நம்முடைய பாவங்கள் ஏற்கனவே மன்னிக்கப்பட்டிருந்தால் அவற்றை ஏன் அறிக்கைசெய்ய வேண்டும் (1 யோவான் 1:9)?


கேள்வி: நம்முடைய பாவங்கள் ஏற்கனவே மன்னிக்கப்பட்டிருந்தால் அவற்றை ஏன் அறிக்கைசெய்ய வேண்டும் (1 யோவான் 1:9)?

பதில்:
“தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படியே, நம்மை இயேசுகிறிஸ்துமூலமாய்த் தமக்குச் சுவிகாரபுத்திரராகும்படி முன் குறித்திருக்கிறார். அவருடைய கிருபையின் ஐசுவரியத்தின்படியே, இவருடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது. அந்தக் கிருபையை அவர் சகல ஞானத்தோடும் புத்தியோடும் எங்களிடத்தில் பெருகப்பண்ணினார்” (எபேசியர் 1:6-8) என்று பவுல் எழுதினார். இந்த மன்னிப்பு இரட்சிப்பைக் குறிக்கிறது, அதில் தேவன் நம்முடைய பாவங்களை நம்மிலிருந்து எடுத்து அவற்றை “மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ”, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மை விட்டு விலக்கினார் (சங்கீதம் 103:12). இயேசு கிறிஸ்துவை இரட்சகராகப் பெற்றபின் தேவன் நமக்குக் கொடுக்கும் நீதியான மன்னிப்பு இது. நம்முடைய கடந்த கால, நிகழ்கால மற்றும் எதிர்கால பாவங்கள் அனைத்தும் நீதித்துறை அடிப்படையில் மன்னிக்கப்படுகின்றன, அதாவது நம்முடைய பாவங்களுக்காக நித்திய தீர்ப்பை நாம் அனுபவிக்க மாட்டோம். நாம் பூமியில் இருக்கும்போது பாவத்தின் விளைவுகளை நாம் அடிக்கடி அனுபவிக்கிறோம், இருப்பினும், இது கேள்விக்கு நம்மை அழைத்துச் செல்கிறது.

எபேசியர் 1:6-8 மற்றும் 1 யோவான் 1:9 ஆகியவற்றுக்கு இடையிலான வேறுபாடு என்னவென்றால், ஒரு தந்தை மற்றும் மகனைப் போலவே “உறவினர்” அல்லது “குடும்ப” மன்னிப்பு என்று நாம் அழைப்பதை யோவான் கையாளுகிறார். உதாரணமாக, ஒரு மகன் தன் தந்தையிடம் ஏதேனும் தவறு செய்தால், அவனது எதிர்பார்ப்புகளுக்கோ விதிகளுக்கோ குறைந்து போனால் - மகன் தன் தந்தையுடனான ஐக்கியத்திற்கு/கூட்டுறவுக்குத் தடையாக இருக்கிறான். அவன் தனது தந்தையின் மகனாகத்தான் இருக்கிறார், ஆனால் அவர்களுக்கு இடையேயுள்ள உறவு பாதிக்கப்படுகிறது. மகன் தன் தந்தையிடம் தவறு செய்ததாக ஒப்புக் கொள்ளும் வரை அவர்களின் ஐக்கியம் தடைபடும். இது தேவனோடு அதே வழியில் செயல்படுகிறது; நம்முடைய பாவத்தை ஒப்புக்கொள்ளும் வரை அவருடனான நம்முடைய ஐக்கியம் தடைபடுகிறது. நம்முடைய பாவத்தை நாம் தேவனிடம் அறிக்கை செய்து ஒப்புக் கொள்ளும்போது, ஐக்கியமானது மீட்டெடுக்கப்படுகிறது. இது தொடர்புடைய மன்னிப்பு (relational forgiveness) ஆகும்.

"நிலையான" மன்னிப்பு, அல்லது நீதியான மன்னிப்பு என்பது கிறிஸ்துவில் உள்ள ஒவ்வொரு விசுவாசியாலும் பெறப்படுகிறது. கிறிஸ்துவின் சரீரத்தின் அங்கங்கள் என்ற நிலையில், நாம் செய்த ஒவ்வொரு பாவத்திற்காகவும் மன்னிக்கப்பட்டுள்ளோம் அல்லது செய்யப்போகிற பாவத்திற்கு மன்னிக்கப்பட்டோம். சிலுவையில் கிறிஸ்து தமது மரணத்தின் மூலமாக செலுத்திய விலை பாவத்திற்கு எதிரான தேவனுடைய கோபத்தை திருப்திப்படுத்தியுள்ளது/ஆற்றியுள்ளது, மேலும் பலி அல்லது விலைக்கிரயம் தேவையில்லை. “எல்லாம் முடிந்தது” என்று இயேசு சொன்னபோது, அவர் அதைத்தான் குறிப்பிட்டார். நமது நிலையான மன்னிப்பு (positional forgiveness) அங்கும் அங்கும் பெறப்பட்டது.

நாம் நமது பாவத்தினை அறிக்கைசெய்து அவற்றை ஒப்புகொள்வது கர்த்தருடைய ஒழுங்கு நடவடிக்கையிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள உதவும். நாம் பாவத்தை ஒப்புக்கொள்ளத் தவறினால், அதை ஒப்புக்கொள்ளும் வரை தேவனின் ஒழுங்கு நடவடிக்கை நிச்சயமாக வரும். முன்பு கூறியது போல, நம்முடைய பாவங்கள் இரட்சிப்பில் மன்னிக்கப்படுகின்றன (நிலையான மன்னிப்பு), ஆனால் தேவனோடு நம்முடைய அன்றாட வாழ்வில் நல்ல ஐக்கியத்தில் உள்ள நிலையில் இருக்க வேண்டும் (தொடர்புடைய மன்னிப்பு). தேவனுடனான சரியான ஐக்கியம் நம் வாழ்வில் உறுதிப்படுத்தப்படாத பாவத்தால் நடக்க முடியாது. ஆகவே, தேவனோடு நெருங்கிய ஐக்கியத்தை/கூட்டுறவைப் பேணுவதற்காக, நாம் பாவம் செய்தோம் என்பதை அறிந்தவுடன் நம்முடைய பாவங்களை தேவனிடம் அறிக்கைசெய்து ஒப்புக்கொள்ள வேண்டும்.

English


முகப்பு பக்கம்
நம்முடைய பாவங்கள் ஏற்கனவே மன்னிக்கப்பட்டிருந்தால் அவற்றை ஏன் அறிக்கைசெய்ய வேண்டும் (1 யோவான் 1:9)?