அவிசுவாசிகளின் ஆத்துமா உடலோடு அழிவுறும் என்னும் கொள்கை வேதாகமத்தின் அடிப்படையிலானதா?


கேள்வி: அவிசுவாசிகளின் ஆத்துமா உடலோடு அழிவுறும் என்னும் கொள்கை வேதாகமத்தின் அடிப்படையிலானதா?

பதில்:
அவிசுவாசிகளின் ஆத்துமா உடலோடு அழிவுறும் என்னும் கொள்கை என்பது அவிசுவாசிகள் நித்தியத்தை நரகத்திலே கழிக்க மாட்டார்கள் ஆனால் அதற்கு பதிலாக இறந்த பின்பு அழிக்கப்படுவார்கள் என்பதே ஆகும். நரகத்தில் நித்தியத்தை செலவு செய்தல் என்பது பரிதாபமானது அதனால் அவிசுவாசிகளின் ஆத்துமா உடலோடு அழிவுறும் என்னும் கொள்கை என்பது அநேகருக்கு ஒரு கவர்ச்சியான விசுவாசம் ஆகும். வேதாகமத்தின் சில பகுதிகள் விசுவாசியாதவர்களின் ஆத்துமா உடலோடு அழிவுறும் என்னும் கொள்கைக்காக வாதிட்டாலும், வேதாகமத்தில் பரவலாக பார்க்கும் போது துன்மார்கரின் முடிவோ நரகத்தில் நித்திய அழிவு என்று வேதாகமம் சொல்லுகிறது. கீழ்கானும் உபதேசத்தின் தவரான புரிந்துக்கொள்ளுதலால் ஏற்பட்ட விளைவே இந்த கொள்கையை ஒரு சிலர் விசுவாசிக்க காரணம் ஆகும். 1) பாவத்தின் விளைவு 2) தேவனின் நீதி 3) இயற்க்கையான நரகம்.

இயற்க்கையான நரகத்தின் படி இக் கொள்கையாளர்கள் அக்கினிக்கடலுக்கான அர்த்தத்தை தவராக புரிந்துகொண்டுள்ளனர். நிச்சயமாக மனிதன் எரிகிற எரிமழைக்குழம்பு ஏரியில் பாடுப்பட்டால் அவன்ஃஅவள் உடனடியாக எரிந்து விடுவார்கள். எனினும் அக்கினிக்கடல் என்பது இயற்க்கை மற்றும் ஆவிக்குரிய மண்டலத்தைக் குறிக்கிறது. இது ஏதோ மனிதனின் சரீரம் அக்கினி;க்கடலில் தள்ளப்படுவதல்ல, இது மனிதனின் சரீரம், ஆத்துமா, மற்றும் ஆவி தள்ளப்படுதலை குறிக்கிறது. இயற்க்கையான அக்கினியினால் மனிதனின் ஆவியை அழிக்க முடியாது. இரட்ச்சிக்கப்பட்டவர்களை போலவே நித்தியத்திர்காக இரட்சிக்கப்படாதவர்கள் சரீரத்தோடு உயிர்த்தெழுகின்றனர் (வெளிப்படுத்தின விசேஷம் 20:31; அப்போஸ்தலர் 24:15). இந்த சரீரமானது நித்திய அழிவுக்கு ஆயத்தமாக்கப்பட்டுள்ளது.

அவிசுவாசிகளின்; ஆத்துமா உடலோடு அழிவுறும் என்னும் கொள்கையாளர்கள் தவராக புரிந்து கொண்ட மற்றொரு அம்சம் நித்தியம் ஆகும்.; “அய்யோனிஒன்” என்கிற கிரேக்க வார்த்தை வழக்கமாக “நித்தியம்” என்று மொழிப்பெயர்க்கப்படுகிறது ஆனால் அதனுடைய விளக்கத்தின் அர்த்தம் “நித்தியம்” அல்ல. இது குறிப்பாக “காலம்” அல்லது யுகம் அல்லது குறிப்பிட்ட நேரத்தை குறிக்கிறது. எனினும் புதிய ஏற்பாட்டில் “அய்யோனிஒன்” என்ற வார்த்தை சில நேரங்களில் நித்திய நீண்ட நேரத்தை குறிக்கிறது. வெளிப்படுத்தின விசேஷம் 20:10 ல் வாசிக்கிறோம் பிசாசானவன், மிருகமும், கள்ளத்தீர்க்கதரிசியுமிருக்கிற இடமாகிய அக்கினியும் கந்தகமுமான கடலிலே தள்ளப்பட்டான், அவர்கள் இரவும் பகலும் சதாகாலங்களிலும் வாதிக்கப்படுவார்கள்.

இந்த மூவரும் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டதும் அழிந்து போகவில்லை. பின்னே ஏன் இரட்சிக்கப்படாதவர்களின் அழிவு வித்தியாசமாக (வெளிப்படுத்தின விசேஷம் 20:14-15) இருக்க வேண்டும்? மத்தேயு 25:46 நித்திய அக்கினிக்கடல் இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ள தக்கதான ஆதாரமாகும், “அந்தப்படி, இவர்கள் நித்திய ஆக்கினையை அடையவும், நீதிமான்களோ நித்திய ஜீவனை அடையவும் போவார்கள்.” இந்த வசனத்தில் மேல் குறிப்பிட்ட அதே கிரேக்க வார்த்தை துன்மார்கர் மற்றும் நீதிமான்களின் முடிவை குறிக்க பயன்படுத்தப்பட்டுள்ளது. துன்மார்கர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே தண்டிக்கப்பட்டால், நீதிமான்களும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே அவர்கள் வாழ்க்கையை பரலோகத்தில் அனுபவிப்பார்கள். விசுவாசிகள் பரலோகத்தில் நித்தியமாய் இருப்பார்களேயானால், அவிசுவாசிகளும் நரகத்திலே நித்தியமாய் இருப்பார்கள்.

நித்திய நரகத்திற்கு அவிசுவாசிகளின்; ஆத்துமா உடலோடு அழிவுறும் என்னும் கொள்கையினரால் வரக்கூடிய மற்றோரு எதிர்ப்பு வரைமுறைக்குட்பட்ட பாவத்திற்காக அவிசுவாசிகள் நித்திய நரகத்தில் தண்டிக்கப்படுவது தேவனுக்கு அநீதி ஆகும் என்பதே. 70 ஆண்டுகள் பாவத்தில் ஜீவித்த மனிதனை நித்தியமாக தண்டிப்பது என்பது தேவனுக்கு எப்படி நியாயமாகும்;? இதற்கு பதில் பாவங்கள் நித்திய தேவனுக்கு விரோதமாக செய்யப்படுவதால் நம்முடைய பாவம் நித்திய விளைவை உண்டுபண்ணுகிறது. தாவீது ராஜா விபச்சாரம் மற்றும் கொலை பாவத்தை செய்த போது “தேவரீர் ஒருவருக்கே விரோதமாக நான் பாவஞ்செய்து, உமது கண்களுக்கு முன்பாகப் பொல்லாங்கானதை நடப்பித்தேன்…” என்று அவன் சொன்னான் (சங்கீதம் 51:4). தாவீது பத்சேபாளிடத்தில் மற்றும் உரியாவினிடத்தில் பாவம் செய்தான், ஆனால் அவன் தேவனுக்கு எதிராக மட்டுமே பாவம் செய்தான் என்று எப்படி சொல்ல முடியும்? எல்லா பாவங்களும் இறுதியாக தேவனுக்கு விரோதமானது என்று தாவீது புரிந்துகொண்டான். தேவன் நித்தியமானவர் மற்றும் முடிவில்லாதவர். இதன் விளைவாக அவருக்கு எதிரான எல்லா பாவங்களும் நித்திய ஆக்கினைக்கு தகுதியானது. இது நாம் எவ்வளவு காலம் பாவம் செய்கிறோம் என்பது அல்ல ஆனால் நாம் யாருக்கு எதிராக பாவம் செய்கிறோமோ அந்த தேவனின் குணாதியசத்தை சார்ந்தது.

மேலும் இக் கொள்கையினரின் தனிப்பட்ட அம்சமானது நமக்கு பிரியமானவர்கள் நரகத்திலே நித்திய ஆக்கினையடைகிறார்கள் என்பதை நாம் அறிந்திருந்தால் பரலோகத்திலே சந்தோஷமாக இருப்பது சாத்தியமில்லாத காரியம் என்பதே. மேலும் நாம் எப்பொழுது பரலோகத்தில் போகிறோமோ அப்பொழுது நமக்கு கவலைப்படுவதற்கும் புகார் சொல்லுவதற்கும் எதுவும் இருக்காது. வெளிப்படுத்தின விசேஷம் 21:4 வாசிக்கிறோம் “அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார். இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின.” நமக்கு பிரியமானவர்களுள் யாரேனும் ஒருவர் பரலோகத்திலில்லை என்றால், அவர்கள் பரலோகத்திற்குரியவர்கள் அல்ல மற்றும் அவர்கள் தங்களின் சொந்த நிராகரிப்பினால் இயேசு கிறிஸ்துவை அவர்களுடைய இரட்சகராக ஏற்றுக்கொள்ளாததினால் (யோவான் 3:16; 14:6) ஆக்கினைக்குள்ளாக்கப்பட்டு இருக்கிறார்கள் என்ற 100 சதவீதம் முழுமையான உடன்பாடு நமக்கு இருக்கும். இதை புரிந்துகொள்வது கடினமானது ஆனால் அவர்கள் இல்லை என்றால் நாம் வருத்தப்பட மாட்டோம். நமக்கு பிரியமானவர்கள் அனைவரும் பரலோகத்தில் இல்லாத போது நாம் எப்படி சந்தோசமாக இருக்க முடியும் என்றல்ல அவர்களை எப்படி கிறிஸ்துவின் விசுவாசத்தில் நடத்துவது என்பதில் நம்முடைய கவனம் இருக்க வேண்டும் அப்பொழுது அவர்களும் நம்மோடு பரலோகத்தில் இருப்பார்கள்.

தேவன் ஏன் இயேசு கிறிஸ்துவை நம்முடைய தண்டனையை ஏற்றுக்கொள்ளும் படி அனுப்பினார் என்பதே நரகத்திற்கான காரணமாகும். மரணத்திற்கு பின் சரீரம் அழிந்து போதல் என்பது அழிவை குறித்து பயமே அல்ல ஆனால் நித்திய நரகம் மிகுந்த பயத்தை தரக்கூடியது. நாம் நித்தியத்தை நரகத்தில் செலவிடாத படிக்கு நம்முடைய முடிவுறாத பாவக் கடனை செலுத்த கிறிஸ்துவின் மரணம் நமக்கு பதிலாக முடிவுறாத மரணமாக இருக்கிறது (2 கொரிந்தியன் 5:21). நாம் அவரை விசுவாசிக்கும் போது இரட்ச்சிக்கப்படுகிறோம், பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன, சுத்திகரிக்கப்படுகிறோம், மற்றும் நமக்கு நித்திய வாழ்வு பரலோகத்தில் நிச்சயிக்கப்படுகிறது. ஆனால் தேவனுடைய ஈவாகிய நித்திய வாழ்வை நாம் தள்ளினால், அதன் விளைவாக நாம் நித்திய விளைவை அடையவேண்டும்.

English
தமிழ் முதற் பக்கத்திற்குச் செல்க
அவிசுவாசிகளின் ஆத்துமா உடலோடு அழிவுறும் என்னும் கொள்கை வேதாகமத்தின் அடிப்படையிலானதா?