settings icon
share icon
கேள்வி

இன்று உலகில் பிசாசினுடைய ஆவிகளின் செயல்பாடு இருக்கிறதா?

பதில்


பூதங்கள், பேய்களின் தோற்றம், பிரேத ஆவிகளின் கூட்டங்கள், டாரட் கார்டுகள், ஓயிஜா போர்டுகள், கிரிஸ்டல் பந்துகள்—அவைகளுக்கு பொதுவானது என்ன? அவை பலருக்கு கவர்ச்சிகரமானவை, ஏனென்றால் அவை நம் சரீர இருப்பின் வரம்புகளுக்கு அப்பால் உள்ள அறியப்படாத உலகத்தைப் பற்றிய நுண்ணறிவை வழங்குவதாகத் தெரிகிறது. மேலும், பலருக்கு, இதுபோன்ற விஷயங்கள் அப்பாவித்தனமாகவும் மற்றும் பாதிப்பில்லாதவையாகவும் தோன்றுகிறது.

இந்த விஷயங்களை வேதாகமம் அல்லாத ஒரு கண்ணோட்டத்தில் அணுகும் பலர், பேய்கள் இறந்தவர்களின் ஆவிகள் என்று நம்புகிறார்கள், எந்த காரணத்திற்காகவும், "அடுத்த கட்டத்திற்கு" அவர்கள் செல்லவில்லை. பேய்களை நம்புபவர்களின் கூற்றுப்படி, மூன்று வகையான பேய்கள் உள்ளன: (1) மீதியான பேய்கள் (எந்த ஆவிகளுடனும் உண்மையான தொடர்பு இல்லாத வீடியோ பிளேபேக்குகளுடன் ஒப்பிடப்படுகிறது). (2) மனித ஆவிகளால் கூடியிருக்கும் பேய்கள் கூட்டம், அதன் இயல்புகள் நல்லது மற்றும் கெட்டது (ஆனால் தீமை அல்ல) ஆகியவற்றின் கலவையாகும். இத்தகைய ஆவிகள் வெறுமனே ஒரு நபரின் கவனத்தைப் பெற விரும்பலாம்; மற்றவைகள் குறும்புக்காரத்தனமானவைகளாக இருக்கலாம், ஆனால், இரண்டிலும், அவைகள் உண்மையில் மக்களுக்கு தீங்கு விளைவிப்பதில்லை. (3) மனிதரல்லாத ஆவிகள் அல்லது பேய்களுடனான தொடர்பு. இவை மனித ஆவிகள் போல தோற்றமளிக்கலாம், ஆனால் அவை தீங்கு விளைவிக்கும் மற்றும் ஆபத்தானவை.

வேதாகமம் அல்லாத ஆதாரங்களிலிருந்து பேய்கள் மற்றும் பூதங்களைப் பற்றி படிக்கும்போது, ஒரு எழுத்தாளர் வேதாகமத்தை அல்லது வேதாகம கதாபாத்திரங்களை (பிரதான தூதனாகிய மிகாவேல் போன்றவை) குறிப்பிடுவதால், அவர் இந்த விஷயத்தை வேதாகமக் கண்ணோட்டத்தில் அணுகுகிறார் என்று அர்த்தமல்ல. ஒரு எழுத்தாளரின் தகவலுக்கு எந்த அதிகாரமும் வழங்கப்படாதபோது, வாசகர் தனக்குத்தானே கேட்க வேண்டும், "இது இப்படி என்று அவருக்கு/அவளுக்கு எப்படித் தெரியும்? அவருடைய அதிகாரம் என்ன?" உதாரணமாக, பேய்கள் மனித ஆவிகள் போல தோற்றமளிக்கின்றன என்பதை ஒரு எழுத்தாளருக்கு எப்படித் தெரியும்? இறுதியில், இதுபோன்ற விஷயங்களை வேதாகமமல்லாத மூலங்களிலிருந்து உரையாடுபவர்கள் தங்கள் சொந்த எண்ணங்கள், மற்றவர்களின் எண்ணங்கள் மற்றும்/அல்லது கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில் புரிந்துகொள்ள வேண்டும். இருப்பினும், பேய்கள் ஏமாற்றுகின்றன என்பதையும், நற்குணமுள்ள மனித ஆவிகளைப் பின்பற்றலாம் என்பதையும் அவைகளின் சொந்த ஒப்புதலின் அடிப்படையில், அனுபவங்கள் ஏமாற்றலாம்! இந்த விஷயத்தில் ஒருவருக்கு சரியான புரிதல் இருக்க வேண்டும் என்றால், அவர் 100 சதவிகித நேரத்தை துல்லியமாகக் காட்டிய ஒரு மூலத்திற்கு செல்ல வேண்டும்—தேவனுடைய வார்த்தை, வேதாகமம். இதுபோன்ற விஷயங்களைப் பற்றி வேதாகமம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.

1. வேதாகமம் ஒருபோதும் பேய்களைப் பற்றி பேசுவதில்லை. மாறாக, ஒரு நபர் இறக்கும் போது, அந்த நபரின் ஆவி இரண்டு இடங்களில் ஒன்றிற்கு செல்கிறது என்று அது போதிக்கிறது. அதாவது அந்த நபர் இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பவராக இருந்தால், அவருடைய ஆவி பரலோகத்தில் கர்த்தருடைய சமுகத்திற்குள் செலுத்தப்படுகிறது (பிலிப்பியர் 1:21-23; 2 கொரிந்தியர் 5:8). பின்னர், அவர் உயிர்த்தெழுதலில் அவரது சரீரத்துடன் மீண்டும் இணைவார் (1 தெசலோனிக்கேயர் 4:13-18). அந்த நபர் கிறிஸ்துவை விசுவாசிப்பவராக இல்லாவிட்டால், அவருடைய ஆவி நரகம் என்ற வேதனையுள்ள இடத்தில் போடப்படுகிறது (லூக்கா 16:23-24).

ஒரு நபர் ஒரு விசுவாசியாக இருந்தாலும் அல்லது அவிசுவாசியாக இருந்தாலும், நியாயத்தீர்ப்பிலிருந்து மக்கள் தப்பி ஓடும்படி எச்சரிக்கும் நோக்கத்திற்காகவும், மக்களுடன் மீண்டுமாக வந்து தொடர்பு கொள்ளவோ அல்லது அறிவிக்கவோ நம் உலகத்திற்கு திரும்ப முடியாது (லூக்கா 16:27-31). வேதாகமத்தில் இறந்த ஒருவர் உயிருடன் தொடர்பு கொண்ட இரண்டு சம்பவங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன. முதலாவது, இஸ்ரவேலின் ராஜாவாகிய சவுல், மரித்துப்போன தீர்க்கதரிசியாகிய சாமுவேலை ஒரு சூனியக்காரி மூலம் தொடர்பு கொள்ள முயன்றபோது. மீண்டும் மீண்டும் கீழ்ப்படியாததற்காக சவுல் மீது நியாயத்தீர்ப்பு வழங்க தேவன் நீண்ட காலத்திற்கு சாமுவேல் தொந்தரவு செய்யப்பட அனுமதித்தார் (1 சாமுவேல் 28:6-19). இரண்டாவது சம்பவம் மோசேயும் எலியாவும் மத்தேயு 17:1-8 இல் இயேசு மறுரூபமானபோது அவருடன் உரையாடியது. இருப்பினும், மோசே மற்றும் எலியாவின் தோற்றத்தைப் பற்றி இங்கே "பேய்" என்பதாக எதுவும் இல்லை.

2. காணக்கூடாமல் தேவதூதர்கள் செல்வதைப் பற்றி வேதம் மீண்டும் மீண்டும் பேசுகிறது (தானியேல் 10:1-21). சில நேரங்களில், இந்த தேவதூதர்கள் வாழும் மக்களுடன் தொடர்பு கொள்கிறார்கள். தீய ஆவிகள் அல்லது பேய்கள் உண்மையில் மக்களை ஆட்கொண்டு வைத்திருக்கலாம், அவர்களுக்குள் வசித்து அவர்களை கட்டுப்படுத்தலாம் (உதாரணமாக மாற்கு 5:1-20 ஐ பார்க்கவும்). நான்கு நற்செய்தி நூல்கள் மற்றும் அப்போஸ்தலருடைய நடபடிகள் புத்தகம் பிசாசு பிடித்தவர்கள் மற்றும் நல்ல தேவதூதர்கள் தோன்றுவதற்கும் விசுவாசிகளுக்கு உதவுவதற்கும் பல நிகழ்வுகளைப் பதிவு செய்கின்றன. தேவதூதர்கள், நல்லது மற்றும் கெட்டது என இரண்டும் இயற்கைக்கு அப்பாற்பட்ட நிகழ்வுகளை ஏற்படுத்தலாம் (அப். 1-2; வெளிப்படுத்துதல் 7:1; 8:5; 15:1; 16).

3. ஜனங்கள் அறியாத விஷயங்களை பேய்களுக்கு தெரியும் என்று வேதம் காட்டுகிறது (அப். 16:16-18; லூக்கா 4:41). இந்த பொல்லாத தூதர்கள் நீண்ட காலமாக இருப்பதால், வரையறுக்கப்பட்ட ஆயுட்காலம் உள்ளவர்கள் வாழாத விஷயங்களை கூட அவர்கள் இயல்பாகவே அறிவார்கள். சாத்தான் தற்போது தேவனுடைய பிரசன்னத்தை அணுகுவதால் (யோபு 1-2), பிசாசுகள் எதிர்காலத்தைப் பற்றிய சில விவரங்களை அறிந்து கொள்ள அனுமதிக்கப்படலாம், ஆனால் இது ஊகம்.

4. சாத்தான் பொய்க்குப் பிதா மற்றும் ஒரு ஏமாற்றுக்காரன் என்று வேதம் கூறுகிறது (யோவான் 8:44; 2 தெசலோனிக்கேயர் 2:9) மேலும் அவர் தன்னை "ஒளியின் தூதனாக" வேஷமிடுகிறான். அவனைப் பின்பற்றுபவர்கள், மனிதர்களாகவோ அல்லது வேறு விதமாகவோ, அதே வஞ்சகத்தை செய்கிறார்கள் (2 கொரிந்தியர் 11:13-15).

5. சாத்தான் மற்றும் பிசாசுகளுக்கு பெரும் சக்தி உள்ளது (மனிதர்களுடன் ஒப்பிடுகையில்). தேவதூதன் மிகாவேல் கூட சாத்தானை கையாளும் போது தேவனுடைய வல்லமையை மட்டுமே நம்புகிறார் (யூதா 1:9). ஆனால் தேவனுடைய வல்லமையுடன் ஒப்பிடும்போது சாத்தானின் வல்லமை ஒன்றுமில்லை (அப். 19:11-12; மாற்கு 5:1-20), மற்றும் தேவன் சாத்தானின் தீய நோக்கத்தைப் பயன்படுத்தி தமது நல்ல நோக்கங்களைக் கொண்டுவர முடியும் (1 கொரிந்தியர் 5:5; 2 கொரிந்தியர் 12:7).

6. அமானுஷ்யம், பிசாசின் வழிபாடு அல்லது அசுத்த ஆவி உலகம் ஆகியவற்றுடன் எந்த தொடர்பும் இல்லை என்று கடவுள் நமக்குக் கட்டளையிடுகிறார். இதில் சூனியம், பில்லி, ஓயிஜா போர்டுகள், ஜாதகம், டாரட் கார்டுகள், சேனலிங் போன்றவை அடங்கும். தேவன் இந்த நடைமுறைகளை அருவருப்பானதாக கருதுகிறார் (உபாகமம் 18:9-12; ஏசாயா 8:19-20; கலாத்தியர் 5:20; வெளிப்படுத்துதல் 21:8), மற்றும் இதுபோன்ற விஷயங்களில் தங்களை ஈடுபடுத்துபவர்கள் பேரழிவை வருத்திக்கொள்கிறார்கள்.

7. அமானுஷ்ய பொருட்களை (புத்தகங்கள், இசை, நகைகள், விளையாட்டுகள், முதலியன) கையாள்வதில் எபேசு சபை விசுவாசிகள் முன்மாதிரியாக உள்ளனர். பாவம் போன்ற தங்கள் ஈடுபாட்டை அவர்கள் அறிக்கையிட்டனர் மற்றும் பொருட்களை பகிரங்கமாக எரித்தனர் (அப். 19:17-19).

8. சாத்தானின் சக்தியிலிருந்து விடுதலையானது தேவனுடைய இரட்சிப்பின் மூலம் அடையப்படுகிறது. இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியை நம்புவதன் மூலம் இரட்சிப்பு வருகிறது (அப். 19:18; 26:16-18). இரட்சிப்பின்றி பிசாசு ஈடுபாட்டிலிருந்து தன்னை விலக்கிக்கொள்ளும் முயற்சிகள் பயனற்றவை. பரிசுத்த ஆவியின் பிரசன்னம் இல்லாத இருதயத்தைப் பற்றி இயேசு எச்சரித்தார்: அத்தகைய இருதயம் வெறுமனே மோசமான பிசாசுகள் வசிக்கத் தயாராக உள்ள வெற்று வாசஸ்தலம் (லூக்கா 11:24-26). ஆனால் ஒரு நபர் பாவ மன்னிப்புக்காக கிறிஸ்துவிடம் வரும்போது, பரிசுத்த ஆவியானவர் மீட்பின் நாள் வரை இருக்கத்தக்கதாக முத்திரையிடப்பட்டு நிலைத்திருக்கிறார் (எபேசியர் 4:30).

சில அமானுஷ்ய செயல்பாடு சாத்தான்களின் வேலைக்கு காரணமாக இருக்கலாம். பிசாசுகள் மற்றும் பேய்களின் பிற அறிக்கைகளை பிசாசுகளின் வேலை என்று புரிந்துகொள்வது சிறந்தது. சில நேரங்களில் இந்த பிசாசுகள் தங்கள் சுபாவத்தை மறைக்க எந்த முயற்சியும் எடுக்காமல் போகலாம், மற்ற சமயங்களில் அவைகள் வஞ்சகத்தை உபயோகிக்கலாம். இத்தகைய ஏமாற்றுதல் மேலும் அதிகப்படியான பொய்கள் மற்றும் குழப்பத்திற்கு வழிவகுக்கிறது.

உயிருடன் இருப்பவர்களுக்காக இறந்தவர்களிடம் கலந்தாலோசிப்பது முட்டாள்தனம் என்று தேவன் கூறுகிறார். மாறாக, "வேதத்தையும் சாட்சி ஆகமத்தையும்!" (ஏசாயா 8:19-20) கலந்தாலோசிக்க வேண்டும். தேவனுடைய வார்த்தை நம் ஞானத்தின் ஆதாரம். இயேசு கிறிஸ்துவின் விசுவாசிகள் மறைபொருளில் ஈடுபடக்கூடாது. ஆவி உலகம் உண்மையானது, ஆனால் கிறிஸ்தவர்கள் அவற்றிற்குப் பயப்படத் தேவையில்லை (1 யோவான் 4:4).

English



முகப்பு பக்கம்

இன்று உலகில் பிசாசினுடைய ஆவிகளின் செயல்பாடு இருக்கிறதா?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries