அப்போஸ்தலர்களுடைய மரணத்தை குறித்து வேதாகமத்தில் வாசிக்கிறோமா?


கேள்வி: அப்போஸ்தலர்களுடைய மரணத்தை குறித்து வேதாகமத்தில் வாசிக்கிறோமா? எப்படி ஒவ்வொரு அப்போஸ்தலர்களும் மரித்தனர்?

பதில்:
வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரே அப்போஸ்தலருடைய மரணம் யாக்கோபுடையது மட்டுமே (அப்போஸ்தலர் 12:2). ஏரோது இராஜா யாக்கோபுவை பட்டயத்தினால் கொலை செய்தான். பிற அப்போஸ்தலர்களின் மரணத்தின் சூழ்நிலை சபையின் பாரம்பரியத்தோடு தொடர்புடையது எனவே நாம் வேறு எந்த குறிப்புகளுக்கும் முக்கியதுவம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. அப்போஸ்தலர் பேதுரு ரோமாபுரியில் இயேசுகிறிஸ்துவின் தீர்க்கதரிசனத்திற்கு ஏற்றார் போல் (யோவான் 21:18) தலைகீழாக எக்ஸ் வடிவ சிலுவையில் அறையப்பட்டார் என்பதே அதிகமாக பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட சபையின் பாரம்பரியம் ஆகும். பின்வருபவைகள் மற்ற அப்போஸ்தலர்களின் மரணத்தை குறித்த மிக பிரசிதி பெற்ற சம்பிர்தாயம் ஆகும்.

மத்தேயு எத்தியோப்பியாவில் பட்டயத்தினால் ஏற்பட்ட காயத்தினால் பாடுபட்டு மரித்தான். யோவான் ரோமாபுரியில் நடந்த உபத்திரவத்தில் பெரிய பாத்திரத்தில் கொதிக்கிற எண்ணெயில் வேகவைக்கப்பட்ட போது மரணத்தை சந்தித்தான். ஆனால் அவன் அற்புதமாக மரணத்திலிருந்து மீட்கப்பட்டான். யோவான் பத்மு தீவில் சுரங்க சிறையில் தண்டிக்கப்பட்டான். அவன் தன்னுடைய தீர்க்கதரிசன புத்தகமான வெளிப்படுத்தின விசேஷத்தை பத்முவில் எழுதினான். பின்பு அப்போஸ்தலர் யோவான் விடுதலையாக்கப்பட்டு தற்போது துருக்கி என்று அழைக்கப்படுகிற நாட்டிற்கு திரும்பினான். அவன் வயது சென்றவனாக மரித்தான். சமாதானமாக மரித்த அப்போஸ்தலர் இவர் ஒருவரே.

இயேசுவின் சகோதரனாகிய யாக்கோபு (அப்போஸ்தலனல்லாத) எருசலேம் சபையின் தலைவனாக இருந்தான். கிறிஸ்துவின் மீதுள்ள விசுவாசத்தை மறுதலிக்க மறுத்த போது இவன் தேவாலயத்தில் தென்கிழக்கு உப்பரிகையின் உச்சத்திலிருந்து (நூற்றுக்கும் மேற்பட்ட அடி உயரத்திலிருந்து) எறியப்பட்டான். அவன் விழ்ந்ததிலிருந்து தப்பினதை கண்ட அவனுடைய எதிரிகள் அவனை கூட்டமாக அடித்து கொன்றனர். இதே உப்பரிகையின் உச்சத்திற்கே இயேசுவை சாத்தான் சோதனையின் போது கூட்டிச் சென்றான்.

பர்த்தலேமேயு என்று அழைக்கப்பட்ட நத்தான்வேல் ஆசியாவிற்கு மிஷனரியாக வந்தான். அவன் தற்போது துருக்கி என்று அழைக்கப்படும் நாட்டில் சாட்சியை பகிர்ந்தான் அங்கு ஆர்மினியவில் பிரசங்கித்ததற்காக சவுக்கினால் மரண தண்டனையை பெற்றான். அந்திரேயா கிரேக்க நாட்டில் எக்ஸ் வடிவ சிலுவையில் அறையப்பட்டான். ஏழு போர் சேவகர்களால் நன்கு சாவுக்கினால் அடிக்கப்பட்ட பின்பு அவர் வேதனையில் நீடிக்க அவனுடைய சரீரத்தை கயிருகளால் குறுக்கி சிலுவையில் கட்டினார்கள். சிலுiயில் கட்டப்பட்ட போது அந்திரேயா சொன்ன வார்த்தைகளாக அவனுடைய சீஷர்கள் கூறியது: “இந்த சந்தோஷமான தருனத்தையே நான் நீண்ட நாள் ஆசையாக எதிர்பார்த்தேன். கிறிஸ்துவின் சரீரம் சிலுவையில் தொங்கவிடப்பட்டபடியினாலே இந்த சிலுவை சுத்திகரிக்கப்பட்டிருக்கிறது என்றான்.” அவன் தன்னுடைய வேதனையோடு இரண்டு நாட்கள் அந்த சிலுவையில் மரிக்கும் வரை பிரசங்கித்தான். அப்போஸ்தலர் தோமா இந்தியாவில் சபையை ஸ்தாபிப்பதான தன்னுடைய மிஷனரி பணியின் ஈடுபட்ட போது ஈட்டியால் குத்தப்பட்டார். யூதாஸ் காரியோத்திற்கு பதிலாக தெரிந்தெடுக்கப்பட்ட மத்தியா கல்லெறியப்பட்டு பின்பு தலை துண்டிக்கப்பட்டு மரித்தான். ஏ.டி 67ல் ரோமாபுரியில் தீய பேரரசரான நீரோவினால் அப்போஸ்தலர் பவுல் சித்திரவதை செய்யப்பட்டு மற்றும் தலை துண்டிக்கப்பட்டு மரித்தார். மற்ற அப்போஸ்தலர்களை பற்றியும் சில மரபுகள் உள்ளன ஆனால் அவைகள் வரலாற்று பாரம்பரிய ஆதரவு அற்றவைகள்.

அப்போஸ்தலர்கள் எப்படி மரித்தார்கள் என்பது முக்கியமல்ல. அவர்கள் அனைவரும் தங்களுடைய விசுவாசத்திற்காக மரிக்க வாஞ்சையாக இருந்தனர் என்பதே முக்கியமான உண்மையாகும். இயேசு உயிர்தெழவில்லை என்றால் சீஷர்களுக்கு அது தெரிந்திருக்கும். யாரும் தங்களுக்கு பொய் என்று தெரிந்தவைகளுக்காக மரிக்க மாட்டார்கள். எல்லா அப்போஸ்தலர்களும் கிறிஸ்துவின் மீதுள்ள விசுவாசத்தை மறுதலிக்க மறுத்து மரிக்க வாஞ்சையுள்ளவர்களாக இருந்தனர் என்பது உண்மை. இதுவே அவர்கள் உயிர்தெழுந்த இயேசுகிறிஸ்துக்கு உண்மையான சாட்சிகளாக இருந்தனர் என்பதற்கான மிக பெரிய ஆதாரம் ஆகும்.

English
தமிழ் முதற் பக்கத்திற்குச் செல்க
அப்போஸ்தலர்களுடைய மரணத்தை குறித்து வேதாகமத்தில் வாசிக்கிறோமா? எப்படி ஒவ்வொரு அப்போஸ்தலர்களும் மரித்தனர்?