கள்ள உபதேசத்தின் வரையறை என்ன?


கேள்வி: கள்ள உபதேசத்தின் வரையறை என்ன?

பதில்:
கள்ள உபதேசம் என்ற வார்த்தையை மக்கள் கேட்கும் போது, அவர்கள் சாத்தானை வழிபடும், விலங்குகளை பலியிடும், தீய, மாறுபாடான மற்றும் புறஜாதியரின் சமயச் சடங்குகளில் பங்கு பெறும் கூட்டத்தார் என்று அநேக நேரங்களில் நினைக்கின்றனர். நிஜத்தில் கள்ள உபதேசத்தார் அறிதாகவே இவைகளில் ஈடுபடுகிறார்கள். உண்மையில் கள்ள உபதேசம் என்பது பரந்த அர்த்தத்தில் குறிப்பிட்ட சடங்குகள் மற்றும் பழக்கத்தை உடைய மத அமைப்பு என்பதாகும்.

வழக்கமாக, கள்ள உபதேசமானது குறுகலான முறையில் வரையறுக்கப்பட்டுள்ளது மற்றும் இந்த வார்த்தை எந்த உறுப்பினர்கள் அவர்களின் மதத்தின் பழைமையான கோட்பாடுகளை சிதைக்கிற ஒரு மரபுவழியில்லாத பிரிவை ஏற்படுத்துவதை குறிக்கிறது. வேதாகமத்தின் அடிப்படை உபதேசங்களை மறுக்கிற எந்த ஒரு மத அமைப்பும் கிறிஸ்தவத்தின் அடிப்படையில் கள்ள உபதேசம் என வரையறுக்கப்படுகிறது. கள்ள உபதேசம் என்பது இவர்களுடைய உபதேசத்தை விசுவாசிப்பவர்கள் இரட்சிபை இழக்க செய்கிறது. கள்ள உபதேசம் ஒரு மதத்தின் ஒரு பகுதியாக உரிமை கோரினாலும் அது அந்த மதத்தின் அடிப்படை உண்மைகளை மறுக்கிறது. எனவே கிறிஸ்தவ கள்ள உபதேசமானது கிறிஸ்தவம் என்று உரிமை கோரினாலும் அது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கிறிஸ்தவ அடிப்படை சத்தியங்களை மறுக்கிறது.

இயேசு தேவன் அல்ல மற்றும் விசுவாசத்தினால் இரட்சிப்பு இல்லை என்பதே இரண்டு பொதுவான கிறிஸ்தவ கள்ள உபதேசிகளின் போதனைகள் ஆகும். இயேசு கிறிஸ்துவின் தெய்வீக தன்மையை மறுப்பது அவருடைய மரணம் நம்முடைய பாவத்திற்கு பரிகாரமாக செலுத்தப்படுவதற்கு போதுமானதல்ல என்ற தீர்வை ஏற்படுத்துகிறது. விசுவாசத்தினால் இரட்சிப்பு என்பதை மறுப்பது நம்முடைய சொந்த பிரயாசத்தினால் இரட்சிப்பை அடைவதை வழியுறுத்துகிறது. அப்போஸ்தலர்கள் சபையின் ஆரம்ப நாட்களில் கள்ள உபதேசங்களுக்கு விரோதமாக எழுதியுள்ளனர் உதாரணமாக யோவான் ஞானமார்க்கத்தின் போதனைக்கு விரோதமாக எழுதியுள்ளார் (1 யோவான் 4:1-3). கிறிஸ்து மாம்சத்தில் வந்தார் (1யோவான் 4:2) என்பதே யோவானின் இறை உபதேசத்திற்கான வேதியல் ஆய்வாகும். இது துருஉபதேசமான ஞானமார்க்கத்திற்கு மாறுபாடானது ஆகும் (2யோவான் 1:7).

யெகோவாவின் சாட்சிகள் மற்றும் மோர்மன் இந்த இரண்டுமே இன்று நன்கு அறியப்பட்ட கள்ள உபதேசங்கள் ஆகும். இந்த இரண்டுமே தங்களை கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக் கொண்டாலும், இவர்கள் கிறிஸ்துவின் தெய்வீக தன்மையை மற்றும் விசுவாசத்தினால் இரட்சிப்பு என்பதை மறுக்கின்றனர். யெகோவாவின் சாட்சிகள் மற்றும் மோர்மன் இருவருமே வேதாகமம் போதிக்கிற அனேக காரியங்களுக்கு ஒத்திருக்கின்றனர். எனினும் கிறிஸ்துவின் தெய்வீக தன்மையை மற்றும் விசுவாசத்தினால் இரட்சிப்பு என்பதை மறுப்பது அவர்களை கள்ள உபதேசக்காரர்களாக்குகிறது. யெகோவாவின் சாட்சிகள், மோர்மன் மற்றும் பிற கள்ள உபதேசங்களை பின்பற்றுகிற அநேகர் ஒழுக்க நெறி உள்ளவர்கள் தாங்கள் சத்தியத்தை கைகொள்கிறோம் என்கிற விசுவாசத்தையும் உடையவர்கள். கள்ள உபசேதத்தை பின்பற்றுகிற அநேகர் அவர்களின் தவறான சத்தியத்தின் வழியாக இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதன் மூலம் தான் இரட்சிப்பு என்கிற சரியான உபதேசத்திற்கு இழுக்கப்பட வேண்டும் என்பதே நமது நம்பிக்கையும் ஜெபமுமாக இருக்க வேண்டும்.

English
தமிழ் முதற் பக்கத்திற்குச் செல்க
கள்ள உபதேசத்தின் வரையறை என்ன?