settings icon
share icon
கேள்வி

கிறிஸ்தவர்கள் கருத்தடையைப் பயன்படுத்துவதைக் குறித்து வேதாகமம் என்ன சொல்லுகிறது? கிறிஸ்தவர்கள் கருத்தடையை பயன்படுத்த வேண்டுமா?

பதில்


“பலுகிப் பெருகி, பூமியை நிரப்ப வேண்டும்” என்று மனிதனுக்கு தேவன் அதிகாரம் வழங்கினார் (ஆதியாகமம்1:28). விவாகம் என்பது குழந்தைகளை பெற்று வளர்ப்பதற்கு தேவனால் நிறுவப்பட்ட ஒரு நிரந்தரமான சூழலாகும். ஆனால், இன்று குழந்தைகள் தொல்லையாக மற்றும் சுமையாகவே கருதப்படுகிறார்கள் என்பது வருத்தத்திற்குரியது ஆகும். அவர்கள் ஜனங்களின் வாழ்க்கை பாதைகள் மற்றும் பொருளாதார இலக்குகளுக்கு தடையாக நிற்கிறார்கள் என்றும் அவர்கள் சமூதாயத்தில் ஜனங்களுக்குள்ள நடைமுறையை நெறுக்குகின்றதாகவும் கருதப்படுகிறார்கள். அநேக நேரங்களில் இந்த விதமான சுயநலங்கள் தான் கருத்தடைக்கு அடிப்படையாக உள்ளது.

கருத்தடையை பயன்படுத்துவதற்கு பின்னால் இருக்கும் இந்த சுயநலத்திற்கு மாறாக குழந்தைகள் தேவனுடைய ஈவு என்று வேதாகமம் சொல்லுகிறது (ஆதியாகமம் 4:1; 33:5). குழந்தைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம் (சங்கீதம் 127:3-5). பிள்ளைகள் தேவனிடத்திலிருந்து வருகிற ஆசீர்வாதம் (லூக்கா 1:42). பிள்ளைகள் முதியோருக்குக் கிரீடம் (நீதிமொழிகள் 17:6). தேவன் மலடியைச் சந்தோஷமான பிள்ளைத்தாய்ச்சியாக்குகிறார் (சங்கீதம் 113:9; ஆதியாகமம் 21:1-3; 25:21-22; 30;:1-2; 1 சாமுவேல் 1:6-8; லூக்கா 1:7, 24-25). தேவன் குழந்தைகள் கர்ப்பத்தில் உருவாக்குகிறார் (சங்கீதம் 139:13-16). குழந்தைகள் பிறப்பதற்கு முன்னறே தேவன் அவர்களை அறிந்திருக்கிறார் (எரேமியா 1:5; கலாத்தியர் 1:15).

யூதாவின் குமாரர்கள் ஏர் மற்றும் ஓனான் என்பவர்களை பற்றி குறிப்பிடப்பட்டுள்ள ஆதியாகமம் 38ஆம் அதிகாரம் இந்த கருத்தடையை எதிர்த்து கடுமையாக கண்டிக்கிற வேதபாகமாக இருக்கிறது. ஏர் தாமார் என்கிற பெண்னை திருமணம் செய்தான், ஆனால் அவன் கர்த்தருடைய பார்வைக்கு பொல்லாதவனாயிருந்ததினால், கர்த்தர் அவனை அழித்துப்போட்டார். தாமாரோ கணவன் மற்றும் பிள்ளையில்லாதவளானால். உபாகமம் 25:5-6 ல் சொல்லப்பட்டுள்ளபடி மரித்த சகோதரனுடைய மனைவியை திருமணம் செய்யும் முறைமையின் படி ஏரின் சகோதரனாகிய ஓனான் தாமாரை திருமணம் செய்து கொண்டான். ஆனால் அந்த சந்ததி தன் சந்ததியாயிராதென்று ஓனான் அறிந்தபடியினாலே, அவன் பழைமை வாய்ந்த கருத்தடைய பயன்படுத்தினான், அதாவது தன் வித்தைத் தரையிலே விழவிடுதலை உபயோகித்தான். ஆதியாகமம் 38:10ன் படி அவன் செய்தது கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாததாயிருந்ததினால் அவனை அவர் அழித்துப்போட்டார். ஓனானின் நோக்கம் சுயநலமானது அவன் தாமாரை தன் சுயஇன்பத்திற்காக பயன்படுத்தினான் ஆனால் அவன் இறந்து போன தன் சகோதரனுக்காக சந்ததியை உருவாக்கவேண்டிய தனது கடமையை செய்யத் தவறிப்போனான். தேவன் கருத்தடைச் செய்துகொள்வதை அனுமதிக்கவில்லை என்பதற்கு ஆதாரமாக இந்த வேத பகுதி அநேக நேரங்களில் பயன்படுத்தப்படுகிறது. எனினும் கருத்தடை செய்ததற்காக அல்ல சுயநலமாய் ஓனான் நடந்து கொண்டதற்காகவே தேவன் அவனை அழித்துப்போட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாம் குழந்தைகளை உலகம் பார்க்கிறது போல் பார்க்காமல், தேவன் குழந்தைகளை எப்படி பார்க்கிறாரோ அப்படியே நாமும் வேண்டியது அவசியம். வேதாகமம் கருத்தடை செய்வது தவறு என்று சொல்லவில்லை என்று சொல்பவர்கள் உண்டு. கருத்தடை என்பது கரு உருவாவதற்கு தடை விதிப்பது அல்லது எதிற்பதாகும். எது சரி அல்லது தவறு என்பதை கருத்தடை செய்யும் அச்செயல் மட்டும் தீர்மானிப்பதில்லை. ஆனால் நாம் ஓனானிடத்தில் கற்றுக்கொண்டது போல் கருத்தடை செய்ததற்கு பின்பாக இருக்கும் உள்நோக்கமே எது சரி எது தவறு என்பதை தீர்மானிக்கிறது. திருமணமானவர்கள் தங்களின் சுயநலனுக்காக கருத்தடையை பயன்படுத்தினால் அது தவறானது. ஆனால் அவர்கள் தற்காலிகமாக தங்களை பக்குவப்படுத்திக் கொள்ள, ஆவிக்குரிய மற்றும் பொருளாதாரத்தில் ஆயத்தப்படுத்திக்கொள்ள கருத்தடையை பயன்படுத்தினால் அது தவறல்ல. ஏனென்றால் இது சரியான மற்றும் நியாயமான உள்நோக்கத்தை சார்ந்தது.

குழந்தைகள் இருப்பது நல்லது என்றே வேதாகமத்தில் வாசிக்கிறோம். ஒரு தம்பதிகளுக்கு குழந்தைகள் இருக்க வேண்டும் என்பதையே வேதாகமமும் எதிர்பார்க்கிறது. குழந்தை பெற இயலாமை என்பது ஒரு கெட்ட காரியமாகவே வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. குழந்தையே வேண்டாம் என்று சொல்லக்கூடிய ஒரு நபரைக்கூட வேதாகமத்தில் நாம் பார்க்கமுடியாது. அதே சமயத்தில் தற்காலிகமாக கருத்தடையை பயன்படுத்துதல் தவறு என்று வேதாகமத்தின் அடிப்படையில் விவாதிக்கவும் முடியாது. திருமணமான அனைவருமே எப்பொழுது குழந்தையைப் பெற்றுக்கொள்ள வேண்டும் மற்றும் எத்தனை குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதை தீர்மானிக்க தேவனை நாடி அவருடைய சித்தத்தை அறிந்து கொள்ள வேண்டும்.

English



முகப்பு பக்கம்

கிறிஸ்தவர்கள் கருத்தடையைப் பயன்படுத்துவதைக் குறித்து வேதாகமம் என்ன சொல்லுகிறது? கிறிஸ்தவர்கள் கருத்தடையை பயன்படுத்த வேண்டுமா?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries