கூட்டு ஜெபம் முக்கியமானதா? தனி ஜெபத்தை விட கூட்டு ஜெபம் மிகவும் வல்லமை ஆனதா?


கேள்வி: கூட்டு ஜெபம் முக்கியமானதா? தனி ஜெபத்தை விட கூட்டு ஜெபம் மிகவும் வல்லமை ஆனதா?

பதில்:
சபையாரின் வாழ்கையில் ஆராதனை,ஆரோக்கியமான உபதேசம்,திருவிருந்து,மற்றும ஐக்கியம் எவ்வளவு முக்கியமானதோ, அதே போல் கூட்டு ஜெபம் முக்கிய பங்காக இருக்கிறது. ஆதி திருசபையில் அப்போஸ்தலருடைய உபதேசத்தை கற்றுகொள்ளவும், அப்பம் பிட்குதலிலும், மற்றும் ஒருமித்து ஜெபிக்கவும் வழக்கமாய் சந்தித்தார்கள் (அப்போஸ்தலர் 2:42). நாம் மற்ற விசுவாசிகளுடன் சேர்ந்து ஜெபிக்கும் போது, மிகவும் நன்மையாகவும் மற்றும் பலனாக இருக்க முடியும். கூட்டு ஜெபம் நம்மை பக்திவிருத்தி அடையசெய்கிறது மற்றும் விசுவாசிகளாகிய நம்மை இனைக்கிறது. நம் ஆண்டவரும் இரட்கருமாகிய இயேசுவை துதிக்கும் சத்தத்தை கேட்கையில், நம் ஒவ்வொருவருக்குள் வசிக்கிற பரிசுத்த ஆவியானவர் நம் இருதயங்களை மகிழ்ச்சியாக்குகிறார் மற்றும் வாழ்க்கையில் எங்கும் காணாத ஒரு விசேஷித்த ஐக்கயத்தி்ல் ஒன்றினைக்கிறார்.

தனிமையில் இருப்பவர்களும் மற்றும் வாழ்க்கையின் பாரங்களால் பாடுபடுகிறவர்களும், தங்களுக்காக மற்றவர்கள் கிருபாசனத்திற்கு முன்பாக ஜெபிக்கும்போது, அது அவர்களுக்கு மிகவும் உற்ச்சாகமாய் இருக்கும். நாம் மற்றவர்களுக்காக பரிந்துபேசும்போது, நமக்குள் அவர்களை குறித்த அன்பும் கரிசனையும் பெருகும். அதே சமயத்தில், கூட்டு ஜெபம் ஜெபிக்கிறவர்களின் இருதயங்களை பிரதிபலிக்கிறதாய் இருக்கிறது. தேவனுக்கு முன்பாக நாம் வரும்போது, நமக்குள் தாழ்மை (யாக்கோபு 4:10), சத்தியம் (சங்கீதம் 145:18), கீழ்படிதல் (1 யோவான் 3:21,22), நன்றி செலுத்துதல் (பிலிப்பியர் 4:6), மற்றும் தைரியம் (எபிரெயர் 4:16) இருக்க வேண்டும். துக்கமான காரியம் என்னவென்றால், கூட்டு ஜெபம் தேவனிடம் ஏறெடுக்கும் ஜெபமாய் இல்லாமல் கேட்கிறவர்களுக்காய் ஜெபமாய் மாற கூடும். இதை குறித்து இயேசு (மத்தேயு 6:5-8) வசனங்களில் எச்சரிக்கிறார். நமது ஜெபங்கள் பார்வைக்காக, நீண்டதாக மற்றும் மாய்மாலமானதாக இருக்காமல், நமது அறைகளில் இரகசியமாய் ஜெபிக்கின்ற ஜெபமாய் இருக்க வேண்டும் என்று சொல்லுகிறார்.

தனிப்பட்ட ஜெபங்களை விட கூட்டு ஜெபங்கள் மிகவும் வல்லமையுடையது என்று வேதத்தில் எங்கும் சொல்லப்படவில்லை. அநேக கிறிஸ்தவர்கள் ஜெபம் என்றால் தேவனிடத்தில் இருந்து ஏதோ ஒன்றை பெருவதாக நிணைக்கிறார்கள்,ஆகையால் கூட்டு ஜெபத்திலும் தங்களுக்கு வேண்டியவைகளின் பட்டியலை மனப்பாடமாய் ஒப்புவிக்கிறார்கள். வேதாகம ஜெபங்களில் அநேக பகுதிகள் உண்டு,இவை எல்லாம் பரிசுத்தமும் பூரணமும் மற்றும் நீதியின் தேவனிடம் நெருங்கிய ஐக்கியம் வைக்க உதவுகிறது.இப்படிப்பட்ட தேவன் தமது சிருஷ்டிகளுக்கு செவிசாய்க்கிறார் என்பதே நம்மை அதிகமாய் துதிக்கவும் மற்றும் ஆராதிக்கவும் வைக்கும் (சங்கீதம் 27:4;63:1-8), மனந்திரும்மவும், அறிக்கை செய்யவும் வைக்கும் (சங்கீதம் 51; லூக்கா 18:9-14) நன்றியுள்ளவர்களாய் தேவனுக்கு ஸ்தோத்திரங்களை செலுத்த வைக்கும் (பிலிப்பியர் 4:6; கொலோசியர் 1:12), மற்றவர்களுக்காக உண்மையாக பரிந்துபேசவைக்கும் (1 தெசலோனிக்கேயர் 1:11;2:16).

ஜெபம் என்பது தேவனுக்கு ஒத்துழைத்து அவரின் திட்டத்தை நிறைவேற்றுவதாகும், நமது திட்டத்திற்கு அவரை வணங்க வைப்பது அல்ல. நமது விருப்பங்களை முற்றிலும்விட்டு, நமது சூழ்நிலைகளை நன்றாய் அறிந்திருக்கிற மற்றும் நாம் கேட்கும் முன் நமக்கு என்ன வேண்டும் (மத்தேயு 6:8) தெரிந்திருக்கிற தேவனுக்கு நம்மை அற்பணிக்கும் போது நமது ஜெபங்கள் உயர்ந்தநிலை அடைகிறது. ஆகையால் தேவ சித்தத்திற்கு அற்பணிக்கப்பட்ட ஜெபங்கள் எப்பொழுதும் தேவனிடம் இருந்து சரியான பதில்களை பெறும், அது தனிப்பட்ட ஜெபமாக இருந்தாலும் சரி அல்லது ஆயிரம் பேர்களின் ஜெபமாய் இருந்தாலும் சரி.

கூட்டு ஜெபம் தேவனுடைய கரத்தை அசைக்கிறது என்ற கருத்து இந்த வசனத்தின் தவறான விளக்கத்தில் இருந்து வந்தது “அல்லாமலும், உங்களில் இரண்டுபேர் தாங்கள் வேண்டிக்கொள்ளப்போகிற எந்தக் காரியத்தைக்குறித்தாகிலும் பூமியிலே ஒருமனப்பட்டிருந்தால், பரலோகத்திலிருக்கிற என் பிதாவினால் அது அவர்களுக்கு உண்டாகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

ஏனெனில், இரண்டு பேராவது மூன்று பேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன் என்றார்” (மத்தேயு 18:19,20). இந்த வசனங்கள் ஒரு பெரிய வேதப்பகுதியில் இருந்து எடுக்கப்பட்டவை: பாவம் செய்த சபையின் உறுப்பினர் விஷயத்தில் சபை எடுக்க வேண்டிய ஒழுக்க நடைமுறைகளை குறித்து தான் இந்த பகுதி சொல்லுகிறது. இந்த பகுதியை எடுத்து விவாசிகள் எதை குறித்தாகிலும் ஒருமனபட்டு தேவனிடம் கேட்கலாம் என்று விலக்குவது, சபை ஒழுக்கத்திற்கு சரிபட்டதாக இருக்காது மற்றும் வேதத்தில் உள்ள மற்ற வசனங்களையும் மற்றும் தேவனின் சர்வ வல்லமையை மறுக்கிறதாகவும் இருக்கும்.

இதுவும் அல்லாமல், இரண்டு மூன்று பேர் கூடி ஜெபிக்கும்போது, ஏதோ ஒரு மந்திர சக்தி ஜெபத்தை வல்லமை உடையதாக்குகிறது என்ற நம்பிக்கையை வேதம் ஆமோதிக்கிறது இல்லை. ஆம், இருவர் மூவர் கூடி ஜெபிக்கும்போது, இயேசு அங்கிருக்கிறார். ஆனால், அதே போலவே தான் ஒருவர் ஜெபிக்கும்போது அவர் வருகிறார். ஜெபிக்கும் அந்த நபர் மற்றவர்களை விட ஆயிர மைல் தூரத்தில் இருந்தாலும், அது தேவனுக்கு ஒரு பொருட்டல்ல. கூட்டு ஜெபம் ஐக்கியத்தை உண்டுபன்னுகிறது, அதனால் தான் அது முக்கியமானது (யோவான் 17:22-23). விசுவாசிகள் ஒருவரை ஒருவர் உற்சாக படுத்தவும் (1 தெசலோனிக்கேயர் 5:11)மற்றும் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தி நற்க்கிரியைகளை செய்யவதும் (எபிரெயர் 10:24).கூட்டு ஜெபத்தின் முக்கிய அம்சமாய் இருக்கிறது.

English
தமிழ் முதற் பக்கத்திற்குச் செல்க
கூட்டு ஜெபம் முக்கியமானதா? தனி ஜெபத்தை விட கூட்டு ஜெபம் மிகவும் வல்லமை ஆனதா?