மரண தண்டனையை குறித்து வேதாகமம் என்ன சொல்கிறது?


கேள்வி: மரண தண்டனையை குறித்து வேதாகமம் என்ன சொல்கிறது?

பதில்:
பல செயல்களுக்கு பழைய ஏற்பாட்டு நியாயப்பிரமாணம் மரண தண்டனையை கட்டளையிடுகிறது: கொலை (யாத்திராகமம் 21:12) ஒரு மனிதனை திருடி விற்பனை செய்தல் (யாத்திராகமம் 21:16), மிருகத்தோடே புணருதல் (யாத்திராகமம் 22:19), விபசாரம் (லேவியராகமம் 20:10), ஓரினச்சேர்க்கை (லேவியராகமம் 20:13), கள்ள தீர்க்கதரிசி (உபாகமம் 13:5), வேசித்தனம் மற்றும் கற்ப்பழிப்பு (உபாகமம் 22:24), மற்றும் பல குற்றங்கள். மரண தண்டனை கொடுக்கப்பட்ட போதிலும் தேவன் பெரும்பாலும் கிருபை காட்டுகிறார். தாவீது விபசாரம் மற்றும் கொலை செய்திருந்தாலும் தேவன் அவனுடைய ஜீவனை எடுக்க வில்லை (2சாமுவேல் 11:1-5, 14-17 2சாமுவேல் 12:13). இறுதியாக நாம் செய்யும் எல்லா பாவங்களுக்கும் மரண தண்டனை உண்டு ஏனென்றால் பாவத்தின் சம்பளம் மரணம் (ரோமர் 6:23). தேவன் நம்மை ஆக்கினைக்குட்படுத்தாது அவருடைய அன்பை நமக்கு விளங்கப்பண்ணுகிறார் அதற்காக அவருக்கு நன்றி (ரோமர் 5:8).

விபசாரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு ஸ்திரீயை பரிசேயர்கள் இயேசுவிடத்தில் கொண்டுவந்து அவளை கல்லெறிந்து கொல்லவேண்டும் என்று அவரிடத்திலே கேட்டபோது “உங்களில் பாவமில்லாதவன் இவள்மேல் முதலாவது கல்லெறியக்கடவன் என்று சொன்னார்” (யோவான் 8:7). இயேசு எல்லா குற்றங்களுக்கான மரண தண்டனையை நிராகரித்தார் என்று கூறுவதற்கு இந்த வசனத்தை பயன்படுத்த கூடாது. இயேசு பரிசேயருடைய மாய்மாலத்தை இங்கு வெளிப்படுத்துகிறார். பரிசேயர்கள் இயேசு நியாயப்பிரமாணத்தை மீறினார் என்று குற்றஞ்சுமத்துவதற்காகவே இதை செய்தார்கள். அவர்களுக்கு ஸ்திரியை கல்லெறிந்து கொல்ல (விபசாரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஸ்திரியை) வேண்டும் என்பது உண்மையான நோக்கம் அல்ல. மரண தண்டனையை ஏற்படுத்தியவர் தேவனே: “மனுஷன் தேவசாயலில் உண்டாக்கப்பட்டபடியால், மனுஷனுடைய இரத்தத்தை எவன் சிந்துகிறானோ, அவனுடைய இரத்தம் மனுஷனாலே சிந்தப்படக்கடவது” (ஆதியாகமம் 9:6). இயேசு சில வேளைகளில் மரண தண்டனையை அதரித்திருக்க கூடும். மரண தண்டனை கொடுக்கப்பட வேண்டிய சூழலில் இயேசு கிருபையை விளங்கப்பண்ணியிருக்கிறார் (யோவான் 8:1-11). தேவையான நேரங்களில் அரசாங்கத்திற்கும் மரண தண்டனையை நிறைவேற்ற அதிகாரம் உண்டு என்று அப்போஸ்தலர் பவுல் நிச்சயமாக அங்கீகரித்திருக்கிறார் (ரோமர் 13:1-7).

மரண தண்டனையை குறித்து கிறிஸ்தவர்களின் கருத்து என்ன? முதலாவது, மரண தண்டனையை தேவன் தன்னுடைய வார்த்தையின் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார், ஆதலால் தேவன் ஏற்படுத்திய நியமத்திற்கு மேல் நாம் ஒன்றை நினைப்பதற்கு நமக்கு செருக்கு வேண்டும். தேவன் எல்லோரையும் விட உயர் தரமானவர்: அவர் நிறைவானவர். இந்த தரம் நமக்கு மட்டுமல்ல அவருக்கும் பொருந்தும். அவர் எல்லையில்லா அன்பு மற்றும் எல்லையில்லா கிருபையை வெளிப்படுத்தி வருகிறார். அதுபோலவே எல்லையில்லா கோபத்தையும் உடையவராக இருக்கிறார் இவை அனைத்தையும் சரியான சமநிலையில் பயன்படுத்தி வருகிறார்.

அரசாங்கத்திற்கு தேவைப்படும் போது மரண தண்டனையை தீர்மானிக்கும் அதிகாரத்தை தேவன் கொடுத்திருக்கிறார் (ஆதியாகமம் 9:6; ரோமர் 13:1-7). எனவே எல்லா குற்றங்களுக்கும் தேவன் மரண தண்டனையை எதிர்க்கிறார் என்று கூறுவது வேதாகமத்திற்கு புரம்பானது. மரண தண்டனை கொடுக்கப்படும் போது கிறிஸ்தவர்கள் சந்தோஷப்பட கூடாது அதே நேரத்தில் மிக கொடூரமான குற்றம் செய்தவனுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனைக்கு விரோதமாக கிறிஸ்தவர்கள் போராடவும் கூடாது.

English
தமிழ் முதற் பக்கத்திற்குச் செல்க
மரண தண்டனையை குறித்து வேதாகமம் என்ன சொல்கிறது?