settings icon
share icon
கேள்வி

கேருபீன்கள் என்றால் என்ன? கேருபீன்கள் தேவதூதர்களா?

பதில்


கேருபீன் / கேருபீன்கள் தேவனின் வழிபாடு மற்றும் அவரது புகழ்பாடும் காரியங்கள் சம்பந்தப்பட்ட தேவதூதர்கள் ஆகும். ஆதியாகமம் 3:24-ல் தான் வேதாகமத்தில் முதன்முதலில் கேருபீன்கள் குறிப்பிடுகின்றனர்: “அவர் மனுஷனைத் துரத்திவிட்டு, ஜீவவிருட்சத்துக்குப் போம் வழியைக் காவல்செய்ய ஏதேன் தோட்டத்துக்குக் கிழக்கே கேரூபீன்களையும், வீசிக்கொண்டிருக்கிற சுடரொளிப் பட்டயத்தையும் வைத்தார்.” அவனுடைய கலகத்திற்கு முன்பே சாத்தான் ஒரு அபிஷேகம் பண்ணப்பட்ட கேருபீன் ஆகும் (எசேக்கியேல் 28:12-15). ஆசரிப்புக்கூடாரம் மற்றும் தேவாலயம் அதனுடைய மற்ற பணிமுட்டுகளுடன் சேர்த்து கேருபீன்கள் குறித்து பல பிரதிநிதித்துவங்களைக் கொண்டிருந்தன (1 இராஜாக்கள் 6:23-35; 7:29-36; 8:6-7; 1 நாளாகமம் 28:18; 2 நாளாகமம் 3:7; 14:2; 2 நாளாகமம் 3:10-13; 5:7-8, எபிரெயர் 9:5).

எசேக்கியேல் புத்தகத்தின் 1 மற்றும் 10-வது அதிகாரங்களில் "நான்கு ஜீவன்களும்" (எசேக்கியேல் 1:5) கேருபீன்களைப் போல (எசேக்கியேல் 10) அதையே விவரிக்கின்றன. ஒவ்வொன்றிற்கும் நான்கு முகங்கள் இருந்தன – அது ஒரு மனிதனும், ஒரு சிங்கமும், ஒரு மாடும், மற்றும் ஒரு கழுகுமாக இருந்தன (எசேக்கியேல் 1:10; 10:14) – அவைகள் ஒவ்வொன்றுக்கும் நான்கு சிறகுகள் இருந்தன. அவர்கள் தோற்றத்தில், கேருபீன்கள் "மனுஷனுடைய சாயலைக் கொண்டிருந்தன" (எசேக்கியேல் 1:5). இந்த கேருபீன்கள் தங்கள் இரண்டு இறக்கைகளினால் பறந்து, தங்கள் உடல்களை மூடி மறைப்பதற்கு இரண்டு இறக்கைகளை பயன்படுத்தினர் (எசேக்கியேல் 1:6, 11, 23). தங்கள் இறக்கைகளின்கீழ் கேருபீன்கள் ஒரு மனிதனின் கையைப் போன்ற தோற்றத்தைத் தோற்றுவித்தனர் (எசேக்கியேல் 1:8; 10:7-8, 21).

வெளி. 4:6-9ல் குறிப்பிட்டுள்ள உருவகமும் கேருபீன்களை விவரிக்கின்றன. கேருபீன்கள் தேவனுடைய பரிசுத்தத்தையும் வல்லமையையும் மாட்சிமையையும் போற்றி புகழ்ந்து உயர்த்துவதே பிரதான நோக்கம் ஆகும். இது வேதாகமத்தின் முக்கிய பொறுப்புகளில் ஒன்றாகும். தேவனின் புகழைப் பாடுவதோடு மட்டுமல்லாமல், அவர்கள் தேவனுடைய மாட்சிமையையும், மகிமையையும் அவருடைய ஜனங்களோடு அவர் வைத்திருக்கும் பிரசன்னத்தையும் பற்றிய ஒரு நினைவூட்டலாகவும் செயல்படுகிறார்கள்.

English



முகப்பு பக்கம்

கேருபீன்கள் என்றால் என்ன? கேருபீன்கள் தேவதூதர்களா?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries