அர்மகெதோன் யுத்தம் என்றால் என்ன?


கேள்வி: அர்மகெதோன் யுத்தம் என்றால் என்ன?

பதில்:
"அர்மகெதோன்" என்ற வார்த்தை எபிரெய வார்த்தையான ஹார்-மேக்கேடோன் என்ற வார்த்தையிலிருந்து வருகிறது, அதாவது "மெகிதோ மலை" என்று பொருள்படும், இது வேதாகம தீர்க்கதரிசனத்தில் முன்னறிவிக்கப்பட்டபடி எதிர்க்கிறிஸ்துவின் படைகளை தேவன் தலையிட்டு முறியடித்து அழிக்கும் எதிர்கால யுத்தத்தோடு தொடர்புடையதாக பொருள்படும் (வெளி. 16:16; 20:1-3). அர்மகெதோன் யுத்தத்தில் ஈடுபட்டுள்ள திரளான ஜனங்கள் அனைவரும் கிறிஸ்துவுக்கு எதிராகப் போரிடுவதற்காக கூடிவருவார்கள்.

அர்மகெதோன் பள்ளத்தாக்கின் சரியான இடம் நமக்கு தெளிவாக இல்லை, ஏனெனில் மெகிதோ என்கிற மலை இல்லை. இருப்பினும், "ஹார்" என்பது குன்று என்றும் அர்த்தம் என்பதால், எருசலேமின் வடக்கே சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மெகிதோ சமவெளிக்கு அருகே அமைந்துள்ள மலையாகும் இந்த இடம். அந்த பிராந்தியத்தில் இருநூறுக்கும் அதிகமான போர்கள் போரிடப்பட்டுள்ளன. மெகிதோவின் சமவெளி மற்றும் எஸ்த்ராலோனின் அருகிலுள்ள சமவெளி ஆகியவை அர்மகெதோன் யுத்தத்திற்கான மைய புள்ளியாக இருக்கும், இது இஸ்ரவேலின் முழு நீளமான இஸ்ரேல் ஏதோமிலும் அதிலுள்ள போஸ்றா பட்டணத்திலுமாக இருக்கும் (ஏசாயா 63:1). இஸ்ரவேல் வரலாற்றில் இரண்டு பெரிய வெற்றிகளுக்கு அர்மகெதோன் பள்ளத்தாக்கு புகழ் பெற்றது: 1) கானானியர்மேல் பராக்கின் வெற்றி (நியாயாதிபதிகள் 4:15) மற்றும் 2) மீதியானியர்கள்மேல் கிதியோனின் வெற்றி (நீதிபதிகள் 7). அதுமட்டுமின்றி அர்மகெதோன் இரண்டு பெரிய துன்பங்களுக்கும் இடமாக இருந்தது: 1) சவுல் மற்றும் அவனது குமாரர்களின் மரணம் (1 சாமுவேல் 31:8) மற்றும் 2) யோசியா ராஜாவின் மரணம் (2 ராஜாக்கள் 23:29-30; 2 நாளாகமம் 35:22).

இந்த வரலாறு காரணமாக, அர்மகெதோன் பள்ளத்தாக்கு தேவனுக்கும் தீய சக்திகளுக்கும் இடையேயான இறுதி மோதலின் சின்னமாக மாறியது. "அர்மகெதோன்" என்ற வார்த்தை வெளி. 16:16-ல் மட்டுமே இடம்பெற்றுள்ளது, “அப்பொழுது எபிரெயு பாஷையிலே அர்மகெதோன் என்னப்பட்ட இடத்திலே அவர்களைக் கூட்டிச் சேர்த்தான்.” இது இஸ்ரவேலின்மேல் கர்த்தரை இறுதியில் தாக்குவதற்கு எதிர்க்கிறிஸ்துவும் அவனுக்கு விசுவாசமுள்ள ராஜாக்களும் ஒன்றாக கூட்டிவருவதைப் பற்றி பேசுகிறது. அர்மகெதோனில் “தேவனுடைய உக்கிரமான கோபாக்கினையாகிய மதுவுள்ள பாத்திரத்தைக் கொடுக்கும்படி அது அவருக்கு முன்பாக நினைப்பூட்டப்பட்டது” (வெளி. 16:19), மற்றும் எதிர்க்கிறிஸ்து மற்றும் அவனைப் பின்பற்றினவர்கள் அகற்றப்பட்டு தோற்கடிக்கப்படுவார்கள். இப்படியாக "அர்மகெதோன்" என்பது மெகிதோ சமவெளியில் நடக்கவிருக்கும் இறுதிப்போருக்கு மட்டுமல்ல, உலகின் முடிவைக் குறிக்கும் பொதுவான சொல்லாக மாறிவிட்டது.

English


முகப்பு பக்கம்
அர்மகெதோன் யுத்தம் என்றால் என்ன?