settings icon
share icon
கேள்வி

இரட்சிப்புக்கு ஞானஸ்நானம் அவசியம் என்று மாற்கு 16:16 போதிக்கிறதா?

பதில்


எந்தவொரு ஒற்றை வசனம் அல்லது வேதப்பகுதியுடனும், வேதாகமத்தின் மீதமுள்ள பகுதிகளில் அதைப் பற்றி நமக்குத் தெரிந்தவற்றின் மூலம் முதலில் வேதாகமம் என்ன கூறுகிறது என்பது நாம் கண்டறிவதன் மூலம் நாம் அவற்றை சரியாகப் புரிந்துகொள்கிறோம். ஞானஸ்நானம் மற்றும் இரட்சிப்பின் விஷயத்தில், ஞானஸ்நானம் உட்பட எந்தவிதமான கிரியைகளினாலும் அல்ல, மாறாக இயேசு கிறிஸ்து மீதான விசுவாசத்தின் மூலம் மட்டுமே இரட்சிப்பு என்பதை வேதாகமம் மிகத் தெளிவாக கூறுகிறது (எபேசியர் 2:8-9). எனவே, ஞானஸ்நானம் அல்லது வேறு எந்த செயலும் இரட்சிப்புக்கு அவசியம் என்ற முடிவுக்கு வரும் எந்த விளக்கமும் தவறான விளக்கமாகும். மேலும் கூடுதல் தகவலுக்கு, தயவுசெய்து எங்கள் இணையதள வலைப்பக்கத்தில் "இரட்சிப்பு விசுவாசத்தால் மட்டுமா, அல்லது விசுவாசம் மற்றும் கிரியைகளினாலா?"

மாற்கு 16:16 குறித்து, மாற்கு 16 ஆம் அதிகாரம், வசனங்கள் 9-20 வரையிலுள்ள பகுதியில் சில உரை சிக்கல்கள் உள்ளன என்பதை நினைவில் கொள்வது அவசியம். இந்த வசனங்கள் முதலில் மாற்கு நற்செய்தியின் ஒரு பகுதியாக இருந்ததா அல்லது அவை பின்னர் ஒரு எழுத்தாளரால் சேர்க்கப்பட்டதா என்கிற கேள்வி உள்ளது. இதன் விளைவாக, மாற்கு 16:9-20 வரையிலான பகுதியில் இது வேதத்தின் மற்ற பகுதிகளால் ஆதரிக்கப்படாவிட்டால், சர்ப்பத்தை எடுத்தல் போன்றவற்றில் ஒரு முக்கிய கோட்பாட்டை அடிப்படையாகக் கொள்ளாமல் இருப்பது நல்லது.

வசனம் 16 மாற்குவில் இருந்த அசல் பகுதி என்று கருதினால், இரட்சிப்புக்கு ஞானஸ்நானம் தேவை என்று அது போதிக்கிறதா? குறுகிய பதில், இல்லை, அது போதிக்கவில்லை. இரட்சிப்புக்கு ஞானஸ்நானம் தேவை என்று இதை போதிக்க, வசனம் உண்மையில் சொல்வதைத் தாண்டி ஒருவர் செல்ல வேண்டும். இந்த வசனம் போதிப்பது என்னவென்றால், இரட்சிப்புக்கு விசுவாசம் அவசியம், இது விசுவாசம் மட்டுமே என்று குறிப்பிடப்பட்ட எண்ணற்ற வசனங்களுடன் ஒத்துப்போகிறது (எ.கா. யோவான் 3:18; யோவான் 5:24; யோவான் 12:44; யோவான் 20:31; 1 யோவான் 5:13).

"விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான்" (மாற்கு 16:16). இந்த வசனம் இரண்டு அடிப்படை அறிக்கைகளால் ஆனது. 1—விசுவாசித்து ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான். 2—விசுவாசியாதவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான்.

ஞானஸ்நானம் பெற்ற விசுவாசிகளைப் (அதாவது இரட்சிக்கப்பட்டவர்கள்) பற்றி இந்த வசனம் நமக்குச் சொல்லும் அதே வேளையில், ஞானஸ்நானம் பெறாத விசுவாசிகளைப் பற்றி எதுவும் சொல்லவில்லை. இரட்சிப்புக்கு ஞானஸ்நானம் அவசியம் என்று இந்த வசனம் போதிக்க வேண்டுமெனில், மூன்றாவது கூற்று அவசியம், அதாவது, " விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெறாதவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான்" அல்லது " ஞானஸ்நானம் பெறாதவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான்." ஆனால், நிச்சயமாக, இந்த அறிக்கைகள் எதுவும் வசனத்தில் காணப்படவில்லை.

இரட்சிப்புக்கு ஞானஸ்நானம் அவசியம் என்று போதிக்க மாற்கு 16:16 ஐப் பயன்படுத்த முயற்சிப்பவர்கள் ஒரு பொதுவான ஆனால் முக்கியமான தவறைச் செய்கிறார்கள், இது சில நேரங்களில் எதிர்மறை அனுமானம் தவறு என்று அழைக்கப்படுகிறது. இந்த பொய்யை பின்வருமாறு கூறலாம்: "ஒரு கூற்று உண்மையாக இருந்தால், அந்த கூற்றின் அனைத்து மறுப்புகளும் (அல்லது எதிரெதிராக உள்ளவை) கூட உண்மை என்று நாம் கருத முடியாது." எடுத்துக்காட்டாக, "பழுப்பு நிற புள்ளிகள் கொண்ட ஒரு நாய் ஒரு விலங்கு" என்ற கூற்று உண்மை; எனினும், எதிர்மறையாக, "நாய்க்கு பழுப்பு நிற புள்ளிகள் இல்லை என்றால், அது ஒரு விலங்கு அல்ல" என்பது தவறானது. அதேபோல், "விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்" என்பது உண்மைதான்; எனினும், "யார் விசுவாசித்து ஆனால் ஞானஸ்நானம் பெறவில்லையோ அவன் இரட்சிக்கப்படமாட்டான்” என்பது ஒரு தேவையற்ற அனுமானம் ஆகும். ஆனால் இது ஞானஸ்நான மறுபிறப்பை ஆதரிப்பவர்களின் அனுமானம்.

இந்த உதாரணத்தைக் கவனியுங்கள்: "யாரெல்லாம் விசுவாசமுள்ளவர்களாகி கன்சாஸில் வாழ்கிறார்களோ அவர்கள் இரட்சிக்கப்படுவார்கள், ஆனால் விசுவாசியாதவர்கள் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவார்கள்." இந்த கூற்று கண்டிப்பாக உண்மை; இயேசுவை விசுவாசிக்கும் கன்சானியர்கள் இரட்சிக்கப்படுவார்கள். இருப்பினும், கன்சாஸில் வாழும் விசுவாசிகள் மட்டுமே இரட்சிக்கப்படுவார்கள் என்று சொல்வது நியாயமற்ற மற்றும் தவறான அனுமானமாகும். பரலோகம் செல்வதற்கு ஒரு விசுவாசமுள்ளவன் கன்சாஸில் வாழ வேண்டும் என்று கூற்று கூறவில்லை. அதேபோல், மாற்கு 16:16 ஒரு விசுவாசி ஞானஸ்நானம் பெற வேண்டும் என்று கூறவில்லை. இந்த வசனம் ஞானஸ்நானம் பெற்ற விசுவாசிகளைப் பற்றிய ஒரு உண்மையைக் கூறுகிறது (அவர்கள் இரட்சிக்கப்படுவார்கள்), ஆனால் ஞானஸ்நானம் பெறாத விசுவாசிகளைப் பற்றி அது எதுவும் சொல்லவில்லை. கன்சாஸில் வசிக்காத விசுவாசிகள் இருக்கலாம், ஆனாலும் அவர்கள் இன்னும் இரட்சிக்கப்படுகிறார்கள்; ஞானஸ்நானம் பெறாத விசுவாசிகள் இருக்கலாம், ஆனால் அவர்களும் இன்னும் இரட்சிக்கப்படுகிறார்கள்.

இரட்சிப்புக்குத் தேவையான ஒரு குறிப்பிட்ட நிபந்தனை மாற்கு 16:16 இன் இரண்டாம் பாகத்தில் கூறப்பட்டுள்ளது: "விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான்." சாராம்சத்தில், இயேசு விசுவாசத்தின் நேர்மறையான நிலை (விசுவாசமுள்ளவனெவனோ அவன் இரட்சிக்கப்படுவான்) மற்றும் விசுவாசமில்லாத எதிர்மறை நிலை (விசுவாசியாதவனெவனோ அவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான்). எனவே, இரட்சிப்பின் தேவை விசுவாசம் என்று நாம் உறுதியாகக் கூறலாம். மிக முக்கியமாக, இந்த நிலை வேதம் முழுவதும் நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் இருப்பதை நாம் காண்கிறோம் (யோவான் 3:16; யோவான் 3:18; யோவான் 3:36; யோவான் 5:24; யோவான் 6:53-54; யோவான் 8:24; அப். 16:31 )

மாற்கு 16:16 இல் இரட்சிப்புக்கு (ஞானஸ்நானம்) தொடர்பான ஒரு நிபந்தனையை இயேசு குறிப்பிடுகிறார். ஆனால் ஒரு தொடர்புடைய நிபந்தனை தேவையுடன் குழப்பப்படக்கூடாது. உதாரணமாக, காய்ச்சல் இருப்பது உடல்நலக்குறைவுடன் தொடர்புடையது, ஆனால் நோய் இருப்பதற்கு காய்ச்சல் தேவையில்லை. வேதாகமத்தில் எங்கும் "ஞானஸ்நானம் பெறாதவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான்" போன்ற ஒரு கூற்றை நாம் காண்பதில்லை. எனவே, மாற்கு 16:16 அல்லது வேறு எந்த வசனத்தின் அடிப்படையிலும் இரட்சிப்புக்கு ஞானஸ்நானம் அவசியம் என்று நாம் கூற முடியாது.

மார்க் 16:16 ஞானஸ்நானம் இரட்சிப்புக்கு அவசியமா அல்லது அவசியமில்லையா என்று போதிக்கிறதா? இல்லை அது போதிக்கவில்லை. இரட்சிப்புக்கு விசுவாசம் தேவை என்பதை அது தெளிவாக நிறுவுகிறது, ஆனால் ஞானஸ்நானம் தேவை என்ற கருத்தை அது நிரூபிக்கவோ மறுக்கவோ இல்லை. அப்படியென்றால், ஒருவர் இரட்சிக்கப்படுவதற்கு ஞானஸ்நானம் எடுக்கப்பட வேண்டும் என்று நமக்கு எப்படித் தெரியும்? தேவனுடைய வார்த்தையின் முழு ஆலோசனையை நாம் பார்க்க வேண்டும். சான்றுகளின் சுருக்கம் இங்கே:

1—நாம் விசுவாசத்தினால் மட்டுமே இரட்சிக்கப்பட்டோம் என்று வேதாகமம் தெளிவாக கூறுகிறது. ஆபிரகாம் விசுவாசத்தால் இரட்சிக்கப்பட்டான், நாம் விசுவாசத்தால் இரட்சிக்கப்பட்டோம் (ரோமர் 4:1-25; கலாத்தியர் 3:6-22).

2—வேதாகமம் முழுவதும், ஒவ்வொரு அருளாட்சியிலும், மக்கள் ஞானஸ்நானம் பெறாமல் இரட்சிக்கப்பட்டுள்ளனர். பழைய ஏற்பாட்டில் உள்ள ஒவ்வொரு விசுவாசியும் (எ.கா. ஆபிரகாம், யாக்கோபு, தாவீது, சாலமோன்) இரட்சிக்கப்பட்டார்கள் ஆனால் ஞானஸ்நானம் பெறவில்லை. சிலுவையில் அறையப்பட்ட கள்ளன் இரட்சிக்கப்பட்டான் ஆனால் ஞானஸ்நானம் பெறவில்லை. ஞானஸ்நானம் பெறுவதற்கு முன்பு கொர்நேலியு இரட்சிக்கப்பட்டான் (அப்போஸ்தலர் 10:44-46).

3—ஞானஸ்நானம் என்பது நமது விசுவாசத்தின் சாட்சி மற்றும் நாம் இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிறோம் என்று பகிரங்கமாக அறிவிப்பது ஆகும். நாம் விசுவாசிக்கும் தருணத்தில் நமக்கு நித்திய ஜீவன் உண்டு என்று வேதம் சொல்கிறது (யோவான் 5:24), மற்றும் ஞானஸ்நானம் பெறுவதற்கு முன்பு விசுவாசம் எப்போதும் வருகிறது. ஞானஸ்நானம் ஒரு இடைப்பட்ட நடைபாதையில் நடப்பது அல்லது ஒரு ஜெபம் இரட்சிக்கிறது என்று சொல்வது அல்லாமல் நம்மை இரட்சிக்காது. நாம் விசுவாசிக்கும்போது நாம் இரட்சிக்கப்படுகிறோம்.

4—ஒருவர் ஞானஸ்நானம் பெறாவிட்டால் அவர் இரட்சிக்கப்படமாட்டார் என்று வேதாகமம் ஒருபோதும் சொல்லவில்லை.

5—இரட்சிப்புக்கு ஞானஸ்நானம் தேவைப்பட்டால், மற்றொரு தரப்பினர் இல்லாமல் யாரையும் இரட்சிக்க முடியாது. ஒரு நபர் இரட்சிக்கப்படுவதற்கு முன்பு ஞானஸ்நானம் கொடுக்க யாராவது அங்கு இருக்க வேண்டும். இது யாரை இரட்சிக்க முடியும் மற்றும் எப்போது இரட்சிக்க முடியும் என்பதை திறம்பட கட்டுப்படுத்துகிறது. இந்த கோட்பாட்டின் விளைவுகள், ஒரு தர்க்கரீதியான முடிவுக்கு கொண்டு செல்லப்படும் போது, பாழ்கடிப்பைத் தரும். உதாரணமாக, போர்க்களத்தில் விசுவாசம் வைத்திருந்தாலும், ஞானஸ்நானம் பெறுவதற்கு முன்பே கொல்லப்பட்ட ஒரு போர்ச்சேவகன் நரகத்திற்குச் செல்வார்.

6—வேதாகமம் முழுவதும், விசுவாசிக்கும் இடத்தில், ஒரு விசுவாசி இரட்சிப்பின் அனைத்து வாக்குறுதிகளையும் ஆசீர்வாதங்களையும் பெற்றிருப்பதை நாம் காண்கிறோம் (யோவான் 1:12; 3:16; 5:24; 6:47; 20:31; அப். 10:43; 13:39; 16:31). ஒருவன் விசுவாசிக்கும்போது, அவனுக்கு நித்திய ஜீவன் உண்டு, நியாயத்தீர்ப்பின் கீழ் வருவதில்லை, மரணத்திலிருந்து ஜீவனுக்குள் பிரவேசிப்பான் (யோவான் 5:24)—அவன் அல்லது அவள் ஞானஸ்நானம் பெறுவதற்கு முன்பே இதனைப் பெறுகிறார்கள்.

நீங்கள் ஞானஸ்நானத்தின் மறுபிறப்பை விசுவாசிக்கிறீர்கள் என்றால், நீங்கள் யாரை அல்லது எதை விசுவாசிக்கிறீர்கள் என்பதை ஜெபத்துடன் கருத்தில் கொள்வது நல்லது. உங்கள் விசுவாசம் ஒரு சரீரப்பிரகாரமான செயலில் (ஞானஸ்நானம் பெறுதல்) உள்ளதா அல்லது சிலுவையில் செய்து முடிக்கப்பட்ட கிறிஸ்துவின் கிரியையில் உள்ளதா? இரட்சிப்பிற்காக நீங்கள் யாரை அல்லது எதை விசுவாசிக்கிறீர்கள்? அது நிழலா (ஞானஸ்நானம்) அல்லது நிஜமா (இயேசு கிறிஸ்து)? நமது விசுவாசம் கிறிஸ்துவில் மட்டுமே தங்கியிருக்க வேண்டும். "அவருடைய கிருபையின் ஐசுவரியத்தின்படியே, இவருடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது" (எபேசியர் 1:7).

English



முகப்பு பக்கம்

இரட்சிப்புக்கு ஞானஸ்நானம் அவசியம் என்று மாற்கு 16:16 போதிக்கிறதா?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries