தேவன் ஏன் சாத்தானையும் பிசாசுகளையும் பாவம் செய்ய அனுமதித்தார்?


கேள்வி: தேவன் ஏன் சாத்தானையும் பிசாசுகளையும் பாவம் செய்ய அனுமதித்தார்?

பதில்:
தேவதூதர்களோடும் மனிதகுலத்தோடும் தேவன் ஒரு தீர்மானத்தை எடுப்பதற்கான தேர்ந்தெடுத்தலை கொடுத்தார். கலகம் சாத்தானையும் விழுந்துபோன தேவதூதர்களையும் பற்றிய பல விவரங்களை வேதாகமம் அளிக்கவில்லை என்றாலும், சாத்தானே - எல்லா தேவதூதர்களுக்கும் மிக பிரதானமானவன் (எசேக்கியேல் 28:12-18) – பெருமையினால் தேவனை எதிர்த்துப் போராடுவதற்கு அவனுக்கு அவனே சொந்த தேவனாக இருக்க முடிவு செய்தான். சாத்தான் (லூசிபர்) தேவனை நமஸ்கரித்து வழிபடவோ அல்லது அவருக்கு கீழ்ப்படியவோ விரும்பவில்லை; அவன் கடவுளாக இருக்க விரும்பினான் (ஏசாயா 14:12-14). தேவதூதர்களில் மூன்றில் ஒரு பகுதியினரின் அடையாளப்பூர்வ சாத்தானைப் பின்பற்றுவதைத் தேர்ந்தெடுப்பதை வெளி. 12:4 விளங்குகிறது, விழுந்த தேவதூதர்களானவர்கள் பிசாசுகளாக ஆனார்கள்.

என்றாலும், மனிதகுலத்தைப் போலன்றி தேவதூதர்கள் சாத்தானைப் பின்பற்ற வேண்டும் அல்லது தேவனுக்கு உண்மையுள்ளவர்களாய் இருக்க வேண்டும் என்பதே ஒரு நித்திய தெரிந்து கொள்ளுதலாக இருந்தது. விழுந்துபோன தேவதூதர்கள் மனந்திரும்பி மன்னிக்கப்படுவதற்கு வேதாகமம் எந்த வாய்ப்பையும் அளிக்கவில்லை. மேலும் தேவதூதர்கள் பாவம் செய்வதற்கு சாத்தியம் என்று வேதாகமம் குறிப்பிடுகிறது. தேவனுக்கு உண்மையுள்ளவர்களாய் இருக்கும் தேவதூதர்கள் "தெரிந்துகொள்ளப்பட்ட தேவதூதர்கள்" என விவரிக்கப்படுகிறார்கள் (1 தீமோத்தேயு 5:21). சாத்தான் மற்றும் விழுந்துபோன தேவதூதர்களுக்கு தேவனின் மகிமை அனைத்தையும் அறிந்திருந்தனர். தேவனைப் பற்றி அவர்கள் அறிந்திருந்த போதிலும், அவர்கள் கலகம் செய்ய ஆரம்பித்தார்கள். இதன் விளைவாக, தேவன் சாத்தானுக்கும் அவனோடு கூட்டாக நின்று கலகம் செய்த மற்ற விழுந்துபோன தூதர்களையும் மனந்திரும்புவதற்கான வாய்ப்பைக் கொடுக்கவில்லை. மேலும், தேவன் அவர்களுக்கு வாய்ப்பளித்தாலும் கூட மனந்திரும்புவதாக பைபிள் நம்புவதற்கு எந்த காரணமும் இல்லை (1 பேதுரு 5:8). தேவன் ஆதாமுக்கும் ஏவாளுக்கும் கொடுத்த அதே தெரிந்துகொள்ளுதலை அதாவது தேவனுக்கு கீழ்படிவதா வேண்டாமா என்கிற தேர்ந்தெடுத்தலை சாத்தானுக்கும் தேவதூதர்களுக்கும் கொடுத்தார். தேவதூதர்கள் சுதந்திரமாகத் தெரிவு செய்ய விரும்பினர்; தேவன் தேவதூதர்கள் எந்தஒரு பாவத்தையும் செய்யவோ ஊக்குவிக்கவோ செய்யவில்லை. சாத்தான் மற்றும் விழுந்துபோன தேவதூதர்கள் தங்கள் சுயாதீன சித்தத்தினால் பாவம் செய்தனர், எனவே அக்கினி கடலில் சென்றடையும்படிக்கு தேவனின் நித்திய கோபத்திற்கு பாத்திரரானார்கள்.

தேவதூதர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் தேவனுக்கு எதிராக கலகம் செய்வார்கள் என்றும், அதினிமித்தம் நித்திய அக்கினிக்குள் செல்லும்படியாக சபிக்கப்படுவார்கள் என்றும் தேவன் அறிந்திருந்தார் என்கிறபோது, எதற்காக தேவன் தேவதூதர்களுக்கு தெரிந்தெடுத்தலை வழங்கினார்? இந்தக் கேள்விக்கு வேதாகமம் வெளிப்படையாக பதில் கொடுக்கவில்லை. இதே கேள்வியை ஏதேனும் ஒரு தீய செயலுக்கும் கேட்கலாம். தேவன் ஏன் அதை அனுமதிக்கிறார்? இறுதியில், அது அவரது படைப்பு மீதுள்ள தேவனின் இறையாண்மையை கொண்டு வருகிறது. சங்கீதக்காரன் நமக்கு இப்படியாக சொல்லுகிறார், "தேவனுடைய வழி உத்தமமானது" (சங்கீதம் 18:30). தேவனுடைய வழி உத்தமமானது என்றால், அவர் என்ன செய்தாலும், அவர் என்ன அனுமதித்தாலும் அதுவும் உத்தமமானது என்பதை நாம் நம்பலாம். எனவே நமது உத்தமமான தேவனிடமிருந்த உத்தமமான திட்டம் பாவத்தை அனுமதிக்க வேண்டும் என்பதாகும். ஏசாயா 55:8-9 நமக்கு நினைப்பூட்டுகிறபடி, என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல; உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று கர்த்தர் சொல்லுகிறார்.

English


முகப்பு பக்கம்
தேவன் ஏன் சாத்தானையும் பிசாசுகளையும் பாவம் செய்ய அனுமதித்தார்?