சிருஷ்டிப்புக்கு எதிரான பரிணாம வளர்ச்சியை பற்றி வேதம் என்ன சொல்லுகிறது?


கேள்வி: சிருஷ்டிப்புக்கு எதிரான பரிணாம வளர்ச்சியை பற்றி வேதம் என்ன சொல்லுகிறது?

பதில்:
சிருஷ்டிப்புக்கு எதிரான பரிணாம வளர்ச்சி என்கிறதான விவாதத்திற்கான அறிவியல் ரீதியான பதிலை அழிப்;பது இந்த பதிலின் நோக்கம்மல்;ல. சிருஷ்டிப்புக்கு எதிரான பரிணாம வளர்ச்சியை குறித்த அறிவியல் ரீதியான விவாதத்திற்கு ஆதியாகமம் மற்றும் சிருஷ்டிப்பு ஆராய்ச்சி மையத்தின் பதிலை நாங்கள் பரிந்துரைசெய்கிறோம். வேதாகமத்தின் அடிப்படையில் சிருஷ்டிப்புக்கு எதிரான பரிணாம வளர்ச்சியை பற்றிய விவாதம் ஏன் இன்றும் இருக்கிறது என்பதை விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கம் ஆகும். ரோமர் 1:25ல் வாசிக்கிறோம், தேவனுடைய சத்தியத்தை அவர்கள் பொய்யாக மாற்றி, சிருஷ்டிகரைத் தொழுது சேவியாமல் சிருஷ்டியைத் தொழுது சேவித்தார்கள், அவரே என்றென்றைக்கும் ஸ்தோத்ததிரிக்கப்பட்டவர் ஆமென்.

பரிணாம வளர்ச்சியை விசுவாசிக்கும் அனேக விஞ்ஞானிகள் நாத்திகர்கள் அல்லது அறியொணாமைக் கொள்கையாளாகளாகவே இருக்கிறார்கள் என்பதே இந்த விவாதத்தின் மையக்கருத்தாகும். ஒரு சிலர் தெய்வீக பரிணாமத்தையும் மற்றும் சிலர் இயற்க்கை சமயவாதிகளாகவும் இருக்கின்றனர் (தேவன் இருக்கிறார் ஆனால் அவர் உலகத்தோடு ஈடுபாடுள்ளவரல்ல, அனைத்தும் இயற்க்கையின் படி செயல்படுகின்றன). ஒரு சிலர் உண்மையாக மற்றும் நேர்மையாக காலங்களை ஆராய்ந்து காலங்கள் பரிணாம வளர்ச்சியோடு ஒத்துபோகிறது என்கிற முடிவுக்கு வருகின்றனர். பரிணாமவளர்ச்சியை பரிந்துரைக்கும் குறைந்த சதவிதத்திலான விஞ்ஞானிகளையே இது குறிப்பிடுகிறது. அதிக அளவிலான பரிணாம விஞ்ஞானிகள் வாழ்க்கையின் பரிணாமவளர்ச்சியானது எந்தவிதமான தெய்வீக ஈடுபாடும் இல்லாமல் ஏற்பட்டது என்ற கருத்தை வலியுறுத்துகின்றனர். இயற்க்கை அறிவியல் என்பதே பரிணாமவளர்ச்சியின் வரையுரையாகும்.

எப்படி இந்த உலகம் மற்றும் ஜீவராசிகள் உருவானது என்பதை பற்றி சிருஷ்டிப்பை விட மற்றொரு விளக்கம் நாத்திகவாதிகளுக்கு அவசியம். எனினும் சார்லஸ் டார்வினின் பரிணாம வளர்ச்சி கோட்பாடு பிரசிதிபெற்றது. இவரே முதலில் எளிதில் நம்பத்தக்க முறையிலான இயற்க்கை செயல்முறையிலான பரிணாம வளர்ச்சியை உருவாக்கினார். டார்வின் தன்னை ஒரு கிறிஸ்தவராகவே அடையாளப்படுத்திக் கொண்டார் ஆனால் அவருடைய வாழ்க்கையில் நடந்த சில துன்பங்களால் அவர் பின்னர் தன்னுடைய கிறிஸ்தவ விசுவாசத்தையும் தேவன் இருக்கிறார் என்பதையும் மறுதலித்தார். பரிணாம வளர்ச்சி நாத்திகர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. தேவன் இருக்கிறார் என்பது தவறு என்று நிறுபிக்க கூடாது என்பதே டார்வினின் நோக்கம் ஆகும். ஆனால் அவருடைய பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டின் இறுதி தீர்வு அதுவே ஆகும். பரிணாம கோட்பாடே நாத்திகர்களை உருவாக்கிற்று. பரிணாம விஞ்ஞானிகள் உலகம் எப்படி உருவானது என்பதற்கு மற்றொரு விளக்கம் கொடுப்பதே அவர்களுடைய இலக்கு என்பதை எற்றுக்கொள்ள மறுக்கின்றனர் மற்றும் இதன் முலம் நாத்திகத்திற்கு அடித்தளத்தை அமைத்து கொடுக்கின்றனர். ஆனால் வேதாகமத்தின் அடிப்படையில் அவைகளால் தான் பரிணாம கோட்பாடு உண்டாயிருக்கிறது.

வேதாகமம் சொல்லுகிறது, தேவன் இல்லை என்று மதிகெட்டவன் தன் இருதயத்தில் சொல்லிக் கொள்ளுகிறான் என்று (சங்கீதம் 14:1; 53:1). சிருஷ்டி கர்த்தரை விசுவாசிக்கிறதற்கு எந்த வித போக்குசொல்ல முடியாது என்று வேதாகமத்தில் வாசிக்கிறோம். எப்படியென்றால் காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை தேவத்துவம் என்பவைகள், உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகமுண்டானதுமுதற்கொண்டு தெளிவாய் காணப்படும், ஆதலால் அவர்கள் போக்குச்சொல்ல இடமில்லை (ரோமர் 1:20). வேதத்தின் அடிப்படையில் யார் தேவனில்லை என்பானோ அவன் மூடன.; கிறிஸ்தவர்களும் உள்ளடக்க அநேகர் பரிணாம விஞ்ஞானிகள் அறிவியல் காலத்தை நடுநிலையான வியாக்கியானம் செய்கிறார்கள் என்பதை ஏன் எற்றுக்கொள்ள விருப்பமுடையவராக இருக்கின்றனர்? வேதாகமத்தின் அடிப்படையில் அவர்களெல்லோரும் மூடர்களே. மூடத்தனம் என்பது அறிவுத்திறம் குறைவு என்று அர்த்தமல்;ல. அநேக பரிணாம விஞ்ஞானிகள் அறிவுத்திறன் படைத்த புத்திசாலிகள். மூடத்தனம் என்பது அறிவை சரியாக பயன்படுத்த முடியாத இயலாமையைக் குறிக்கிறது. நீதிமொழிகள் 1:7ல் வாசிக்கிறோம், கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம், மூடர் ஞானத்தையும் போதகத்தையும் அசட்டை பண்ணுகிறார்கள்.

பரிணாம விஞ்ஞானிகள் சிருஷ்டிப்பு அல்;லது அறிவியல் கோட்பாடுகளை மீறிய புத்திசாலிதனமான ஒரு உருவஅமைப்பு மற்றும் அறிவியல் ஆராய்ச்சிக்கு உட்படுத்துவதற்கு இது தகுந்தது அல்ல என்று ஏளனம் செய்கின்றனர். ஏதேனும் ஒன்றை அறிவியல் என்று கருதுவதற்கு அது கண்கானிக்க மற்றும் சோதனைக்கு உட்படுத்த கூடியதாகவும் மற்றும் இயற்க்கைக்கு ஒத்ததாகவும் இருக்க வேண்டும். வரைமுறையின் படி சிருஷ்டிப்பு என்பது இயற்க்கைக்கப்பார்பட்டது. தேவனும் இயற்க்கைக்கப்பார்பட்டவைகளும் கண்கானிக்க மற்றும் சோதனைக்குட்படுத்த முடியாதவைகள். எனவே சிருஷ்டிப்பு அல்லது அறிவியல் கோட்பாடுகளை மீறிய புத்திசாலிதனமான ஒரு உருவஅமைப்பை அறிவியல் என கருத முடியாது. நிச்சயமாக பரிணாம வளர்ச்சியை கண்கானிக்கவோ அல்லது சோதனைக்குட்படுத்தவோ முடியாது. ஆனால் இது பரிணாம கொள்கையை கடைபிடிப்பவர்களுக்கு பிரச்சனையல்ல. முடிவாக எந்த ஒரு மாற்றுக் கருத்தையும் கருத்தில்கொள்ளாமல் எல்லா காலங்களும் பரிணாமத்தின் முற்புணர்வு, முன்பே தீர்மானிக்கப்பட்ட மற்றும் முன்பே ஏற்றுக்கொள்ளப்பட்ட கோட்பாடு மூலம் வடிகட்டப்பட்டுள்ளது.

எனினும், இவ் உலகத்தினுடைய ஆரம்பத்தையும் மற்றும் ஜீவராசிகளின் ஆரம்பத்தையும் சோதிக்க முடியாது. ஆரம்பத்தோடு தெடர்புபடுத்தி பார்க்கும் போது சிருஷ்டிப்பும் பரிணாம வளர்ச்சியும் விசுவாசத்தின் அடிப்படையிலானது. அதுமட்டுமல்ல சோதனைக்குட்படுத்தவும் முடியாதது ஏனென்றால் நம்மால் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு பின்பாக சென்று இவ் உலகத்தினுடைய ஆரம்பத்தையும், ஜீவராசிகள் இவ் உலகத்தில் தோற்றினதற்கான ஆரம்பத்தையும் கண்கானிக்க முடியாது. பரிணாம விஞ்ஞானிகள் சிருஷ்டிப்பை நிராகரிக்கின்றனர் இதன் அடிப்படையில் அவர்கள் இவ் உலகத்தின் ஆரம்பத்திற்கு பரிணாமவளர்ச்சி அறிவியல் பூர்வமான விளக்கத்தை தறுகிறது என்பதையும் நிராகரிக்கின்றனர். இவ் உலகத்தில் உண்டாக்கப்பட்டதை குறித்த பரிணாம வளர்ச்சி கோட்பாடு சிருஷ்டிப்பின் கோட்பாட்டை போலவே அறிவியல் வரையறைக்கு உட்பட்டதல்ல. உலக தோற்றதை விளக்கக்கூடிய பரிணாம வளர்ச்சியே சோதனைக்கு உட்படுத்த தகுதியானது. எனவே உலக தோற்றதை குறித்த இந்த கோட்பாடே அறிவியல் சார்ந்தது ஆகும். பரிணாம வளர்ச்சியை வலியுறுத்தும் விஞ்ஞானிகள் உலக தோற்றதை குறித்த கோட்பாட்டை ஏற்றுக்கொள்ள தக்கதான நல்ல காரியங்களை சரியான சோதனை செய்யாது நிராகரிப்பது முட்டாள்தனம் ஆகும். எனென்றால் இது அவர்களுடைய வாதத்திற்கு பொருந்தாத குறுகிய வரையரைக்கு பொருந்தாது.

சிருஷ்டிப்பு உண்மையானல் நாம் கணக்கொப்புவிக்க வேண்டிய சிருஷ்டிகர் ஒருவர் இருக்கிறார் என்பதும் உண்மை. பரிணாம வளர்ச்சியே நாத்திகத்தை உருவாக்குகிறது. சிருஷ்டிகராகிய தேவன் இல்லாது இவ் உலகம் எப்படி தோன்றியது என்பதற்கான விளக்கத்திற்கு அடிப்படையை பரிணாம வளர்ச்சி நாத்திகர்களுக்கு கொடுக்கிறது. தேவனுடைய இடைபடுதல் இவ் உலகத்திற்கு அவசியம் என்பதை பரிணாம கோட்பாடு மறுக்கிறது. நாத்திக மார்க்கத்தாருக்கு பரிணாம வளர்ச்சியே சிருஷ்டிப்பின் கோட்பாடாக இருக்கிறது. சர்வ வியாவி மற்றும் சர்வ வல்லமை படைத்த தேவனுடைய வர்த்தையை நாம் விசுவாசிப்பதா அல்லது ஏற்றுக்கொள்ளத்தகாத அறிவியில் சார்ந்த மூடருடைய விளக்கங்களை நாம் விசுவாசிப்பதா. வேதத்தின் அடிப்படையில் நாம் எதை தேர்வு செய்ய வேண்டும் என்பது மிக தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது.

English
தமிழ் முதற் பக்கத்திற்குச் செல்க
சிருஷ்டிப்புக்கு எதிரான பரிணாம வளர்ச்சியை பற்றி வேதம் என்ன சொல்லுகிறது?