settings icon
share icon
கேள்வி

தேவதூதர்கள் ஆண்களா அல்லது பெண்களா?

பதில்


வேதாகமத்தில் தேவதூதர்கள் குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு குறிப்பும் எவ்விதமான சந்தேகத்திற்கும் இடமின்றி ஆண்பாலினத்தில் தான் உள்ளது. புதிய ஏற்பாட்டில் "தேவதூதன்" என்ற சொல் ஆங்கலோஸ் என்னும் கிரேக்க வார்த்தைஇலிருந்து வருகிறது, அதாவது ஆண்பால் வடிவத்தில் உள்ளது. உண்மையில், தேவதூதனுக்கு பெண்பாலில் சொல் இல்லை. இலக்கணத்தில் மூன்று பாலினம் இருக்கிறது - ஆண்பால் (அவர், அவரை, அவரது), பெண்பால் (அவள், அவளை, அவளது), மற்றும் பலவின்பால் (அது, அதன்) ஆகியவற்றில் மூன்று பாலினங்கள் உள்ளன. வேதாகமத்தில் தூதர்களை ஆண்பாலில் அல்லாமல் வேறு எந்தப் பாலினத்திலும் குறிப்பிடப்படவில்லை. மேலும் வேதாகமத்தில் தேவதூதர்கள் பல தோற்றங்களில், "அவள்" அல்லது "அது" என்று எந்தஒரு தேவதூதனும் குறிப்பிடப்படவில்லை. மேலும், தேவதூதர்கள் தோன்றியபோது எப்போதும் மனித ஆண்களாக இருந்தார்கள் (ஆதியாகமம் 18:2, 16; எசேக்கியேல் 9:2). எந்தப் பெண்மணி வேடமிட்டும் ஒரு பெண்மணியாக வரவும் இல்லை.

வேதாகமத்தில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள தூதர்கள் – மிகாவேல், காபிரியேல், லூசிபர் – இவர்கள் யாவரும் ஆண்பாலில் குறிப்பிடப்பட்டுள்ளார்கள். “மிகாவேலும் அவனைச் சேர்ந்த தூதர்களும்” (வெளி. 12:7); "அவளோ அவனைக்கண்டு அவன் வார்த்தையினால் கலங்கி" (லூக்கா 1:29); "அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளியே" (ஏசாயா 14:12). தேவதூதர்களைக் குறித்த பிற குறிப்புகளும் ஆண்பாலில் உள்ளன. நியாயாதிபதிகள் 6:21 ல், "தேவதூதன்" அவன் கையில் ஒரு கோலினை வைத்திருக்கிறார். சகரியா ஒரு தேவதூதனிடம் ஒரு கேள்வி கேட்டு, அதற்கு "அவர்" பதிலளித்தார் என்று குறிப்பிடுகிறார் (சகரியா 1:19). வெளிப்படுத்துதலிலுள்ள தேவதூதர்கள் அனைவரும் "அவர்" என்றும் "அவரே" என தங்கள் சொந்த பெயர்ச்சொல்லில் பேசப்படுகிறார்கள் (வெளி. 10:1, 5; 14:19; 16:2, 4, 17; 19:17; 20:1).

சிலர் பெண் தேவதூதர்களுக்கு சகரியா 5:9 ஐக் குறிப்பிடுகிறார்கள்; அந்த வசனம் பின்வருமாறு கூறுகிறது: “அப்பொழுது நான் என் கண்களை ஏறெடுத்து, இதோ, புறப்பட்டுவருகிற இரண்டு ஸ்திரீகளைக் கண்டேன்; அவர்களுக்கு நாரையின் செட்டைகளுக்கொத்த செட்டைகள் இருந்தது; அவர்கள் செட்டைகளில் காற்றிருந்தது; இவர்கள் மரக்காலை பூமிக்கும் வானத்துக்கும் நடுவாய்த் தூக்கிக்கொண்டு போனார்கள்.” இந்த தீர்க்கதரிசன தரிசனத்தில் "பெண்கள்" தேவதூதர்கள் என்று அழைக்கப்படுவதில்லை. 7 மற்றும் 8 ம் வசனங்களில் பொய்யைக் குறிக்கும் கூடையிலுள்ள பெண்மணி போலவே அவர்கள் நாஷிம் ("பெண்கள்") என அழைக்கப்படுகிறார்கள். இதற்கு மாறாக, சகரியா பேசுகிற தேவதூதன் மலாக் என்று அழைக்கப்படுகிறார், அதாவது "தேவதூதன்" அல்லது "தூதவர்" என்று பொருள். சகரியாவின் தரிசனத்தில் கண்ட பெண்களுக்கு சிறகுகள் உண்டு என்கிற உண்மை தேவதூதர்களை நம் மனதில் பற்றிக் கூறலாம், ஆனால் வேதப்பகுதியில் கூறப்பட்டதற்கும் அதிகமாக நாம் எடுத்துக்கொள்ளாமல் கவனமாக இருக்க வேண்டும். ஒரு தரிசனம் பார்வை உண்மையான பொருள்களை அல்லது பொருள்களை சித்தரிக்கவில்லை - பெரிய பறக்கும் சுருள் சகரியாவின் முந்தைய அதிகாரத்தில் காண்பது ஒரு நல்ல உதாரணம் (சகரியா 5:1-2).

பாலினத் தேவதூதர்களைப் பற்றிய குழப்பம் மத்தேயு 22:30-ல் தவறாகப் புரிந்துகொள்வதால் வருகிறது, உயிர்த்தெழுதலில், கொள்வனையும் கொடுப்பனையும் இல்லை; அவர்கள் பரலோகத்திலே தேவதூதரைப்போல் இருப்பார்கள் என்று சொல்கிறது. ஆண்கள் என தேவதூதர்களைப் பற்றிய பல குறிப்புகள் பாலினத் தேவதூதர்களின் கருத்துக்கு முரணாக உள்ளன. தேவதூதர்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை, ஆனால் "திருமணம் இல்லை" மற்றும் "பாலினம் இல்லை" என்று நாமாக முடிவுக்கு வந்துவிடக்கூடாது.

பாலினம் மொழியில் பாலியலை கண்டிப்பாக புரிந்துகொள்ளப்பட வேண்டியதில்லை. மாறாக, ஆண்பால் பெயர்ச்சொல் பாலின பிரதிபலிப்புகள் வேதவாக்கியங்களில் ஆவிக்குரிய பொருள்களைப் பயன்படுத்துகின்றன. தேவன் எப்போதுமே ஆண்பாலில்தான் குறிப்பிடப்படுகிறார். பரிசுத்த ஆவியானவர் ஒருபோதும் "இது" என்று விவரிக்கப்படுவதில்லை. தேவன் தனிப்பட்ட ஆள்தன்மையுள்ளவரும் மற்றும் அதிகாரபூர்வமானவருமாக இருக்கிறார், ஆகையால், ஆண்பாலில் தனிப்பட்ட பிரதிபலிப்புகளுடன் குறிப்பிடப்படுகிறார். பரலோகத்திலுள்ளவைகளை ஆண்பாலில் அல்லாமல் வேறே பாலினத்தில் எடுத்துக்கொள்வது பொருத்தமற்றதாக இருக்கும், ஏனென்றால் தேவன் தம்முடைய வல்லமையை (2 இராஜாக்கள் 19:35), அவருடைய செய்திகளை (லூக்கா 2:10) செயல்படுத்தவும், அவரைப் பூமியில் அவரை பிரதிநிதித்துவம் செய்யவும், அதிகாரம் செலுத்துவதற்கும் அதிகாரம் அளித்திருக்கிறார்.

English



முகப்பு பக்கம்

தேவதூதர்கள் ஆண்களா அல்லது பெண்களா?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries