settings icon
share icon
கேள்வி

கிறிஸ்தவத்திற்கு விரோதமான இத்தகைய உலகில் கிறிஸ்தவர்கள் தங்கள் விசுவாசத்திற்காக எப்படி நிலைத்து நிற்க வேண்டும்?

பதில்


கிறிஸ்தவர்களாகிய நாம் கிறிஸ்துவுக்காக நிலைத்து நிற்க இரண்டு காரிங்கள் செய்யவேண்டும், அவருடைய வார்த்தையின்படி வாழ்வதும், அவரைப் பற்றிய நமது சொந்த அறிவை வளர்ப்பதும் ஆகும். கிறிஸ்து சொன்னார், "உங்கள் வெளிச்சம் மனிதர்களுக்கு முன்பாக பிரகாசிக்கக்கடவது..." (மத்தேயு 5:16). சுவிசேஷத்தை ஆதரிக்கும் விதத்தில் நாம் வாழ்ந்து செயல்பட வேண்டும் என்பதே இதன் பொருள். நற்செய்தி (எபேசியர் 6:10-17) மற்றும் நம்மைச் சுற்றியுள்ள உலகம் ஆகிய இரண்டின் அறிவையும் நாம் ஆயுதமாகக் கொள்ள வேண்டும். 1 பேதுரு 3:15 கூறுகிறது, “கர்த்தராகிய தேவனை உங்கள் இருதயங்களில் பரிசுத்தம்பண்ணுங்கள்; உங்களிலிருக்கிற நம்பிக்கையைக்குறித்து உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் உத்தரவுசொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள்.” நாம் செய்யக்கூடியது, கிறிஸ்துவைப் போல வாழவும் போதிக்கவும், மீதமுள்ளவற்றை அவர் கவனித்துக் கொள்ளும்படி விட்டுவிட வேண்டும்.

கிறிஸ்தவத்தை விமர்சிப்பவர்கள் சமீபகாலமாக அதிகம் பேசுகிறார்கள். தேவனை நம்பாத அல்லது அவரைப் பற்றிய சத்தியத்தைப் புரிந்து கொள்ளாதவர்களாக பலர் இருப்பதால் இது ஒரு பகுதிக் காரணமாகும். ஆயினும்கூட, கிறிஸ்தவர்களுக்கு எதிரானவர்களின் வெளிப்படையான அதிகரிப்பு உணர்வின் காரணமாகும். பல தலைப்புகளைப் போலவே, கிறிஸ்தவத்தை உண்மையிலேயே இகழ்பவர்கள், விசுவாசிகள் அல்லாதவர்களில் மிகவும் சத்தமாகவும், மிகவும் குரல் கொடுப்பவர்களாகவும் உள்ளனர். நம்பிக்கை இல்லாதவர்களில் பெரும்பாலோர், விசுவாசிகளைத் தொந்தரவு செய்வதில் அக்கறை காட்டுவதில்லை. சில கோபமாக, சத்தமாக, கசப்பான அவிசுவாசிகள் அவர்களை விட அதிகமான எண்ணிக்கையில் தோன்றும் அளவுக்கு சத்தம் போடுகிறார்கள்.

விசுவாசிகளை "அறியாமை", "முட்டாள்", "மூளைச் சலவை" என்று குறிப்பிடுவது அல்லது நம்பிக்கை இல்லாதவர்களை விட நம்பிக்கை உள்ளவர்கள் குறைந்த புத்திசாலிகள் என்று கூறுவது, மதம் சாராத கூட்டத்தின் பொதுவான அவமதிப்பாகும். ஒரு கிறிஸ்தவர் தனது விசுவாசத்திற்காக புத்திசாலித்தனமாக நிற்கும்போது, சொற்கள் " வைராக்கியமுடையவர்கள்", "தீவிரமானவர்கள்" அல்லது "வெறித்தனமானவர்கள்" என்று மாறுகின்றன. விசுவாசி தயவுள்ளவர், அன்பானவர் என்பதை அறிந்தவர்கள் இதைக் கேட்கும்போது, நாத்திகர் தன்னை முட்டாள் போல் பார்க்கத் தொடங்குகிறார் (சங்கீதம் 53:1). பெரும்பாலான விசுவாசிகள் அல்லாதவர்களுக்கு கிறிஸ்தவர்களை எதிர்மறையாகப் பார்ப்பதற்கு தனிப்பட்ட காரணம் எதுவும் இல்லை, ஆனால் அவர்கள் சில சமயங்களில் சத்தமாக கிறிஸ்தவர்களுக்கு எதிரானவர்களிடமிருந்து பலவற்றைக் கேட்கிறார்கள், அது அப்படித்தான் என்று அவர்கள் கருதுகிறார்கள். உண்மையைக் கண்டுகொள்ள அவர்களுக்கு கிறிஸ்துவைப் போன்ற வாழ்க்கையின் எடுத்துக்காட்டுகள் தேவை.

நிச்சயமாக, ஒரு கிறிஸ்தவர் என்று கூறிக்கொள்ளும் ஒருவர் கிறிஸ்துவைப் போல் இல்லாத ஒன்றைச் சொன்னாலோ அல்லது செய்தாலோ, அவரை ஒரு பொதுவான மத மாய்மாலக்காரன் என்று அடையாளம் காட்டுவதற்குக் கோபமுல்லா, உரத்த சத்தமிடுகிற கூட்டம் உள்ளது. இது நாம் எதிர்பார்க்கும்படி எச்சரிக்கப்பட்ட ஒன்று (ரோமர் 1:28-30; மத்தேயு 5:11). அந்த நபர் செய்ததை எதிர்த்துப் பேசும் வேதாகமத்தின் ஒரு பகுதியை மேற்கோள் காட்டுவதே சிறந்த விஷயம். நாத்திகர்களுக்கு நினைவூட்டுங்கள், ஒருவர் தன்னை ஒரு கிறிஸ்தவர் என்று சொல்வதால், அவர் ஒரு கிறிஸ்தவர் என்று நினைத்தாலும், அது அவர் அப்படி இருக்கிறார் என்று அர்த்தமல்ல. மத்தேயு 7:16,20, உண்மையான கிறிஸ்தவர்கள் வெறுமனே அவர்கள் கூறிக்கொள்வதால் மட்டும் அவர்கள் கிறிஸ்தவர்கள் என்று அறியப்படாமல், அவர்களின் கிரியைகளால் அறியப்படுவார்கள் என்று நமக்குக் கூறுகிறது. மேலும் பாவஞ்செய்யாத யாரும் வாழ்வதில்லை என்பதை விமர்சகர்களுக்கு நினைவூட்டுங்கள் (ரோமர் 3:23).

நினைவில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், யாரும், எவ்வளவு வற்புறுத்தினாலும், அவர் நம்ப விரும்பாத எதையும் நம்பும்படி யாரையும் கட்டாயப்படுத்த முடியாது. என்ன ஆதாரம் இருந்தாலும், எந்த வாதமாக இருந்தாலும், ஜனங்கள் தாங்கள் நம்ப விரும்புவதை நம்புவார்கள் (லூக்கா 12:54-56). நம்ப வைக்க வேண்டியது ஒரு கிறிஸ்தவரின் வேலை அல்ல. பரிசுத்த ஆவியானவர் ஜனங்களைக் கண்டித்து உணர்த்துகிறார் (யோவான் 14:16-17), மேலும் அவர்கள் நம்பலாமா வேண்டாமா என்பதைத் தேர்ந்தெடுக்கிறார்கள். நாம் என்ன செய்ய முடியும் என்றால், முடிந்தவரை கிறிஸ்துவைப் போன்ற ஒரு வழியில் நம்மை முன்னிலைப்படுத்த வேண்டும். கிறிஸ்தவர்களுக்கு எதிராக ஆயுதங்களைப் பயன்படுத்தத் தேடி வேதாகமத்தை முழுவதுமாகப் படிக்கிற நாத்திகர்கள் பலர் இருப்பதும், வேதாகமத்தைப் படிக்காத கிறிஸ்தவர்கள் பலர் இருப்பதும் வருத்தமளிக்கிறது.

ஒரு கிறிஸ்தவர் தயவு, தாழ்மை மற்றும் இரக்கமுள்ள வாழ்க்கையை வெளிப்படுத்தும் போது, அவரை ஒரு வெறுக்கத்தக்க, கொடூரமான மதவெறியர் என்று குற்றம் சாட்டுவது கோபப்படும் கூட்டத்திற்கு கடினமாக உள்ளது. ஒரு கிறிஸ்தவர் மதச்சார்பற்ற வாதங்களை துல்லியமாக விவாதிக்கவோ, கலந்துரையாடவோ அல்லது நீக்கவோ முடியும் என்றால், "அறியாமை" என்ற முத்திரை இனி பொருந்தாது. மதச்சார்பற்ற வாதங்களைப் படித்து, அவற்றின் குறைபாடுகளை கண்ணியமாக வெளிப்படுத்தக்கூடிய ஒரு கிறிஸ்தவர், நாத்திகர்களால் முன்வைக்கப்பட்ட ஒரே மாதிரியான கொள்கைகளை அகற்ற உதவுகிறார். அறிவு என்பது ஆயுதம், அதை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று கிறிஸ்துவை நமக்கு வழிநடத்த அனுமதிக்கும்போது அது வெல்ல முடியாதது.

Englishமுகப்பு பக்கம்

கிறிஸ்தவத்திற்கு விரோதமான இத்தகைய உலகில் கிறிஸ்தவர்கள் தங்கள் விசுவாசத்திற்காக எப்படி நிலைத்து நிற்க வேண்டும்?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries