settings icon
share icon
கேள்வி

இயேசு பாவஞ்செய்யக் கூடியவராக இருந்தாரா (பாவஞ்செய்யக்கூடியவர் அல்லது பாவஞ்செய்ய முடியாதவர்)? இயேசு பாவஞ்செய்ய முடியாதவராக இருந்தாரானால், அவர் சோதிக்கப்படுதலின் அவசியம் என்ன?

பதில்


இந்த சுவாரஸ்யமான கேள்விக்கு இரண்டு பக்கங்கள் உள்ளன. இயேசு பாவம் செய்தாரா இல்லையா என்பதல்ல கேள்வி என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டியது மிகவும் முக்கியம். காரணம் வேதாகமம் இரு பக்கங்களிலும் இயேசு பாவஞ்செய்யவில்லை என்று தெளிவாக ஒப்புக்கொள்கின்றன (2 கொரிந்தியர் 5:21; 1 பேதுரு 2:22). இயேசு பாவம் செய்யக்கூடியவராக அல்லது வேண்டுமானால் அவரால் பாவம் செய்திருக்க முடியும் என்கிற நிலையில் இருந்தாரா என்பதுதான் கேள்வி. இயேசு "பாவஞ்செய்யக்கூடாதவர்" என்று நம்புவோர் அவர் பாவஞ்செய்யக்கூடாதவராக இருந்தார் என்று நம்புகிறார்கள். இயேசு "பாவம் செய்யக்கூடிய நிலையில்" இருந்தார் என்று நம்புவோர், அவர் வேண்டுமானால் பாவம் செய்திருக்கலாம், ஆனால் அவ்வாறு செய்யவில்லை என்று நம்புகிறார்கள். இதில் எந்த பார்வை சரியானது? இயேசு பாவம் செய்திருக்கக்கூடாது மற்றும் முடியாது என்பதுதான் வேதவசனத்தின் தெளிவான போதனையாக இருக்கிறது. அவர் பாவம் செய்திருந்தால், அவர் இன்றும் பாவம் செய்யக்கூடிய நிலையிலேயே இருக்கமுடியும், ஏனென்றால் பூமியில் வாழ்ந்துகொண்டிருக்கும்போது உண்டாயிருந்த அதே சாரம்சம் அவர் இன்றும் கொண்டிருக்கிறார். அவர் முழுமையான நிலையில் தேவனாகவும் மனிதனாகவும் ஒருவரையொருவர் பிரிக்கமுடியாதவராக பரிபூரண நிலையில் தேவ-மனிதனாக என்றென்றுமாக இருக்கிறார். இயேசு பாவம் செய்திருக்க முடியும் என்று நம்புகிற செயல் தேவன் பாவம் செய்திருக்க முடியும் என்று நம்புவதாகும். “சகல பரிபூரணமும் அவருக்குள்ளே வாசமாயிருந்தது” (கொலோசெயர் 1:19). “ஏனென்றால், தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக, அவருக்குள் வாசமாயிருக்கிறது” என்று கொலோசெயர் 2:9 மேலும் கூறுகிறது.

இயேசு முழுமையாக மனிதனாக இருந்தாலும், நாம் பிறக்கும் அதே பாவம் நிறைந்த இயல்புடன் அவர் பிறக்கவில்லை. சாத்தான் அவரை சோதிக்கும்போது அவர் மெய்யாகவே நம்மைப்போலவே சோதிக்கப்பட்டார்; ஆனாலும் அவர் பாவம் செய்யவில்லை, ஏனென்றால் தேவனால் பாவம் செய்ய இயலாது. இது அவருடைய இயல்புக்கு எதிரானதாகும் (மத்தேயு 4:1; எபிரெயர் 2:18; 4:15; யாக்கோபு 1:13). பாவமானது நியாயப்பிரமாணத்தின் மீறல் என வரையறுக்கப்பட்டுள்ளது. தேவன் நியாயப்பிரமாணத்தை தோற்றுவித்தார், நியாயப்பிரமாணம் இயல்பாகவே தேவனாலே எவைகள் எல்லாம் செய்யலாம் மற்றும் செய்யக்கூடாது என்பதில் இருக்கிறது; ஆகையால், பாவம் என்பது தேவன் தன் இயல்பால் செய்யாத எல்லாவற்றையும் குறிக்கிறது.

சோதனையில் கடந்துபோவது அல்லது சோதிக்கப்படுவது என்பது பாவம் அல்ல. கொலை செய்வது அல்லது விபச்சாரத்தில் ஈடுபடுவது போன்ற நீங்கள் செய்ய விரும்பாத ஏதோவொரு காரியத்தை நீங்கள் செய்யும்படி உங்களை சோதிக்க முடியும். இந்த செயல்களில் பங்கு பெற எவ்விதமான விருப்பமும் உங்களுக்கு இல்லை, இருப்பினும் உங்களுக்கெதிராக ஒருவர் இப்படிப்பட்ட பாவம் செய்யும் வாய்ப்பை அளிக்கமுடியும். "சோதனைக்குட்படுதல்" என்கிற வார்த்தைக்கு இரண்டு பொருள் விளக்கங்கள் உள்ளன:

1) ஒரு பாவம் நிறைந்த முன்மொழிவை நீங்கள் கொண்டிருப்பதற்கு, நீங்கள் உங்களுடைய சொந்த பாவ சுபாவத்தினாலோ அல்லது உங்களுக்கு வெளியுள்ள ஒரு காரியத்தினாலோ அல்லது ஒரு நபராலோ பரிந்துரைக்கப்படலாம்.

2) உண்மையில் ஒரு பாவச்செயலில் பங்கேற்க மற்றும் அதன் நடவடிக்கை உங்கள் மனதில் ஏற்கனவே நடக்கிறது என்பதற்கு சாத்தியமான இன்பம் மற்றும் விளைவுகள் போதுமான தெளிவுகளாக இருக்கின்றன.

முதல் பொருள் விளக்கம் ஒரு பாவ செயல் / சிந்தனையை விவரிக்கவில்லை; இரண்டாவது பொருள் விளக்கம் செய்கிறது. நீங்கள் ஒரு பாவக் காரியத்தில் வாழ்ந்துகொண்டு, அதை எப்படிக் கொண்டு வர முடியும் என்பதை சிந்தித்துப் பார்க்கும்போதே, பாவத்தின் பாதையை நீங்கள் கடந்துவிட்டீர்கள். பொருள் விளக்கம் ஒன்றின்படி, இயேசு சோதிக்கப்பட்ட போதிலும் பாவத்தின் இயற்கை சுபாவத்தால் அவர் சோதிக்கப்படவில்லை, ஏனென்றால் அது அவருக்குள் இல்லை என்பதாலேயேயாகும். சாத்தான் சில பாவ காரியங்களை இயேசுவிடம் முன்வைத்தான், ஆனால் அவர் பாவத்தில் பங்குகொள்ள எந்த உள்ளான விருப்பமும் இல்லாதவராக இருந்தார். ஆகையால், நம்மைப்போலவே அவரும் சோதிக்கப்பட்டார் ஆனால் பாவம் செய்யாத மற்றும் பாவமில்லாதவதாகவே இருந்தார்.

இயேசு பாவம் செய்யக்கூடியவராக இருந்தார் என்று நம்புகிறவர்கள், இயேசு பாவம் செய்யாவிட்டால், அவர் உண்மையான நிலையில் சோதனையை அனுபவித்திருக்க முடியாது, எனவே பாவத்தினால் நமக்கு இருக்கிற போராட்டங்கள் மற்றும் சோதனைகளில் உண்மையிலேயே அவரால் நமக்காக பரிதவிக்கமுடியாது என்கிறார்கள். ஒன்றைப் புரிந்துகொள்வதற்கு அதனை அனுபவித்த அனுபவம் இருக்க வேண்டியதில்லை என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். எல்லாவற்றையுங்குறித்து தேவன் எல்லாமும் அறிந்திருக்கிறார். ஆக தேவனுக்கு பாவ ஆசை இல்லை, மற்றும் நிச்சயமாகவே பாவமும் செய்ததில்லை என்கிறபோதும், சொதிக்கப்படுகிறபோது தேவன் பாவம் என்ன என்பதை அறிந்து தெரிந்திருக்கிறார். நாம் அனுபவிக்கிற எல்லா காரியங்களையும் அனுபவியாமலே, தேவன் யாவற்றையும் அறிந்திருக்கிறார்.

சோதிக்கப்படுவது என்றால் என்னவென்பதை இயேசு அறிந்திருக்கிறார், ஆனால் பாவம் செய்வது என்பதை அவர் அறியாதிருக்கிறார். இது நமக்கு அவர் உதவுவதைத் தடுக்காது. நாம் மனிதனுக்கு உண்டாகிற பாவஞ்செய்வதற்கான பொதுவான நிலையில் சோதிக்கப்படுகிறோம் (1 கொரிந்தியர் 10:13). இந்த பாவங்கள் பொதுவாக மூன்று வெவ்வேறு வகைகளில் வரிசைப்படுத்தப்படுகின்றன: "கண்களின் இச்சை, மாம்சத்தின் இச்சையும், மற்றும் ஜீவவனத்தின் பெருமை" (1 யோவான் 2:16). ஏவாளுக்கு நேரிட்ட சோதனையையும் இயேசுவின் சோதனையையும் ஆராய்ந்தோமானால், ஒவ்வொரு சோதனையும் மூன்று வகைகளிலிருந்தும் வரும் சோதனைகளை நீங்கள் காணலாம். இயேசு எல்லா இடங்களிலும் மற்றும் நம்மைப்போல எல்லா நிலைகளிலும் சோதிக்கப்பட்டார், ஆனாலும் முழுமையான நிலையில் பரிசுத்தமாகவே இருந்தார். கறைபட்ட நமது பாவ இயல்புகள் நம்மை சில பாவங்களில் பங்கேற்க உள்ளார்ந்த விருப்பம் நமக்குள் இருந்தாலும், நாம் பாவத்தை கிறிஸ்துவின் மூலமாக ஜெயித்து, இனி பாவத்திற்கு அடிமைகளாக இராமல், தேவனுக்கு அடிமைகளாக இருக்க வேண்டும் (ரோமர் அதிகாரம் 6, குறிப்பாக வசனங்கள் 2 மற்றும் 16-22) ).

English



முகப்பு பக்கம்

இயேசு பாவஞ்செய்யக் கூடியவராக இருந்தாரா (பாவஞ்செய்யக்கூடியவர் அல்லது பாவஞ்செய்ய முடியாதவர்)? இயேசு பாவஞ்செய்ய முடியாதவராக இருந்தாரானால், அவர் சோதிக்கப்படுதலின் அவசியம் என்ன?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries