கேள்வி
ஒரு கிறிஸ்தவர் அவிசுவாசியுடன் வியாபாரத்தில் ஈடுபடலாமா?
பதில்
ஒரு கிறிஸ்தவர் அவிசுவாசியுடன் வியாபாரத்தில் ஈடுபட வேண்டுமா அல்லது ஈடுபடலாமா என்கிற கேள்வி பொதுவான ஒன்றாகும். பெரும்பாலும் மேற்கோள் காட்டப்படுகிற வேதவாக்கியம், “அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக; நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது?” (2 கொரிந்தியர் 6:14). பல முறை, இந்த வசனம் கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களை திருமணம் செய்துகொள்வதற்கான தடை என்று கருதப்படுகிறதை மேற்கோள் காட்டப்படுவதற்கு குறிப்பிடப்படுகிறது. திருமணம் நிச்சயமாக இங்கே பொருந்தும் என்கிறபோதிலும், அதை திருமணத்திற்கு மட்டும் என்று மட்டுப்படுத்த சூழலில் எதுவும் இல்லை. எல்லா வகையான “அந்நிய நுகங்களும்” தடைசெய்யப்பட்டுள்ளன-திருமணங்கள், நெருங்கிய நட்பு மற்றும் பல சந்தர்ப்பங்களில், வணிக கூட்டாண்மையும் கூட.
ஒரு விசுவாசி மற்றும் அவிசுவாசி இடையே ஒரு பெரிய வித்தியாசம் இருப்பதாக இந்த கட்டளை குறிக்கிறது. பொதுவாக, ஒரு கிறிஸ்தவரின் உந்துதல்கள், குறிக்கோள்கள் மற்றும் முறைகள் அவிசுவாசியின் செயல்களுடன் பொருந்தாது. நம்பிக்கை ஒரு நபரின் தன்மையை மாற்றுகிறது. ஒரு கிறிஸ்தவரின் வாழ்க்கையில் மிக உயர்ந்த லட்சியம் கர்த்தராகிய இயேசுவை மகிமைப்படுத்துவதும், எல்லாவற்றிலும் அவரைப் பிரியப்படுத்துவதும் ஆகும்; ஒரு அவிசுவாசி, அத்தகைய குறிக்கோள்களுக்கு அலட்சியமாக இருக்கிறார். ஒரு கிறிஸ்தவரின் வழிமுறைகள் மற்றும் வணிகத்தில் உள்ள குறிக்கோள்கள் அவிசுவாசியின் முறைகள் மற்றும் குறிக்கோள்களுக்கு ஒத்ததாக இருந்தால், கிறிஸ்தவர் தனது முன்னுரிமைகளை மறு மதிப்பீடு செய்து மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
இரண்டாவது கொரிந்தியர் 6:14, “ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது?” என்று கேட்கிறது. மக்கள் எதையாவது பகிர்ந்து கொள்ளும்போது அவர்கள் “ஐக்கியத்தில்” இருப்பதாகக் கூறப்படுகிறது. வணிக பங்காளிகள் ஒன்றுபட்டிருக்கிறார்கள், அவர்கள் விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் – அதாவது ஒருவருக்கு சொந்தமானது மற்றொருவருக்கும் சொந்தமானது ஆகும். இதுதான் துல்லியமாக "ஐக்கியம்" என்று பொருள்படுகிறது. இந்த கொள்கைகளை மனதில் கொண்டு, வியாபாரத்தில் அவிசுவாசிகளுடன் ஒன்றிணைவதைத் தவிர்ப்பது நல்லது. ஒரு கிறிஸ்தவர் உண்மையிலேயே வியாபாரத்தின் மூலம் தேவனை மதிக்க முற்படுகிறார் என்றால், அவிசுவாசியான வணிக கூட்டாளருடன் மோதல் தவிர்க்க முடியாதது. “இரண்டுபேர் ஒருமனப்பட்டிருந்தாலொழிய ஒருமித்து நடந்துபோவார்களோ?” (ஆமோஸ் 3:3).
English
ஒரு கிறிஸ்தவர் அவிசுவாசியுடன் வியாபாரத்தில் ஈடுபடலாமா?