settings icon
share icon
கேள்வி

கிறிஸ்தவ தந்தையரைக் குறித்து வேதாகமம் என்ன சொல்கிறது?

பதில்


“நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு பலத்தோடும் அன்புகூருவாயாக” (உபாகமம் 6:5) என்பதுதான் வேதாகமத்தின் பிரதானமான கட்டளையாகும். இவ்வதிகாரத்தின் முதலாம் வசனத்திலே இப்படியாக வாசிக்கிறோம், “நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து, உயிரோடிருக்கும் நாளெல்லாம் நீயும் உன் குமாரனும் உன் குமாரத்தியும், நான் உனக்கு விதிக்கிற அவருடைய எல்லாக் கற்பனைகளையும் கட்டளைகளையும் கைக்கொள்ளுகிறதினால் உன் வாழ்நாட்கள் நீடித்திருக்கும்”. இதைத்தொடர்ந்து 6-வது வசனத்தில், இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிற இந்த வார்த்தைகள் உன் இருதயத்தில் இருக்கக்கடவது என்றும் நீ அவைகளை உன் பிள்ளைகளுக்குக் கருத்தாய் போதித்து, நீ உன் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிறபோதும், பாடுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக் குறித்துப் பேசு என்றும் வாசிக்கிறோம் (வசனங்கள் 6-7).

தேவனுடைய வழிகளையும் வார்த்தைகளையும் தகப்பனானவன் தன் பிள்ளைகளுக்கு அவர்களின் ஆவிக்குரிய வளர்ச்சி மற்றும் நல்வாழ்வுக்கு ஏதுவாக விடாமுயற்சியோடு போதிக்க வேண்டும் என்பதை இஸ்ரவேலரின் வரலாறு நமக்கு வெளிப்படுத்துகிறது. தேவனுடைய வார்த்தைக்கு கீழ்படிதலுள்ள எந்த தகப்பனும் அப்படியே செய்கிறான். இதைத்தான் நீதிமொழிகள் 22:6 ல் வாசிக்கிறோம், “பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்”. இதில் “நடத்து” என்பது முதலாவது தந்தையும் தாயும் கொடுக்கும் உபதேசத்தை குறிக்கிறது; அதாவது பிள்ளைகளுடைய இளம் / ஆரம்ப கல்வியாகும். பிள்ளைகள் வாழ்க்கை முறையை தெளிவாய் விளங்கிக்கொள்ள வேண்டும் என்கிற உள்நோக்கில் இந்த நடத்தை இருக்கவேண்டும். ஆரம்பத்திலேயே பிள்ளைகளுக்கு இப்படிப்பட்ட பயிற்ச்சியைத் தொடக்குவது மிகவும் முக்கியமானதாகும்.

எபேசியர் 6:4 ல் சுருக்கமாக தகப்பனுக்குரிய எதிர்மறை மற்றும் நேர்மறையான ஆலோசனைகள் சொல்லப்பட்டுள்ளது. அதாவது “பிதாக்களே, நீங்களும் உங்கள் பிள்ளைகளைக் கோபப்படுத்தாமல், கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும் அவர்களை வளர்ப்பீர்களாக” என்பதே. இதனுடைய எதிர்மறை பாகம் என்னவென்றால் ஒரு தகப்பன் எதிர்மறையான காரியங்களாகிய கடமை, அநீதி, பாரபட்சம், அல்லது நியாயமற்ற முறையில் அதிகாரத்தை பயன்படுத்துதல் ஆகிய வழிகளில் பிள்ளைகளை வளர்க்ககூடாது என்பதாகும். பிள்ளைகளிடம் காட்டப்படும் கடுமையான காரணமற்ற நடத்தைகள் அவர்களுடைய இருதயத்திலே தீமையை வளர்க்கும். “தூண்டிவிடுதல்” என்பது “எரிச்சலூட்டுதல், ஆத்திரமடையச்செய்தல், தவறாக தேய்த்துக்கொடுத்தல் அல்லது தூண்டுதல்” என்பதாகும். இவைகளெல்லாம் தவறான மனப்பான்மை மற்றும் தவறான முறைகளாகிய தீமையான, காரணமற்ற, கடுமையான, கொடூரமான, தேவையற்ற கட்டுபாடுகள் மற்றும் சர்வாதிகாரத்தை சுயநலத்தோடு பயன்படுத்துதல் ஆகியவைகளால் நடைபெறுகிறது. இத்தகைய ஆத்திரமூட்டுதல், தீங்கானவிளைவுகள், பிள்ளைகளின் பாசத்தை குறைத்தல், பரிசுத்தமாய் வாழ வேண்டும் என்ற ஆசையை குறைத்தல், மற்றும் பெற்றோர்களை பிரியப்படுத்த முடியாது என்கிற எண்ணத்தை அவர்களிடத்தில் உருவாக்கும். புத்தியுள்ள பெற்றோர் அன்பு மற்றும் இரக்கத்தின் மூலம் பிள்ளைகளை விரும்பத்தக்க கீழ்படிதலுள்ள பிள்ளைகளாக வளர்க்க விரும்புகின்றனர்.

எபேசியர் 6:4 ல், நேர்மறையான உபதேசம் சார்ந்ததாக சொல்லப்பட்டுள்ளது. அதாவது பிள்ளைகளை பயிற்றுவித்தல், வளர்த்தல், தேவனுக்குரிய அறிவுறை மற்றும் சரியான கண்டிப்பு மூலம் அவர்களை வாழ்க்கையில் நன்நடத்தையை பெறுகச்செய்தல் ஆகும். “கண்டிப்பு” என்கிற வார்த்தை பிள்ளைகளின் தவறுகளை (ஆக்கப்பூர்வமாக) மற்றும் கடமைகளை (பொறுப்புக்களை) நினைப்பூட்டுதல் ஆகும்.

கிறிஸ்தவ தகப்பன் என்பவர் தேவனுடைய கையிலுள்ள ஒரு கருவியாக இருக்கிறார். அனைத்து போதனைகள் மற்றும் ஒழுக்கங்கள் தேவன் எதை கட்டளையிட்டாரோ மற்றும் எதை செயல்படுத்துகிறாரோ அதன்படியே இருக்கவேண்டும். எனவே பிள்ளைகளுடைய சிந்தை, இருதயம் மற்றும் மனசாட்சியோடு தெடர்ச்சியான மற்றும் உடனடியான தொடர்புடையதாக அவருடைய அதிகாரத்தை கொண்டுவரவேண்டும். தந்தைகள் ஒருபோதும் தாங்கள் மட்டுமே உண்மை மற்றும் கடமையை தீர்மானிக்கும் இறுதியான அதிகாரமுடையவர்களாக தோற்றமளிக்கக்கூடாது. தேவனை மட்டுமே ஆசானாக மற்றும் யார் மூலமாய் அனைத்து காரியங்களும் நிறைவேறுமோ அப்படிப்பட்ட அதிகாரியாக முன்னிறுத்தும்போது, போதிக்கிற இலக்கை நாம் சிறப்பாக அடையமுடியும்.

பிள்ளை சரியானதை செய்யும் போது அவனுக்கு கொடுப்பதற்காக பிரம்போடு ஆப்பிளையும் வைத்துக்கொள்ளுங்கள் என்று மார்ட்டின் லூதர் சொல்லியிருக்கிறார். கவனமான கருசனை மற்றும் ஜெபத்தோடு கூடிய தொடர்ச்சியான பயிற்ச்சி மூலம் பிள்ளைகள் சீர்படுத்தப்பட அல்லது சீர்பொருந்தப்பட வேண்டும். சிட்சித்தல், சீர்படுத்துதல், வேதவசனத்தின் படி ஆலோசனை கொடுத்தல், கண்டித்தல் மற்றும் ஊக்குவித்தல் ஆகியவைகளே “சரியான கண்டிப்பின்” மையமாகயிருக்கிறது. தேவனிடத்திலிருந்து புறப்படுகிற ஆலோசனைகள் யாவும் கிறிஸ்தவ பிரயோகப்படுத்தல் என்னும் பள்ளியில் கற்றுக்கொள்ளும் அனுபவத்தின் மூலம் பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்கப்பட வேண்டும் மற்றும் இவைகள் பெற்றோர்களின் தலைமையில் முதலாவது தந்தையும் மற்றும் அவருடைய வழிநடத்துதலின் படி தாயும் கற்றுக்கொடுக்க வேண்டும். கிறிஸ்தவ சீர்படுத்துதல் என்பது பிள்ளைகளை தேவ பயத்தோடும், பெற்றோருடைய அதிகாரத்தை மதிப்பவர்களாக, கிறிஸ்தவ அறிவின் தரத்தோடு மற்றும் சுயக்கட்டுபாட்டோடு வளரக்கூடியவர்களாக அவர்களை உருவாக்க வேண்டும் என்பதாகும்.

“வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது மற்றும் அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஐனமுள்ளவைகளாயிருக்கிறது” (2 தீமோத்தேயு 23:16-17). பிள்ளைகளுக்கு வேதவசனத்தை பரிட்சையபடுத்தவேண்டியதே ஒரு தகப்பனின் முதலாவது கடமையாக இருக்கிறது. தேவனுடைய சத்தியத்தை தந்தையர்கள் போதிக்கும் வழி மற்றும் முறைகள் வேறுபடலாம். தகப்பன் உண்மையுள்ளவராக முன்மாதிரியாக இருப்பதன் மூலம் பிள்ளைகள் தேவனைப் பற்றிக் கற்றுகொள்வதால் அது அவர்கள் வாழ்நாள் முழுவதும் அவர்கள் என்ன செய்தாலும் எங்கிருந்தாலும் நல்ல நிலையில் இருக்க உதவும்.

Englishமுகப்பு பக்கம்

கிறிஸ்தவ தந்தையரைக் குறித்து வேதாகமம் என்ன சொல்கிறது?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries