பரலோகத்திலேயே விட்டிருக்கக்கூடாது, இந்தக் கேள்விகளுக்கு நித்தியத்தில் போதுமான விதத்தில் பதில் கிடையாது. நாம் என்ன புரிந்து கொள்ளலாம் என்றால் தேவன் செய்கிற எல்லா காரியங்களும் பரிசுத்தம், முழுமை மற்றும் அவரை மகிமைப்படுத்துகிறதாயும் இருக்கும். தேவன் தீமையை அனுமதித்ததன் நோக்கமே நமக்கு அவரை ஆராதிக்க உண்மையான சுயசித்தத்தை கொடுக்க வேண்டும் என்பதற்காகதான். தேவன் தீமையை உண்டாக்கவில்லை, ஆனால் அனுமதித்தார் அவர் அனுமதித்திராவிட்டால் நாம் அவரை சுயசித்தத்தின்படி ஆராதிக்காமல் கட்டாயத்தின்பேரில் ஆராதித்துக்கொண்டிருந்திருப்போம்.

English
தமிழ் முதற் பக்கத்திற்குச் செல்க
கடவுள் தீமையை உண்டாக்கினாரா?