மன அழுத்தத்தை குறித்து வேதாகமம் சொல்வது என்ன? கிறிஸ்தவர்கள் எப்படி மன அழுத்தத்தை மேற்கொள்ள முடியும்?


கேள்வி: மன அழுத்தத்தை குறித்து வேதாகமம் சொல்வது என்ன? கிறிஸ்தவர்கள் எப்படி மன அழுத்தத்தை மேற்கொள்ள முடியும்?

பதில்:
மன அழுத்தம் கிறிஸ்தவர்கள் மற்றும் பிற மதத்தினர் என்று பல்லாயிரக்கணக்கான மக்களை பாதிக்கிற பரந்தநிலையில் உள்ளது. மன அழுத்தத்தில் உள்ளவர்கள் சோகம், கோபம், நம்பிக்கையின்மை, சோர்வு மற்றும் பல்வேறு தீவிர உணர்வுகளை அனுபவிக்க கூடும். அவர்கள் பயனற்றவர்களாக நினைக்கலாம், தற்கொலை செய்து கொள்ளும் படி நினைக்கலாம் மற்றும் தங்களுக்கு சந்தோஷம் கொடுத்த பொருட்கள் மற்றும் நபர்களின் மீதுள்ள தங்களின் விருப்பத்தை இழக்கலாம். மன அழுத்தமானது வாழ்க்கையின் சூழ்நிலைகளாகிய வேலை இழப்பு, பிரியமானவர்களின் மரணம், விவாகரத்து அல்லது மனோதத்துவ பிரச்சனைகளான துஷ்பிரயோகம் மற்றும் சுய மரியாதை இழப்பு ஆகியவைகளால் உருவாகிறது.

துதியினாலும் சந்தோஷத்தினாலும் நிறைந்திருக்கும் படி வேதாகமம் வலியுறுத்துகிறது (பிலிப்பியர் 4:4; ரோமர் 15:11), நாம் சந்தோஷமான வழ்க்கையை வாழ வேண்டும் என்றே தேவன் வெளிப்படையாக விரும்புகிறார். சூழ்நிலையினால் ஏற்பட்ட மன அழுத்தத்தில் கஷ்டப்படுபவர்களுக்கு இது கடினம் ஆனால் அவர்கள் தேவனுடைய ஈவாகிய nஐபம், வேத பாட வகுப்பு அதனுடைய பயன்பாடு மற்றும் உதவி செய்யும் குழுக்கள், விசுவாசிகளின் ஐக்கியம், அறிக்கையிடுதல், மன்னிப்பு மற்றும் ஆலோசனையின் மூலம் இந்த பிரச்சனைக்கு தீர்வுகான முடியும். நம்மை நாமே அமிழ்வுற்று போகாதிருக்க தொடர்ச்சியான முயற்ச்சியை எடுக்க வேண்டும் அதனால் நமது முயற்ச்சிகளை வெளிப்புறமாக திருப்ப வேண்டும். அநேக நேரங்களில் மன அழுத்தத்தில் உள்ளவர்கள் தங்கள் கவனத்தை தங்களிடமிருந்து கிறிஸ்து மற்றும் பிற காரியங்களின் மீது திருப்பும் போது மன அழுத்தமான உணர்வை மேற்கொள்ளலாம்.

மருத்துவ மன அழுத்தம் உடல் நிலையை சார்ந்தது எனவே இது மருத்துவர்களால் கண்டறியப்படவேண்டும். இது துரதிருஷ்டமான வாழ்க்கை சூழ்நிலையினாலோ அல்லது ஒருவரின் சொந்த விருப்பத்தை மட்டுபடுத்துவதினாலோ ஏற்படுவது அல்ல. கிறிஸ்தவ சமுதாயத்தின் விசுவாசத்திற்கு முரணாக இந்த மருத்துவ மன அழுத்தமானது எப்பொழுதும் பாவத்தின் விளைவு அல்ல. இந்த விதமான மன அழுத்தம் உடல் கோளாரினால் ஏற்படலாம் எனவே இதற்கு மருத்துவம் அல்லது ஆலோசகர்கள் மூலம் சிகிச்சை கொடுக்கப்பட வேண்டும். நிச்சயமாக தேவன் எந்த ஒரு வியாதியையும் அல்லது குறைபாடுகளையும் சரிசெய்ய போதுமானவர். சில காரியங்களில் மருத்துவரை காயங்களுக்காக அனுகுவதற்கும்; இந்த விதமான மன அழுத்தத்திற்காக அனுகுவதற்கும் வித்தியாசமே இல்லை.

மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் கவலைகளை போக்க சில காரியங்களை செய்ய முடியும். அவர்கள் விரும்பாத போதும் கூட இந்த உலகத்தில் ஜீவித்து கொண்டிருக்கின்றனர் என்ற நிச்சயம் அவர்களுக்கு இருக்க வேண்டும். உணர்வுகள் நம்மை வழி விலகச் செய்யும் ஆனால் தேவனுடைய வார்த்தை மாறாதது மற்றும் நிலையானது. நாம் தேவன் மீதுள்ள பலத்த நம்பிக்கையை கைகொள்ள வேண்டும் மற்றும் நாம் உபத்திரவம் மற்றும் சோதனைகளுக்குள்ளாக கடந்து போகும் போது விசுவாசத்தை நன்கு பற்றிக்கொள்ள வேண்டும். திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடார் என்று வேதத்திலே வாசிக்கிறோம் (1 கொரிந்தியர் 10:13). மன அழுத்தமடைவது பாவம் அல்;ல, இருப்பினும் அந்த நபர் தேவைபடும் போது தொழில்நுட்ப உதவியை நாடுவது உள்பட சில தீர்வுகளை இந்த பிரச்சனைக்கு காண வேண்டியது அவசியமாக இருக்கிறது. “அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை அவர்மூலமாய் எப்போதும் தேவனுக்குச் செலுத்தக்கடவோம்” (எபிரேயர் 13:15).

English
தமிழ் முதற் பக்கத்திற்குச் செல்க
மன அழுத்தத்தை குறித்து வேதாகமம் சொல்வது என்ன? கிறிஸ்தவர்கள் எப்படி மன அழுத்தத்தை மேற்கொள்ள முடியும்?