settings icon
share icon
கேள்வி

சபைக்கூடிவருதல்’ ஏன் முக்கியமான ஒன்று?

பதில்


வேதாகமம் நாம் மற்ற விசுவாசிகளோடு தேவனை ஆராதிக்கவும், அவருடைய வார்த்தையைக் கற்றுக் கொண்டு ஆவிக்குரிய வளர்ச்சியடையவும் சபையில் கூடிவரவேண்டும் என்று கூறுகின்றது. ஆதிதிருச்சபை‘‘ அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், அந்நியோந்தியத்திலும், அப்பம் பிட்குதலிலும், ஜெபம் பண்ணுதலிலும் உறுதியாய்த் தரித்திருந்தார்கள்’’ (அப்போஸ்தலர் நடபடிகள் 2:42). நாம் அந்த முறையான பக்தியையும் மாதிரியாகக் கொண்டு அதையே நாமும் செய்யவேண்டும். அப்போது, அவர்களுக்கென்று ஒரு சபைக்கட்டிடம் இல்லை, ஆனாலும் ‘‘அவர்கள் ஒருமனப்பட்டவர்களாய்த் தேவாலயத்திலே அனுதினமும் தரித்திருந்து, வீடுகள் தோறும் அப்பம் பிட்டு மகிழ்ச்சியோடும் கபடமில்லாத இருதயத்தோடும் போஜனம்பண்ணி” (அப்போஸ்தலர் நடபடிகள் 2:46). எங்கு சந்திப்பு ஏற்பட்டாலும், விசுவாசிகள் மற்ற விசுவாசிகளோடு ஐக்கியத்திலும், தேவனுடைய வார்த்தையை போதிப்பதிலுமே விருத்தியடைகிறவர்களாயிருந்தார்கள்.

சபைக் கூடிவருதல் என்பது ஒரு ‘நல்ல ஆலோசனை’ மாத்திரம் கிடையாது. அதுவே விசுவாசிகளைக் குறித்த தேவனுடைய சித்தம். எபிரெயர் 10:25 இவ்வாறாக கூறுகின்றது ‘‘ சபைக் கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறது போல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திச் சொல்லக்கடவோம், நாளானது சமீபித்துவருகிறதை எவ்வளவாய்ப் பார்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்தி சொல்ல வேண்டும்’’. ஆதித் திருச்சபையிலும் கூட சிலர் மற்ற விசுவாசிகளைச் சந்திக்காத கெட்ட பழக்கமுடையவர்களாயிருந்தார்கள். எபிரெய நிருபத்தை எழுதியவர் அது சரியான வழி இல்லையென்று கூறுகிறார். சபைக் கூடிவருதல் கொடுக்கின்ற உற்சாகம் நம் ஒவ்வொருவருக்கும் தேவையான ஒன்று. கடைசிக் காலத்திலும் நாம் சபைக் கூடிவருகிறதில் அர்ப்பணிப்புள்ளவர்களாயிருக்க வேண்டும்.

சபை என்ற இடத்தில் தான் விசுவாசிகள் ஒருவரையொருவர் நேசிக்க முடியும் ( I யோவான் 4:12 ), உற்சாகப்படுத்த முடியும் (எபிரேயர் 3:13) , ஒருவரையொருவர் நேசிக்கவும், நற்கிரியைகள் செய்ய உந்த முடியும் (எபிரெயர்10:24), ஒருவரையொருவர் கனம் பண்ண முடியும் (ரோமர் 12:10), ஒருவருக்கொருவர் தயவாயும் மனதுருக்கத்துடனும் இருக்க முடியும் (எபேசியர் 4:32).

ஒரு மனிதன் இரட்சிப்புக்காக இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கும்போது, அவனோ அவளோ கிறிஸ்துவின் சரீரத்தில் அங்கத்தினர் ஆகிறார்கள். (I கொரிந்தியர்12:27) சபையாகிய சரீரம் ஒழுங்காக வேலை செய்ய வேண்டுமானால், அதன் ”அவையவங்கள்” அங்கு இருந்து வேலை செய்ய வேண்டும். ( I கொரிந்தியர்12:14-20 ) சபைக்கு சென்று வருவது மாத்திரம் அல்ல, நமக்கு தேவன் கொடுத்திருக்கின்ற ஆவிக்குரிய வரங்களை பயன்படுத்தி மற்றவர்களுக்கு ஊழியம் செய்வதில் நம்மை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் (எபேசியர் 4:11-13).

ஒரு விசுவாசி முழுமையான ஆவிக்குரிய முதிர்ச்சியை அவருடைய வரங்கள் கிரியைச் செய்ய இடங்கொடாமல் பெற முடியாது. நம்மெல்லோருக்கும் மற்ற விசுவாசிகளுடைய ஒத்தாசையும் உற்சாகப்படுத்துதலும் தேவை. (I கொரிந்தியர் 12:21-26).

இந்தக் காரணங்களுக்காகவும், இதைவிட அதிகமானவைகளுக் காகவும், சபைக் கூடிவருதல், பங்கேற்பு மற்றும் ஐக்கியம் ஆகியவை ஒரு விசுவாசியின் வாழ்க்கையில் நிரந்தரத் தன்மையாக இருக்க வேண்டும். வாரந்திர சபைக் கூடிவருதல் என்பது விசுவாசிகளுக்கு தேவையே இல்லை, ஆனால் ஒருவன் கிறிஸ்துவுக்குள் இருந்தால் அவன் தேவனை ஆராதிக்கவும், அவருடைய வார்த்தையை பெற்றுக் கொள்ளவும், மற்ற விசுவாசிகளோடு ஐக்கியங்கொள்ளவும் விருப்பமுள்ளவனாயிருக்க வேண்டும்.

இயேசுவே சபைக்கு மூலைக்கல்லாயிருக்கிறார் ( I பேதுரு), நாமோ ‘‘ ஜீவனுள்ள கற்களைப்போல ஆவிக்கேற்ற மாளிகையாகவும், இயேசு கிறிஸ்து மூலமாய் தேவனுக்குப்பிரியமான ஆவிக்கேற்ற பலிகளைச் செலுத்தும்படிக்கும் பரிசுத்த ஆசாரியக்கூட்டமாகவும் கட்டப்பட்டு வருகிறீர்கள்’’ ( I பேதுரு 2:5) தோவனுடைய ‘ஆவிக்குரிய வீட்டின் கட்டுமானப் பொருட்களாக இருக்கிற நாம், ஒருவரோடொருவர் தொடர்புடையவர்களாயிருக்கிறோம், அந்தத் தொடர்பு சபையாகிய நாம் சபைக்குச் செல்லும்போது வெளிப்படையாகத் தெரிகின்றது.

Englishமுகப்பு பக்கம்

சபைக்கூடிவருதல்’ ஏன் முக்கியமான ஒன்று?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries