சபையின் ஒழுங்கு நடவடிக்கை குறித்து வேதாகமம் என்ன கூறுகிறது?


கேள்வி: சபையின் ஒழுங்கு நடவடிக்கை குறித்து வேதாகமம் என்ன கூறுகிறது?

பதில்:
சபையின் ஒழுங்கு நடவடிக்கையானது சபையை பாதுகாப்பதற்காக உள்ளூர் சபை அங்கத்தினர்களிடையே காணப்படுகிற பாவமுள்ள நடத்தைகளை திருத்தும் செயலாகும். சபையின் அங்கத்தினர்களுக்கு தேவனோடு சரியான பாதையில் நடப்பதற்கான தங்களுக்குள்ள நட்புறவுகளை நிலைநாட்டி, பிற விசுவாசிகளுடனான நட்புறவுகளை புதுப்பித்தலாகும். சில சந்தர்ப்பங்களில், சபையின் ஒழுங்கு நடவடிக்கை சபையின் ஐக்கியத்திலிருந்து விலக்கி வைப்பதற்கு வழி வகுக்கிறதாக இருக்கும், இது சபையின் உறுப்பினர் மற்றும் தனி நபரிடமிருந்து முறைசாரா பிரிவு ஆகியவற்றிலிருந்து ஒருவரை முறையாக அகற்றுவதாகும்.

மத்தேயு 18:15-20 வரையிலுள்ள வசனங்கள் திருச்சபையானது ஒழுங்கு நடவடிக்கையை கடைப்பிடிக்க ஒரு சபையின் செயல்முறை மற்றும் அதிகாரம் கொடுக்கிறது. ஒரு தனி நபர் (வழக்கமாக குற்றஞ்சாட்டப்பட்ட நபர்) தனிப்பட்ட முறையில் குற்றம் இழைத்தவரிடம் செல்ல வேண்டும் என்று இயேசு நமக்கு அறிவுறுத்துகிறார். குற்றவாளி தனது பாவத்தை ஒப்புக்கொண்டு மனந்திரும்ப மறுத்தால், இரண்டு அல்லது மூன்று பேர் அவரிடம் சென்று நிலைமையை பற்றிய விவரங்களை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். இன்னமும் மனந்திரும்பாவிட்டால், மனந்திரும்புதலுக்கு இரு வாய்ப்புகள் கொடுத்தபோதும், குற்றம் புரிந்தவர் தொடர்ந்து பாவத்தில் உறுதியுடன் இருக்கிறார் என்கிறபோது, காரியத்தை சபைக்கு முன்பாக கொண்டு செல்லவேண்டும். மேலும் குற்றவாளி பின்னர் மனந்திரும்பி பாவத்தின் நடத்தையை விட்டுவிட மூன்றாவது வாய்ப்பு அவருக்கு உள்ளது. அதாவது சபையின் ஒழுங்கு நடவடிக்கையின் செயல்முறையாக்கம் செய்யும் சமயத்தில் அவன் குற்றத்தை அவனுக்கு உணர்த்து; அவன் உனக்குச் செவிகொடுத்து மனந்திரும்பினால், “உன் சகோதரனை ஆதாயப்படுத்திக்கொண்டாய்." (வசனம் 15). ஆயினும், குற்றம் புரிந்த அந்த எந்தவித நேர்மறையான பதில் இல்லாமல் ஒழுங்கு நடவடிக்கையின் மூன்றாவது படியையும் கடந்து தொடர்ந்து தன பாவத்தில் இருந்தால், பின்னர், இயேசு கூறியதுபோல, "அவன் உனக்கு அஞ்ஞானியைப்போலவும் ஆயக்காரனைப்போலவும் இருக்க வேண்டும்" (வசனம் 17).

ஒரு தந்தை தனது பிள்ளைகளை ஒழுங்குபடுத்துவதில் மகிழ்ச்சியடைய மாட்டார் என்பது போலவே, சபையின் ஒழுங்கு நடவடிக்கை செயல்முறை ஒருபோதும் இனிமையானது அல்ல. சில சமயங்களில், சபையின் ஒழுங்கு நடவடிக்கை தேவையாயிருக்கிறது. சபையின் ஒழுங்கு நடவடிக்கை எடுத்தலின் நோக்கம் உற்சாகமாக இருக்க வேண்டும் அல்லது ஒரு மகா பரிசுத்தத்தை நீங்கள் அணுகுமுறை காட்ட வேண்டும் என்பதற்காக அல்ல. மாறாக, சபையின் ஒழுங்கு நடவடிக்கை எடுத்தலின் குறிக்கோள், தேவனோடும் பிற விசுவாசிகளோடும் ஒரு முழுமையான ஐக்கியத்திற்காக மறுசீரமைக்கப்படுவதாகும். இந்த ஒழுங்கு நடவடிக்கை தனிப்பட்ட நிலையில் இரகசியமாக ஆரம்பிக்கப்பட்டு பின்பு படிப்படியாக வெளிப்படையாக சபையின் மக்கள் யாவருக்கும் தெரியும் வண்ணம் ஆகிவிடுகிறது. இந்த நடவடிக்கையானது அன்போடும் தேவனுக்குக் கீழ்ப்படிவதன் மூலமும், சபையிலுள்ள மற்றவர்களுக்காக தேவபயமுள்ள நிலையிலும் இருக்க வேண்டும்.

சபையின் ஒழுங்கு நடவடிக்கை எடுத்தலைப்பற்றிய வேதாகமத்தின் அறிவுரைகள் சபையில் அங்கம் வகிப்பதன் அவசியத்தை வலியுறுத்துகின்றன. சபை மற்றும் அதன் போதகர் ஒரு குறிப்பிட்ட குழுவினர் (உள்ளூர் சபையின் உறுப்பினர்கள்) ஆன்மீக நல்வாழ்வுக்கு பொறுப்பாளிகள் ஆகும், மற்றபடி அந்த ஊரிலுள்ள யாவரும் அல்ல. சபையின் ஒழுங்கு நடவடிக்கையின் சந்தர்ப்பத்தில், பவுல் இவ்வாறு கேட்கிறார், “புறம்பே இருக்கிறவர்களைக்குறித்துத் தீர்ப்புச்செய்கிறது என் காரியமா? உள்ளே இருக்கிறவர்களைக்குறித்தல்லவோ நீங்கள் தீர்ப்புச்செய்கிறீர்கள்?” (1 கொரிந்தியர் 5:12). சபையானது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவேண்டிய நபர் சபைக்குள் இருக்கிறவரும் தான் செய்த காரியங்களுக்கு உத்தரவாதியாகவும் இருக்க வேண்டும். அவர் கிறிஸ்துவை விசுவாசிக்கிறேன் என்று கூறுகிறார், ஆனால் மறுபடியும் தொடர்ந்து பாவத்தில் இருக்கிறார்.

உள்ளூர் சபையின் ஒழுங்கு நடவடிக்கையைப் பற்றிய ஒரு உதாரணத்தை வேதாகமம் தருகிறது – கொரிந்து சபை (1 கொரிந்தியர் 5:1-13). இந்த விஷயத்தில், அந்த ஒழுங்கு நடவடிக்கை அந்த நபரை ஐக்கியத்திலிருந்து விலக்கியது, அப்போஸ்தலனாகிய பவுல் இந்த ஒழுங்கு நடவடிக்கைக்கான சில காரணங்களை தருகிறார். முதலாவது பாவமானது ஒரு புளிப்பு போன்றது; அதை இருக்க அனுமதித்தால், அது அதைச் சுற்றியுள்ளவைகளிலும் அப்படியே பரவுகிறது, அதாவது “கொஞ்சம் புளித்தமா பிசைந்தமா முழுவதையும் புளிப்பாக்குகிறது” (1 கொரிந்தியர் 5:6-7). மேலும், நாம் பாவத்திலிருந்து விலகி இருக்கும்படிக்கு இயேசு நம்மை இரட்சித்தார் என்று பவுல் விளக்குகிறார், நாம் "புளிப்பில்லாமல்" அல்லது ஆவிக்குரிய சிதைவை ஏற்படுத்தும் காரியங்களிலிருந்து விடுதலையாவதற்காக இயேசு நம்மை இரட்சித்திருக்கிறார் (1 கொரிந்தியர் 5:7-8). தமது மணவாட்டியாகிய திருச்சபைக் குறித்து கிறிஸ்துவின் ஆசை, அவள் தூய்மையும் தன்னை கெடுத்துக்கொள்ளாதவளாகவும் இருக்க வேண்டும் என்பதே (எபேசியர் 5:25-27). அவிசுவாசிகளுக்கு முன்பாக கிறிஸ்து இயேசுவின் சாட்சியும் (அவருடைய சபையும்) முக்கியமானவையாகும். தாவீது பத்சேபாளுடன் பாவஞ்செய்தபோது, அவருடைய பாவத்தின் விளைவுகளில் ஒன்று, ஒரு உண்மையான தேவனுடைய நாமம் தேவனுடைய எதிரிகளால் தூஷிக்கப்பட்டதாகும் (2 சாமுவேல் 12:14).

சபையானது எடுக்கும் எந்தஒரு ஒழுங்கு நடவடிக்கையும், ஒரு உறுப்பினர் பயபக்திற்குரிய துக்கம் வழியாக கடந்து சென்று உண்மையான மனந்திரும்புதலைப் பற்றிக்கொள்வதில் வெற்றி கொள்கிறது. மனந்திரும்புதல் ஏற்படுகையில், அந்த தனிப்பட்ட நபர் மீண்டுமாக ஐக்கியத்திற்குள் மீட்டெடுக்க முடியும். 1 கொரிந்தியர் 5-வது அதிகாரத்திலுள்ள வேதபகுதியில் சம்பந்தப்பட்ட மனிதன் மனந்திரும்பினான், அதனால் பவுல் பிற்பாடு சபையை மீண்டுமாக அவனை அவர்கள் ஐக்கியதிற்குள்ளாக ஏற்றுக்கொள்ளும்படி சபையை ஊக்குவித்தார் (2 கொரிந்தியர் 2:5-8). துரதிருஷ்டவசமாக, ஒழுங்கு நடவடிக்கையானது ஒழுக்க ரீதியிலும், அன்பிலும் செய்யும்போதும்,அவர்களில் மறுசீரமைப்பைக் கொண்டுவருவதில் எப்போதும் வெற்றிகரமாக இல்லை. திருச்சபை ஒழுங்கு நடவடிக்கை மூலமாக மனந்திரும்புதலைக் கொண்டுவருவதில் தோல்வியுற்றாலும், உலகில் நல்ல சாட்சியத்தைத் தக்கவைத்துக்கொள்வது போன்ற நல்ல நோக்கங்களை நிறைவேற்றுவது தேவையாயிருக்கிறது.

ஒழுங்கு நடவடிக்கைக்கு கட்டுப்படாத தன் மனம் விரும்பியதுபோல வாழுகிற ஒரு இளைஞரின் நடத்தையைக் குறித்து அறிந்த சாட்சிகளாக இருக்கிறோம். இது ஒரு அழகான பார்வை அல்ல. குழந்தைக்கு மிகுந்த அனுதாபமான பெற்றோர் அன்பும், குழந்தைக்கு ஒரு மோசமான எதிர்காலத்திற்கான வழிகாட்டல் இல்லாமல் போய்விடுகிறது. ஒழுங்கற்ற, மற்றும் கட்டுப்பாடின்றி போய்விட்ட குழந்தை அமைதியான உறவுகளை உருவாக்குகிற மற்றும் எந்த வகையான அமைப்பில் நன்றாக செயல்பட வைப்பதிலிருந்து மாற்றி வைக்கிறது. அதேபோல், சபையில் ஒழுங்கு நடவடிக்கையானது, சில நேரங்களில் அவசியம் என்கிறபோதிலும் எப்போதுமே அது மகிழ்ச்சியோ, அல்லது சுலபமோ அல்ல. உண்மையில், அது அன்புள்ளதாக இருக்கிறது. அது தேவனால் கட்டளையிடப்பட்டுள்ளது.

English


முகப்பு பக்கம்
சபையின் ஒழுங்கு நடவடிக்கை குறித்து வேதாகமம் என்ன கூறுகிறது?