இயேசு நம்முடைய பாவத்திற்கு மரிப்பதற்கு முன்பாக மக்கள் எப்படி இரட்சிக்கப்பட்டார்கள்?


கேள்வி: இயேசு நம்முடைய பாவத்திற்கு மரிப்பதற்கு முன்பாக மக்கள் எப்படி இரட்சிக்கப்பட்டார்கள்?

பதில்:
மனிதன் விழுந்து போன பிறகு, இரட்சிப்புக்கு அடித்தளமே கிறிஸ்துவின் மரணமாகத்தான் இருந்ததது. சிலுவைக்கு முன்போ அல்லது சிலுவைக்கு பின்போ உலக வரலாற்றில் திருப்பு முனையான ஒரு சம்பவமில்லாமல் ஒருவனும் இரட்சிக்கப்பட்டிருக்க முடியாது. கிறிஸ்துவின் மரணத்தில் பழைய பாவங்களுக்கும், புதிய ஏற்பாட்டு பரிசுத்தவான்களுடைய எதிர்கால பாவங்களுக்கும் கிரயம் செலுத்தப்பட்டாயிற்று. இரட்சிப்புக்கு இன்றியமையாதது எப்போதுமே விசுவாசம் தான். ஒருவருடைய விசுவாசத்தின் கருப்பொருள் கடவுளாகத்தான் இருந்ததது. “அவரை அண்டிக்கொள்கிற யாவரும் பாக்கியவான்கள்” (சங்கீதம் 2:12) என்று சங்கீதக்காரன் எழுதுகிறான். ஆதியாகமம் 15:6-இல் அபிரகாம் கர்த்தரை விசுவசித்ததை அவனுக்கு நீதியாக தேவன் எண்ணினார். (ரோமர் 4:3-8). எபிரேயர் 10:1-10 வரை நமக்கு பழைய ஏற்பாட்டு பலியின் முறைமைகள் பாவத்தை ஒழிக்கவில்லை என்று தெளிவாக போதிக்கின்றது. அது மேலும் தேவகுமாரன் பாவத்திலிருக்கும் மனுக்குலத்துக்காக இரத்தஞ்சிந்தின நாளையே கைக் காட்டியது.

காலங்கள் கடந்தபோது ஒரு விசுவாசி எதை விசுவசிக்கிறார் என்பதில்தான் மாற்றம் நிகழ்ந்துள்ளது. எதை விசுவாசிக்க வேண்டும் என்ற தேவனுடைய எதிர்பார்ப்பு அந்த காலம்வரைக்கும் மனுகுலத்திற்கு கொடுக்கப்பட்ட வெளிப்பாட்டைக் பொறுத்து தான் இருந்தது. இது படிப்படியாக வளர்ந்து வருகிற விசுவாசம் எனப்படும். ஆதாம் ஆதியாகமம் 3:15-இல் ஸ்திரியின் வித்து சாத்தானை ஜெயிக்கும் என்ற வாக்குத்தத்தத்தை விசுவசித்தான். ஆதாம் அவரை விசுவசித்தான், ஏவாளுக்கு அந்த பெயரைக் கொடுத்ததன் மூலமாக அதைக் காண்பித்தான். (ஆதியாகமம் 3:20). தேவன் அவருடைய அங்கீகாரத்தை அவர்களை ஒரு கடாவின் தோளினால் மூடிக் கட்டினார் (3:21) அந்த நேரத்தில் ஆதாம் அதை மட்டும்தான் அறிந்திருந்தான், அதை விசுவாசித்தான்.

ஆபிரகாம் தேவன் கொடுத்த வாக்குத்தத்தங்கள் மற்றும் ஆதியாகமம் 12 மற்றும் 15-இல் கொடுத்த புதிய வெளிப்பாடுகளைக் கொண்டு தேவனை விசுவசித்தான். மோசேவுக்கு முன்பாக வேதவாக்கியங்கள் எழுதப்படவில்லை. ஆனால் தேவன் வெளிப்படுத்தின காரியங்களுக்கு பொறுப்புடையவனாயிருந்தான். பழைய ஏற்பாடு முழுவதிலுமே விசுவாசிகள் தேவன் பாவத்தைக் குறித்து ஒரு நாள் பார்த்துக்கொள்வார் என்ற விசுவாசத்தில் இரட்சிக்கப்பட்டார்கள். இன்றோ, நாம் பின்னோக்கி பார்த்து, தேவன் ஏற்கனவே சிலுவையில் பாவத்தை ஜெயித்தார் என்று விசுவசிக்கிறோம். (யோவன் 3:16, எபிரேயர் 9:28)

கிறிஸ்துவின் நாளில், அதாவது சிலுவைக்கும் உயிர்தெழுதலுக்கும் முன்பாக விசுவாசிகளின் நிலை என்ன? அவர்கள் எதை விசுவசித்தார்கள்? கிறிஸ்து அவர்களுடைய பாவங்களுக்காக மரித்ததை முழுவதையும் புரிந்து கொண்டார்களா? அவர் ஊழியம் செய்து கொண்டிருக்கையில் “ அது முதல் இயேசு, தாம் எருசலேமுக்குப்போய் மூப்பராலும் பிரதான ஆசாரியராலும், வேதபாரகராலும் பல பாடுகள் பட்டு, கொலையுண்டு மூன்றாம் நாளில் எழுந்திருக்க வேண்டும் என்பதை தம்முடைய சீர்ஷகளுக்கு சொல்லத் தொடங்கினார்”. (மத்தேயு 16:21,22) இந்த செய்திக்கு சீர்ஷகளுடைய பதில் என்ன? அப்பொமுது பேதுரு அவரைத் தனியே அழைத்துக் கொண்டுபோய் ஆண்டவரே, இத உமக்கு நேரிடக்கூடாதே, இது உமக்கு சம்பவிப்பதில்லை என்று அவரைக் கடிந்துக்கொள்ளத் தொடங்கினார். “பேதுருவுக்கும் மற்ற சீஷர்களுக்கும் முழுமையான சத்தியம் தெரியவில்லை. ஆனாலும் இரட்சிக்கப்பட்டிருந்தார்கள். ஏனென்றால் அவர்கள் தேவன் பாவத்திற்குரிய கிரயத்தைப் பார்த்துக் கொள்வார் என்று விசுவசித்தார்கள். அதை எப்படி தேவன் செய்து முடிப்பார் என்று அவர்களுக்குத் தெரியாது. ஆதாமைவிட, ஆபிரகாமைவிட மோசேயைவிட, தாவீதைவிட சற்று அதிகம் கூட அவர்களுக்கு தெரியாது. ஆனாலும் தேவனை விசுவசித்தார்கள்.

இன்றைக்கு, கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலக்கு முன்பாக வாழ்ந்த மனிதர்களைவிட நமக்கு அதிக வெளிப்பாடு உள்ளது. நமக்கு முழுமையாக சத்தியம் தெரியும். “பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாவும், தீர்க்தரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்கு திருவுளம் பற்றின தேவன், இந்த கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்கு திருவுளம்பற்றினார், இவரை சர்வத்துக்கும் சுதந்திரவாளியாக நியமித்தார், இவரைக்கொண்டு உலகங்களையும் உண்டாக்கினார். (எபிரேயர் 1:1-2). நம்முடைய இரட்சிப்பு கிறிஸ்துவின் மரணத்தை அடித்தளமாக கொண்டுள்ளது. நாம் இரட்சிக்கப்பட விசுவாசமே முக்கியமானது. விசுவாசத்தின் கருப்பொருள் தேவனே.

இன்று நாமும்கூட இயேசுகிறிஸ்து நம்முடைய பாவங்களுக்காக மரித்;தாரென்றும், அடக்கம்பண்ணப்பட்ட மூன்றாவது நாள் உயிர்தெழுந்தாரென்றும் விசுவசிக்கின்றோம். (1 கொரிந்தியர் 15:3-40)

English
தமிழ் முதற் பக்கத்திற்குச் செல்க
இயேசு நம்முடைய பாவத்திற்கு மரிப்பதற்கு முன்பாக மக்கள் எப்படி இரட்சிக்கப்பட்டார்கள்?