தூதர்களைக் குறித்து வேதாகமம் என்ன கூறுகிறது?


கேள்வி: தூதர்களைக் குறித்து வேதாகமம் என்ன கூறுகிறது?

பதில்:
தூதர்கள் என்பவர்கள் அறிவுத்திறன், உணர்ச்சி மற்றும் சித்தம் கொண்ட தனிப்பட்ட ஆவிக்குரிய ஜீவன்கள் ஆகும். இது நல்ல தூதர்களுக்கும் மற்றும் தீய தூதர்களுக்கும் (பிசாசுகள்) பொருந்தும். தூதர்கள் அறிவுத்திறன் வாய்ந்தவர்கள் (மத்தேயு 8:29; 2 கொரிந்தியர் 1:13; 1 பேதுரு 1:12), உணர்ச்சியைக் காட்டக்கூடியவர்கள் (லூக்கா 2:13; யாக்கோபு 2:19; வெளிப்படுத்தின விசேஷம் 12:17), மற்றும் சித்தத்தை பயன்படுத்தக்கூடியவர்கள் (லூக்கா 8:28-31; 2 தீமோத்தேயு 2:26; யூதா 6). தூதர்கள் மெய்யான சரீரமற்ற ஆவிக்குரிய ஜீவன்கள் ஆகும் (எபிரேயர் 1:14). அவர்களுக்கு சரீரம் இல்லாவிட்டாலும் அவர்கள் ஆள்தத்ததுவம் உடையவைகளாயிருக்கின்றன.

அவர்கள் சிருஷ்டிக்கப்பட்ட ஜீவன்களாயிருக்கிறபடியினால், அவர்களுக்குரிய அறிவுத்திறன் குறைவானதாகவே இருக்கிறது. அதாவது அவர்களுக்கு தேவனைப்போல அனைத்தும் அறிந்தவர்கள் அல்ல (மத்தேயு 24:36). அவர்களுக்கு மனிதர்களைவிட அதிகமான அறிவுத்திறன் இருப்பது போல காணப்படுவதற்கு மூன்று காரணங்கள் உள்ளன.

முதலாவதாக, தூதர்கள் சிருஷ்டிப்பின் வரிசையில் மனுஷரிலும் சற்று மேலான நிலையில் சிருஷ்டிக்கப்பட்டார்கள். ஆகவே உள்ளியல்பாகவே அதிக அறிவுடனிருக்கின்றனர். இரண்டாவதாக, தூதர்கள் மனிதர்களைக் காட்டிலும் அதிகளவு வேதாகமத்தையும் உலகத்தையும் படித்து அவைகளிலிருந்து அறிவைப் பெற்றுக்கொள்கின்றன (யாக்கோபு 2:19; வெளிப்படுத்தின விசேஷம் 12:12). மூன்றாவதாக, மனிதர்களின் செயல்பாடுகளை வெகுவாக கூர்ந்து கவனிப்பதினால் அறிவைப் பெற்றுக் கொள்கின்றனர். மனிதர்களைப்போல தூதர்கள் நடந்தேறிய பழைய காரியங்களைப் படிக்கவேண்டிய அவசியமில்லை, ஏனென்றால் அவர்களுக்கு அது பழக்கமானது தான். ஆகையால் மற்றவர்கள் தங்கள் சூழ்நிலைகளில் எப்படி நடந்துக்கொண்டார்கள் என்றும், நாம் எப்படி அதேபோன்ற சூழ்நிலையில் நடந்துக்கொள்வோம் என்றும் துல்லியமாகக் கனிக்கத்தக்க நிலையில் தூதர்கள் இருக்கிறார்கள்.

மற்ற ஜீவராசிகளைப்போல சுயசித்தம் தூதர்களுக்கு இருந்தாலும் கூட, அவர்கள் தேவனுடைய சித்தத்திற்கு கீழ்பட்டே இருக்கின்றார்கள். நல்ல தூதர்கள் விசுவாசிகளுக்கு உதவிச் செய்யும்படிக்கு தேவனால் அனுப்பப்பட்டவர்கள் ஆகும் (எபிரெயர் 1:14). வேதாகமத்தில் கொடுக்கப்பட்டுள்ள தூதர்களின் சில நடபடிகளைப் பற்றிய குறிப்புகள் இதோ:

அவர்கள் தேவனை துதிக்கின்றார்கள் (சங்கீதம் 148:1-2; ஏசாயா 6:3). அவர்கள் தேவனை ஆராதிக்கின்றார்கள் (எபிரேயர் 1:6; வெளிப்படுத்தின விசேஷம் 5:8-13). அவர்கள் தேவனுடைய கிரியைகளைக் கண்டு மகிழ்ச்சி யடைகின்றார்கள் (யோபு 38:6-7). அவர்கள் தேவனுக்கு பணிவிடை செய்கின்றார்கள் (சங்கீதம் 103:20; வெளி. 22:9). அவர்கள் தேவனுக்கு முன்பாக தோன்றுகின்றார்கள் (யோபு 1:6; 2:1). அவர்கள் தேவனுடைய நியாயத்தீர்ப்பில் கருவியாகப் பயன்படுகின்றனர் (வெளிப்படுத்தின விசேஷம் 7:1; 8:2). அவர்கள் ஜெபத்திற்கு பதில்களைக் கொண்டு வருகின்றனர் (அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:5-10). அவர்கள் ஜனங்களை கிறிஸ்துவுக்குள் நடத்த உதவுகின்றனர் (அப்போஸ்தலருடைய நடபடிகள் 8:26; 10:3). அவர்கள் கிறிஸ்தவர்களுடைய நெறிமுறைகள், வேலை மற்றும் பாடுகளைக் கவனிக்கின்றார்கள் (1 கொரிந்தியர் 4:9; 11:10; எபேசியர் 3:10; 1 பேதுரு 1:12). அவர்கள் ஆபத்து வேளைகளில் உற்சாகப்படுத்துகின்றனர் (அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:23-24). அவர்கள் நீதிமான்களுடைய மரணத்தருவாயில் அவர்களைக் கவனித்துக் கொள்கின்றனர் (லூக்கா 16:22).

தூதர்கள் மனிதர்களைக்காட்டிலும் முற்றிலும் வித்தியாசமான ஒழுக்கம் மற்றும் கிரமமுள்ள ஜீவன்களாக இருக்கின்றார்கள். மனிதர்கள் மரித்தப்பிறகு தேவதூதர்களாக மாறுவதில்லை. தூதர்கள் மனிதர்களாக இருந்ததுமில்லை மனிதர்களாக மாறுவதுமில்லை. தேவன் மனிதர்களை சிருஷ்டித்தது போலவே தேவதூதர்களையும் சிருஷ்டித்தார். வேதாகமத்தில் எந்த இடத்திலும் தூதர்கள் மனிதர்களைப் போல தேவச்சாயலாகவோ, தேவனைப்போலவோ சிருஷ்டிக்கப்பட்டார்கள் என்று குறிப்பிடவில்லை (ஆதியாகமம் 1:26). தூதர்கள் ஆவிக்குரிய ஜீவன்களாக ஒரு குறிப்பிட்ட அளவிற்குட்பட்ட நிலையில் சரீரப்பிரகாரமான ரூபம் எடுக்க முடியும். மனிதர்கள் ஆவிக்குரிய அம்சத்தையும் கொண்ட சரீரத்தையுடைய ஜீவன்கள் ஆகும். பரிசுத்த தூதர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய மிகப்பெரிய காரியம் என்னவென்றால், எந்தஒரு கேள்வியுமில்லாமல் தேவனுடைய கட்டளைகளைக்கு கீழ்படியும் பரிபூரணமான கீழ்படிதல் தான்.

English
முகப்பு பக்கம்
தூதர்களைக் குறித்து வேதாகமம் என்ன கூறுகிறது?