settings icon
share icon
கேள்வி

கட்டுதல் மற்றும் கட்டவிழ்த்தல் என்பதன் மூலம் வேதாகமம் என்ன அர்த்தம் கொண்டிருக்கிறது?

பதில்


மத்தேயு 16:19-ல் உள்ள பைபிளில் “கட்டுதல் மற்றும் கட்டவிழ்த்தல்” என்கிறதான கருத்து கற்பிக்கப்படுகிறது: “பரலோகராஜ்யத்தின் திறவுகோல்களை நான் உனக்குத் தருவேன்; பூலோகத்திலே நீ கட்டுகிறது எதுவோ அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும், பூலோகத்திலே நீ கட்டவிழ்ப்பது எதுவோ அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் என்றார்.” இந்த வசனத்தில், இயேசு நேரடியாக அப்போஸ்தலனாகிய பேதுருவிடமும், மறைமுகமாக மற்ற அப்போஸ்தலர்களிடமும் பேசுகிறார். இயேசுவின் வார்த்தைகள், பேதுருவுக்கு ராஜ்யத்திற்குள் நுழைய உரிமை உண்டு என்பதையும், சாவி வைத்திருப்பதன் மூலம் பொதுவான அதிகாரம் அவருக்கு இருக்கும் என்றும், சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பது அனைத்து விசுவாசிகளுக்கும் பரலோகராஜ்யத்தைத் திறந்து மூடுவதற்கான வழிமுறையாக இருக்கும் என்றும் பொருள்படுகிறது. அது அவிசுவாசிகளுக்கு எதிரானது. அப்போஸ்தலருடைய நடபடிகள் புத்தகம் இந்த செயல்முறையை செயலில் காண்பிக்கிறது. பெந்தெகொஸ்தே நாளில் (அப்போஸ்தலர் 2:14-40) தனது பிரசங்கத்தின் மூலம், பேதுரு முதன்முறையாக தேவனுடைய ராஜ்யத்தின் கதவைத் திறந்தார். “கட்டுதல்” மற்றும் “கட்டவிழ்த்தல்” என்பதன் வெளிப்பாடுகள் யூத சட்ட சொற்களஞ்சியத்திற்கு பொதுவானவையாகும், அதாவது தடைசெய்யப்பட்ட ஒன்றை அறிவிக்க அல்லது அனுமதிக்கப்பட்டதாக அறிவிக்க வேண்டும்.

பேதுருவும் மற்ற சீஷர்களும் சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதிலும், தேவனுடைய சித்தத்தை மனிதர்களுக்கு அறிவிப்பதிலும் கிறிஸ்து பூமியில் செய்த பணியை தொடர்ந்து பணியாற்றுவதாக இருந்தது, மேலும் அவர் வைத்திருந்த அதே அதிகாரத்துடன் அவர்கள் ஆயுதம் ஏந்தியிருந்தார்கள். மத்தேயு 18:18 ல், திருச்சபை ஒழுக்கத்தின் பின்னணியில் கட்டுதல் மற்றும் கட்டவிழ்த்தல் என்பது பற்றிய குறிப்பு உள்ளது. அப்போஸ்தலர்கள் தனிப்பட்ட விசுவாசிகள் மற்றும் அவர்களின் நித்திய விதியின் மீது கிறிஸ்து அதிபதியாக இருக்கிறார் என்பதையும் அவருடைய அதிகாரத்தையும் கைப்பற்றுவதில்லை, ஆனால் அவர்கள் ஒழுங்குபடுத்துவதற்கான அதிகாரத்தைப் பயன்படுத்துகிறார்கள், தேவைப்பட்டால், கீழ்ப்படியாத திருச்சபை உறுப்பினர்களை வெளியேற்றுகிறார்கள்.

பூமியில் அவர்கள் தீர்மானித்தவை அனைத்தும் பரலோகத்தில் நகலெடுக்கப்படும் என்பது போல, அப்போஸ்தலர்களுக்கு தேவனுடைய மனதை மாற்றுவதற்கான பாக்கியம் வழங்கப்படவில்லை; மாறாக, அவர்கள் அப்போஸ்தல கடமைகளில் முன்னேறும்போது, அவர்கள் பரலோகத்தில் வீற்றிருக்கிற தேவனுடைய திட்டத்தை நிறைவேற்றுவார்கள் என்பதாக அவர்கள் ஊக்குவிக்கப்பட்டனர். அப்போஸ்தலர்கள் எதையாவது "கட்டின" பொது அல்லது பூமியில் ஏதேனும் தடைசெய்தபோது, அவர்கள் அந்த விஷயத்தில் தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் எதையாவது "அவிழ்த்த"போது அல்லது பூமியில் அனுமதித்தபோது, அவர்கள் தேவனுடைய நித்திய திட்டத்தை நிறைவேற்றினர். மத்தேயு 16:19 மற்றும் 18:18 இரண்டிலும், கிரேக்க மொழி உரையின் தொடரியல் அர்த்தத்தை தெளிவுபடுத்துகிறது: “நீங்கள் பூமியில் எதை கட்டினாலும் அது பரலோகத்தில் கட்டப்பட்டிருக்கும், பூமியில் நீங்கள் எதை அவிழ்த்தாலும் அது அவிழ்க்கப்பட்டு இருக்கும் ”(மத்தேயு 16:19, யங்கின் எழுத்தியல் பூர்வமான மொழிபெயர்ப்பு). அல்லது, அதிகரிக்கப்பட்டுகிற வேதாகமம் குறிப்பிடுவதைப் போல, “நீங்கள் பூமியில் எதை [தடைசெய்தாலும், அதனை முறையற்றதாகவும், சட்டவிரோதமானதாகவும் அறிவிக்கிறீர்கள்] பரலோகத்தில் அப்படியே கட்டப்பட்டிருக்கும், பூமியில் நீங்கள் எதை இழந்தாலும் [அனுமதி, சட்டப்பூர்வமாக அறிவிக்க வேண்டும்] [ ஏற்கனவே] பரலோகத்தில் அது தளர்த்தப்பட்டிருக்கும்."

அப்போஸ்தலர்களுக்கு பூமியில் ஒரு சிறப்பு பணி இருக்கிறது என்று இயேசு கற்பித்தார். புதிய ஏற்பாட்டு நிருபங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள அவர்களின் அதிகார வார்த்தைகள் திருச்சபைக்கான தேவனுடைய விருப்பத்தை பிரதிபலிக்கின்றன. சுவிசேஷத்தை விட்டு வேறு திசைக்கு திசைதிருப்புபவர்கள் மீது பவுல் ஒரு சாபத்தை அறிவித்தபோது, பரலோகத்தில் ஏற்கனவே சாபமாக அது அறிவிக்கப்பட்டாயிற்று என்பதை நாம் அறிவோம் (கலாத்தியர் 1:8–9 ஐக் காண்க).

English



முகப்பு பக்கம்

கட்டுதல் மற்றும் கட்டவிழ்த்தல் என்பதன் மூலம் வேதாகமம் என்ன அர்த்தம் கொண்டிருக்கிறது?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries