settings icon
share icon
கேள்வி

பாக்கியமானவைகள் என்றால் என்ன?

பதில்


மலைப் பிரசங்கத்தின் ஆரம்பத்தில் இயேசு கூறிய எட்டு பாக்கியவான்களாக இருப்பீர்கள் என்னும் அறிவிப்புகள்தான் பாக்கியமானவைகள் (Beatitudes) (மத்தேயு 5:3-12), ஒவ்வொன்றும் " பாக்கியவான்களாக இருப்பீர்கள்..." என்று தொடங்குகிறது. எத்தனை பாக்கியமானவைகள் உள்ளன என்பது குறித்து விவாதம் இருக்கிறது, சிலர் ஏழு, ஒன்பது அல்லது பத்து பாக்கியமானவைகளைப் பற்றி பேசுகிறார்கள், ஆனால் மொத்த எண்ணிக்கை எட்டாகத் தோன்றுகிறது (மத்தேயு 5-ஆம் அதிகாரத்தின் வசனங்கள் 10-12 ஒரு பாக்கியமானவையாக வருகிறது).

"பாக்கியவான்கள்" என்று மொழிபெயர்க்கப்பட்ட கிரேக்க வார்த்தையின் அர்த்தம் "மகிழ்ச்சி, ஆனந்தம்" அல்லது, எழுத்தியல் பிரகாரம், "விரிவாக்கப்பட்டதாய் இருப்பீர்கள்" என்பதாகும். மலைப் பிரசங்கத்தில், இயேசு மேலோட்டமான மகிழ்ச்சியைக் குறிக்கும் வார்த்தையைக் காட்டிலும் இந்த வார்த்தையை குறிப்பாகப் பயன்படுத்துகிறார்; இந்த சூழலில், பாக்கியவான்கள் என்பது ஆவிக்குரிய நல்வாழ்வு மற்றும் வளமான நிலையை குறிக்கிறது. சந்தோஷம் என்பது ஆத்துமாவின் ஆழ்ந்த மகிழ்ச்சியைக் குறிக்கிறது. பாக்கியத்தன்மையின் முதல் அம்சத்தை அனுபவிப்பவர்கள் (எளிமையுள்ளவர்கள், துயரப்படுகிறவர்கள், சாந்தகுணமுள்ளவர்கள், நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள், இரக்கமுடையவர்கள், இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள், சமாதானம் பண்ணுகிறவர்கள் மற்றும் நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள்) பாக்கியத்தன்மையின் இரண்டாவது அம்சத்தையும் அனுபவிப்பார்கள் (பரலோகராஜ்யம், ஆறுதல், பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுதல், திருப்தி, இரக்க, தேவனைத் தரிசித்தல், தேவனுடைய புத்திரர் என்னப்படுதல், மற்றும் பரலோகராஜ்யம்). பாக்கியவான்களுக்கு இரட்சிப்பில் பங்கு உண்டு மற்றும் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசித்து, பரலோகத்தின் ஒரு சுவையை அனுபவிக்கிறது. ஒவ்வொரு பாக்கியத்தன்மையின் தொடக்கத்தின் மற்றொரு சாத்தியமான மொழிபெயர்ப்பு "ஓ பேரின்பம் [அல்லது ஆசீர்வாதம்]. . . .”

தற்போதைய மற்றும் எதிர்காலத்தின் சிறந்த சீடன் மற்றும் அவரது வெகுமதிகளை பாக்கியமானவைகள் விவரிக்கிறது. இந்த வேதப்பகுதியில் இயேசு விவரிக்கும் நபர் "ராஜ்யத்திற்கு வெளியே" இருப்பவர்களை விட வித்தியாசமான குணாம்சத்தையும் வாழ்க்கை முறையையும் கொண்டிருக்கிறார். ஒரு இலக்கிய வடிவமாக, பழைய ஏற்பாட்டில், குறிப்பாக சங்கீதங்களில் (1:1; 34:8; 65:4; 128:1) மற்றும் புதிய ஏற்பாட்டிலும் (யோவான் 20:29; 14:22; யாக்கோபு 1:12; வெளிப்படுத்துதல் 14:13) காணப்படுகிறது.

English



முகப்பு பக்கம்

பாக்கியமானவைகள் என்றால் என்ன?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries