கிறிஸ்தவர்கள் கடனாளிகளாய் இருப்பதை குறித்து வேதாகமம் சொல்வது என்ன? கிறிஸ்தவர்கள் கடன் வாங்க அல்லது கொடுக்க வேண்டுமா?


கேள்வி: கிறிஸ்தவர்கள் கடனாளிகளாய் இருப்பதை குறித்து வேதாகமம் சொல்வது என்ன? கிறிஸ்தவர்கள் கடன் வாங்க அல்லது கொடுக்க வேண்டுமா?

பதில்:
ரோமர் 13:8ல் அன்புகூருகிற கடனேயல்லாமல், மற்றொன்றிலும் ஒருவனுக்கும் கடன்படாதிருங்கள் என்கிற பவுலின் கட்டளை உரிய காலத்தில் செலுத்தப்படாத எல்லா வகையிலான கடன்களுக்கான தேவனுடைய வெறுப்பை நினைவுபடுத்துகிறது (சங்கீதம் 37:21 பார்க்க). அதே நேரத்தில் வேதாகமம் வெளிப்படையாக எல்லா விதமான கடன்களை குறித்தும் கட்டளையிடவில்லை. வேதாகமம் கடனுக்கு விரோதமாக எச்சரிக்கிறது மற்றும் கடனுக்குள் சிக்காதவர்களின் ஒழுக்க நெறியை பாராட்டுகிறது, ஆனால் கடனை தடைசெய்யவில்லை. வேதாகமம் கடன் கொடுத்தவர்கள் கடன் பெற்றவர்களை துஷ்பிரயோகம் செய்வதை கடுமையாக கண்டனம் செய்கிறது ஆனால் கடனாளியை கண்டனம் செய்கிறதில்லை.

சிலர் கடனுக்கு வட்டி வாங்கலாமா என்று கேட்கின்றனர், ஆனால் கடனுக்கு நியாயமான வட்டி வாங்குவது சரி என்று அநேக நேரங்களில் வேதாகமத்தில் வாசிக்கிறோம் (நீதிமொழிகள் 28:8; மத்தேயு 25:27). பழைய ஏற்பாடு நாட்களில் ஏழைக்கு வளங்கப்பட்ட கடனுக்கு வட்டி வாங்குவதை மட்டுமே நியாயப்பிரமாணம் தடைசெய்கிறது. (லேவியராகமம் 25:35-38). இந்த நியாயப்பிரமாணம் அநேக சமுதாய, நீதி மற்றும் ஆவிக்குரிய தாக்கங்களை கொண்டிருந்தது ஆனால் இரண்டு காரியங்கள் இங்கு குறிப்பிடுவதற்கு உகுந்தவைகள் ஆகும். முதலாவது இந்த நியாயப்பிரமாணம் தரித்திரருடைய நிலமையை மிக மோசமாகாதபடி அவர்களுக்கு உதவுகிறது. வறுமையில் விழுந்ததே மிக பரிதாபத்திற்குரியது மற்றும் உதவியை நாடுவது அவமானமாக இருக்கும். ஆனால் கடனை செலுத்துவதோடு நசுக்கக் கூடிய வட்டியையும் செலுத்துவது தரித்திரருக்கு உதவியாக இருப்பதை விட புண்படுத்துவதாகவே இருக்கும்.

இரண்டாவது இந்த நியாயப்பிரமாணம் முக்கியமான ஆவிக்குரிய பாடத்தை போதிக்கிறது. தரித்திரருக்கு கொடுத்த கடனுக்கான வட்டியை வாங்காமல் விடுவது கடன் கொடுத்தவரின் கருணையுள்ள செயலாகும். அவர் கடனாக கொடுத்த பணத்தை பயன்படுத்த முடியாமல் போகும். தேவன் தன்னுடைய கிருபை எந்த வித வட்டியும் இல்லாமல் நமக்கு கொடுத்ததற்காக அவருக்கு நன்றியை வெளிப்படுத்த ஒரு உறுதியான வழியாகும். இஸ்ரவேலரை தரித்திரராக அடிமைகளாய் எகிப்த்திலிருந்த போது தேவன் கிருபையாய் அவர்களை புறப்பட செய்து கானான் தேசத்தை அவர்களுக்கு கொடுத்தது போலவே (லேவியராகமம் 25:38) அவர்களும் தங்களுடை தரித்திரத்தில் இருக்கும் சகோதரருக்கும் செய்ய வேண்டும் என்று தேவன் எதிர்பார்க்கிறார்.

கிறிஸ்தவர்களும் இதற்கு ஒத்த சூழலில் தான் இருக்கின்றனர். இயேசுகிறிஸ்துவின் வாழ்க்கை, மரணம் மற்றும் உயிர்தெழுதல் தேவனிடத்தில் நம்முடைய பாவத்திற்கான கடனை செலுத்துகிறது. இப்பொழுது நம்முடைய தருனம் நாம் பிறருக்கு, குறிப்பாக சக விசுவாச சகோதரருக்கு அவர்களுடைய பிரச்சனையை அதிகப்படுத்தாத கடனை கொடுத்து உதவ முடியும். இதனோடு தொடர்புடைய இரண்டு கடனாளிகள் மற்றும் அவர்களின் மன்னிக்கும் மனப்பான்மையை பற்றிய உவமையை இயேசு போதித்ததை பார்க்க முடியும் (மத்தேயு 18:23-35).

வேதாகமம் ஒரு போதும் பணம் கடன் வாங்குவதை தடைசெய்யவுமில்லை கடிந்துகொள்ளவுமில்லை. கடன் வாங்குவது வழக்கமாக நல்ல காரியமல்ல என்று வேதாகமத்தின் ஞானம் நமக்கு போதிக்கிறது. கடன், கடன் கொடுத்தவரிடத்தில் நம்மை அடிமையாக்குகிறது. அதே நேரத்தில் சில சூழ்நிலைகளில் கடன்படுவது “தேவையான தீமையாகும்.” பணம் ஞானமாய் கையாளப்படும்போது மற்றும் செலுத்தக் கூடிய கடன் தொகை சமாளிக்க கூடியாதாக இருக்கும் போது முற்றிலும் அவசியமானால் கிறிஸ்;தவர்கள் பாரமான நிதி கடனை வங்கலாம்.

English
தமிழ் முதற் பக்கத்திற்குச் செல்க
கிறிஸ்தவர்கள் கடனாளிகளாய் இருப்பதை குறித்து வேதாகமம் சொல்வது என்ன? கிறிஸ்தவர்கள் கடன் வாங்க அல்லது கொடுக்க வேண்டுமா?