டேடிங்/திருமணம் நாடி காதல் செய்வதை பற்றி வேதம் என்ன சொல்லுகிறது?


கேள்வி: டேடிங்/திருமணம் நாடி காதல் செய்வதை பற்றி வேதம் என்ன சொல்லுகிறது?

பதில்:
வேதத்தில் டேட்டிங் (dating)/திருமணம் நாடி காதல் (courting) செய்வதை பற்றி ஒன்றும் கூறவில்லை, ஆனால் திருமணத்திற்க்கு முன் கிறிஸ்தவர்கள் கைக்கொள்ள வேண்டிய சில நியமங்கள் வேதத்தில் உள்ளன. முதலாவதாக, டேட்டிங்கை பற்றி இருக்கும் உலக கண்ணோட்டத்திற்க்கும் தேவனின் வழிக்கும் இடையே இருக்கும் வித்தியாசங்களை அறிந்துகொள்ள வேண்டும் (2 பேதுரு 2:20). எவ்வலவு வேண்டுமானாலும் டேட் பண்ணலாம் என்று உலகம் சொல்லும், ஆனால் ஒரு ஆண் அல்லது பெண்ணின் குணத்தை அறிந்துக்கொள்வதே டேட்டிங்கின் முக்கியமான நோக்கமாகும். அந்த நபர் இரட்சிக்கப்பட்டவரா (யோவான் 3:3-8) மற்றும் அந்த நபர் கிறிஸ்துவைபோல மாற (பிலிபியர் 2:5) உங்களுக்கிருக்கும் அதே விருப்பத்தை உடையவரா என்று அறிந்துக்கொள்ள வேண்டும். டேட்டிங் அல்லது திருமணம் நாடி காதல் செய்வதின் நோக்கமே ஒரு வாழ்க்கை துணையை கண்டுபிடிப்பதாகும். கிறிஸ்தவர்களான நாம் அவிசுவாசிகளை திருமணம் செய்ய கூடாது (2 கொரிந்தியர் 6:14-15) என்று வேதம் சொல்லுகிறது, ஏனென்றால் அப்படி செய்தால் நமக்கும் கிறிஸ்துவுக்கும் இருக்கும் ஐக்கியம் பயனற்றதாகிவிடும் மற்றும் நமது நீதி நியமங்களை விட்டு விலக வேண்டியதாகவும் இருக்கும்.

டேட்டிங் அல்லது திருமணம் நாடிய காதல் என்ற உறவில் இருக்கும் ஒருவர், எல்லாவற்றுக்கும் மேலாக தேவனை அன்புகூர வேண்டும் (மத்தேயு 10:37). காதலிக்கின்ற அந்த நபர் தான் என் வாழ்கையின் “எல்லாம்” என்று சொல்வதும் அல்லது அவர் தான் வாழ்கையில் மிக முக்கியமானவர் என்று எண்ணுவதும் விக்கிரக ஆராதனை என்ற பாவம் ஆகும் (கொரிந்தியர் 5:20; கொரிந்தியர் 3:5). பின்னும், திருமணத்திற்கு முன் பாலியல் உறவு கொள்ளுவதினால் நம் சரீரங்களை தீட்டுபடுத்த கூடாது (1 கொரிந்தியர் 6:9, 13; 2 தீமோதேயு 2:22). வேசித்தனம் என்பது தேவனுக்கு விரோதமான பாவம் மட்டுமல்ல; அது நாம் நம் சரீரத்துக்கு விரோதமாக செய்யும் பாவமாகும் (1 கொரிந்தியர் 6:18). நாம் நம்மை நேசிப்பது போல பிறரையும் நேசித்து, கணப்படுத்த வேண்டும் (ரோமர் 12:9-10); இந்த வார்த்தை டேட்டிங் அல்லது திருமணம் நாடி காதலிப்பதற்க்கும் பொருந்தும். இந்த வேத கோட்பாடுகளை பின்பற்றுவதின் மூலம் நம் திருமணத்திற்க்கு நிலையான ஆஸ்திபாரம் உண்டாகும். நாம் நம் வாழ்கையில் எடுக்கும் ஒரு முக்கியமான தீர்மானம் தான் திருமணம். ஏனென்றால், இரண்டு நபர்கள் திருமணம் செய்யும்போது, அவர்கள் ஒருவரோடொருவர் இசைந்து கொள்கின்றனர் மற்றும் ஒரே சரீரமாகிரார்கள். இந்த உறவு நீடித்திருக்க வேண்டும் என்றும் முறிக்கப்பட கூடாது என்றும் தேவன் விரும்புகிறார் (ஆதியாகமம் 2:24; மத்தேயு 19:5).

English
தமிழ் முதற் பக்கத்திற்குச் செல்க
டேடிங்/திருமணம் நாடி காதல் செய்வதை பற்றி வேதம் என்ன சொல்லுகிறது?