settings icon
share icon
கேள்வி

வேதாகமம் பிழையில்லாதது என்பதை விசுவாசிப்பது ஏன் முக்கியமானதாக இருக்கிறது?

பதில்


நமது தோள்களை அசைத்து குலுக்கினால் எண்ணற்ற பிழைகளை மலைபோல எதிர்கொள்கிற காலத்தில் நாம் வாழ்கிறோம். பிலாத்துவைப் போல, "உண்மை என்ன?" என்று கேட்காமல், பின்நவீனத்துவ மனிதன், "உண்மை ஒன்றுமேயில்லை" அல்லது ஒருவேளை "உண்மை இருக்கிறது, ஆனால் நாம் அதை அறிய முடியாது" என்கிறான். நாம் பொய்யான பழக்கவழக்கத்தை வளர்த்துவிட்டோம், வேதாகமமும் பிழைகள் உள்ளதாக இருப்பதாக தவறான கருத்துடன் பலர் மிகவும் சாதாரணமாக எடுத்துக்கொள்கின்றனர்.

சத்தியமானது மிகவும் முக்கியமானதாக இருப்பதினால் வேதாகமம் பிழைகள் எதுவும் இல்லாமல் இருக்கிறது என்கிற கோட்பாடு மிக முக்கியமான ஒன்றாகும். இந்த பிரச்சினை தேவனுடைய தன்மையைப் பிரதிபலிக்கிறது, மேலும் வேதாகமம் கற்பிக்கும் எல்லாவற்றையும் புரிந்துகொள்வதற்கு நமக்கு அடிப்படை மற்றும் அடித்தளமாக இருக்கிறது. வேதாகமம் பிழையற்றது என்கிற கோட்பாட்டை நாம் முற்றிலும் நம்ப வேண்டும் என்பதற்கான சில காரணங்கள் இங்கே:

1. வேதாகமம் தன்னில்தானே பிழையற்ற பூரணமாக இருப்பதாகக் கூறுகிறது. “கர்த்தருடைய சொற்கள் மண் குகையில் ஏழுதரம் உருக்கி, புடமிடப்பட்ட வெள்ளிக்கொப்பான சுத்த சொற்களாயிருக்கிறது” (சங்கீதம் 12:6). "கர்த்தருடைய வேதம் குறைவற்றதும்" (சங்கீதம் 19:7). "தேவனுடைய வசனமெல்லாம் புடமிடப்பட்டவைகள்" (நீதிமொழிகள் 30:5). தூய்மை மற்றும் முழுமையானதாக இருக்கிறதாக கூறும் இந்த கூற்றுக்கள் முழுமையான மற்றும் மெய்யான அறிக்கைகளாகும். தேவனுடைய வார்த்தை "பெரும்பாலும்" தூயதாகவோ அல்லது வேதவாக்கியம் "கிட்டத்தட்ட" பரிபூரணமானது எனவோ அது சொல்லவில்லை என்பதை கவனியுங்கள். “பகுதியளவு பரிபூரண" கோட்பாடுகளுக்கு இடமில்லாமல், முழுமையான பரிபூரணத்திற்காக வேதாகமம் வாதிடுகிறது.

2. பைபிள் நிற்கிறது அல்லது விழுகிறது முழுமையான நிலையிலாகும். ஒரு முன்னணி தினசரி செய்தித்தாள் தொடர்ந்து வாடிக்கையாகப் பிழைகள் இருப்பதைக் கண்டறியப்பட்டால், அது விரைவாக மதிப்பிழந்துபோகும். "அனைத்து பிழைகளும் பக்கம் மூன்றில் வரையறுக்கப்பட்டுள்ளன" என்று சொல்லுவதில் எந்த வித்தியாசமும் இல்லை. ஒரு செய்தித்தாளில் வரும் செய்தி உண்மையாக இருக்கவேண்டுமானால் அதன் எந்த பக்கமும் பகுதியும் நம்பகமானதாக இருக்கவேண்டும். அதேபோல், புவியியல் குறித்துப் பேசும்போது வேதாகமம் தவறானதாக இருந்தால், பிறகு அதன் இறையியலை ஏன் நம்ப வேண்டும்? இது ஒன்று நம்பகமான ஆவணம் அல்லது இல்லை.

3. வேதாகமமானது அதனுடைய எழுத்தாளரின் பிரதிபலிப்பாகும். தேவனே வேதாகமம் முழுவதையும் அவருடைய உந்துதலால் மனித எழுத்தாளர்களைக் கொண்டு எழுதினார். “வேதவாக்கியங்களெல்லாம் தேவஆவியினால் அருளப்பட்டிருக்கிறது” (2 தீமோத்தேயு 3:16). மேலும் 2 பேதுரு 1:21; எரேமியா 1:2 ஆகியவற்றைக் காண்க.

இந்த பிரபஞ்சத்தை உருவாக்கிய தேவனால் ஒரு புத்தகத்தை எழுத முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். பரிபூரண தேவன் சரியான பரிபூரணமான புத்தகம் எழுத தகுதியுள்ளவர் ஆவார். பிரச்சினையானது வெறுமனே "வேதாகமத்தில் தவறு இருக்கிறதா?" என்பதல்ல, ஆனால் "தேவனால் தவறு செய்யமுடியுமா?" என்பதாகும். வேதாகமம் உண்மையாகவே பிழைகள் அடங்கியதாக இருந்தால், பின்பு தேவன் எல்லாம் அறிவார்ந்தவர் அல்ல, அவர் ஒரு பொய்யராக இருப்பார். வேதாகமம் தவறான தகவலைக் கொண்டிருந்தால், தேவன் உண்மையாக இருக்க மாட்டார், ஆனால் அதற்கு பதிலாக அவர் ஒரு பொய்யர் மட்டுமே. வேதாகமம் முரண்பாடுகளை கொண்டிருந்தால், தேவன் வெறுமனே குழப்பம் எழுப்புகிறவராக இருப்பார். வேறு வார்த்தைகளில் கூறுவோமானால், வேதாகமம் பிழைகளற்றதாக மற்றும் சத்தியமாக இல்லையென்றால், தேவனும் தேவனாக இருக்கமாட்டார்.

4. வேதாகமத்தை நாம் நியாயம் தீர்ப்பதில்லை, மாறாக அது நமக்குத் தீர்ப்பளிக்கிறது. "தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது" (எபிரெயர் 4:12). "இருதயம்" மற்றும் "வார்த்தை" ஆகியவற்றிற்கு இடையிலான உறவைப் பற்றிக்கவனியுங்கள். இருதயம் பரிசோதிக்கப்படுகிறது; வார்த்தையானது பரிசோதிக்கிறது. எந்தவொரு காரணத்திற்காக வார்த்தையின் பகுதியையும் தள்ளுபடி செய்வது அதன் செயல்முறையைத் திருப்புவதாகும். நாம் பரிசோதிக்கிறவர்களாகி, வார்த்தையானது நம்முடைய "உயரிய உட்பார்வைக்கு" சமர்ப்பிக்க வேண்டும். ஆனாலும் தேவன், "மனுஷனே, தேவனோடு எதிர்த்துத் தர்க்கிக்கிற நீ யார்?" (ரோமர் 9:20) என்று கூறுகிறார்.

5. வேதாகமத்தின் செய்தி முழுவதும் முழுமையாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். வேதாகமமானது நாம் விரும்புகிறபடி தேர்ந்தெடுக்க உபதேசங்களின் கலவையாக இல்லை. தேவன் அவர்களை நேசிப்பதாக சொல்லும் வசனங்களைப் போன்ற பகுதிகளை பலர் தேர்வு செய்கிறார்கள், ஆனால் தேவன் பாவிகளை நியாயந்தீர்ப்பார் என்று சொல்லும் வசனங்களை வெறுக்கிறார்கள். ஆனால் பைபிளைப் பற்றி நாம் எதை விரும்புகிறோமோ அதைத் தேர்ந்தெடுத்து மற்றவைகளை அப்படித் தூக்கி எறிந்துவிட முடியாது. நரகத்தைப் பற்றிய வேதாகம போதனை தவறாக இருந்தால், அது பரலோகத்தைப் பற்றி, அல்லது வேறு எதைப் பற்றியாவது கூறுவது எவ்வகையில் சரியாக இருக்கும்? படைப்பைப் பற்றிய விவரங்களை வேதாகமத்திலிருந்து பெற முடியாவிட்டால், இரட்சிப்பு பற்றிய விவரங்களும் நம்பகமானவை அல்ல. யோனாவின் கதை ஒரு கட்டுக்கதை என்றால், ஒருவேளை இயேசுவின் கதையும் அப்படியே கட்டுக்கதைத்தான் என்றாகிவிடும். ஆனால் இதற்கு மாறாக, தேவன் என்ன சொன்னாரோ அதையே சொல்லியிருக்கிறார், மற்றும் தேவன் யார் என்பதைக் குறித்த முழு விவரத்தையும் வேதாகமம் அளிக்கிறது. "கர்த்தாவே, உமது வசனம் என்றென்றைக்கும் வானங்களில் நிலைத்திருக்கிறது" (சங்கீதம் 119:89).

6. விசுவாசம் மற்றும் நடைமுறைக்கு வேதாகமம் மட்டுமே நம்முடைய ஒரே விதியாகும். அது நம்பகமானதாக இல்லாவிட்டால், நம் நம்பிக்கைகளுக்கு அடிப்படையாக இருப்பது என்ன? இயேசு நம் நம்பிக்கையை கேட்கிறார், அது அவருடைய வார்த்தையில் அவர் என்ன கூறுகிறார் என்பதில் வைக்கும் நம்பிக்கையாக இருக்கிறது. யோவான் 6:67-69 ஒரு அழகான வேதப்பகுதியாகும். தம்மைப் பின்பற்றுவதாகக் கூறி வந்த பலர் அவரைவிட்டு விலகிப்போனதை சாட்சியாக கண்டபின்பு, அவர் பன்னிரண்டு அப்போஸ்தலர்களிடம் திரும்பி, "நீங்களும் போய்விட மனதாயிருக்கிறீர்களோ?" என்று கேட்டார். அதற்கு பேதுரு, "ஆண்டவரே, யாரிடத்தில் போவோம், நித்தியஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே.” நாம் கர்த்தரிலும் அவருடைய வார்த்தைகளிலும் அதே நம்பிக்கை வைத்திருப்போமாக.

இங்கே இதுவரையில் வழங்கிய எதையுமே உண்மையான புலமைப்பரிசிலின் நிராகரிப்பாக எடுக்கப்படக்கூடாது. வேதாகமம் பிழையற்றது என்பது, நம் மனதைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு வேதாகமம் கூறுவதைக் கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்வதாக அர்த்தப்படுத்துவதில்லை. நாம் வார்த்தையைப் படிக்கும்படிக்கு கட்டளையிடப்படிருக்கிறோம் (2 தீமோத்தேயு 2:15), அதைப் பகுத்து ஆராய்கிறவர்கள் பாராட்டப்படுகிறார்கள் (அப்போஸ்தலர் 17:11). மேலும், வேதாகமத்தில் புரிந்துகொள்ள கடினமான தோன்றுகிற பகுதிகள் இருக்கின்றன, அதேபோல் கொடுக்கப்படும் விளக்கங்கள் மீது உண்மையான கருத்துவேறுபாடுகள் இருப்பதையும் நாம் அங்கீகரிக்கிறோம். புத்திமதி மற்றும் ஜெபத்துடன் வேதாகமத்தை அணுகுவதே நமது குறிக்கோள், நாம் புரிந்துகொள்ள முடியாத ஒன்றைக் கண்டால், நாம் கூடுதலாக ஜெபிப்போம், மேலும் படிப்போம், பதில் இன்னும் விலகிச் சென்றால், தேவனுடைய பரிபூரண வார்த்தையின் அடிப்படையிலிருந்தே நாம் நம்முடைய வரம்புகளை தாழ்மையோடு ஏற்றுக்கொள்வோம்.

English



முகப்பு பக்கம்

வேதாகமம் பிழையில்லாதது என்பதை விசுவாசிப்பது ஏன் முக்கியமானதாக இருக்கிறது?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries