settings icon
share icon
கேள்வி

மரணத்தின் தேவதூதன் இருக்கிறாரா?

பதில்


"மரணத்தின் தேவதூதன்" என்ற கருத்து பல மதங்களில் உள்ளது. "மரணத்தின் தேவதூதன்" யூத மதத்தில் சாமேல், சாரீல் அல்லது அஸ்ரேல் என்று அழைக்கப்படுகிறது; இஸ்லாமில் மலாக் அல்மாவ்ட்; இந்து மதத்தில் எமன் அல்லது எமதர்மராஜா; மற்றும் பிரபலமான புனைக்கதைகளில் கிரிம் ரீப்பராக. பல்வேறு புராணங்களில், மரண தேவதூதன் ஒரு அரிவாள் கொண்ட ஒரு ஆடை எலும்பு உருவம், ஒரு அழகான பெண், ஒரு சிறு குழந்தை என கற்பனை செய்யப்படுகிறது. விவரங்கள் மாறுபடும் அதே வேளையில், ஒரு நபர் மரணத்தின் போது ஒரு நபரிடத்தில் வருவார், உண்மையில் மரணத்தை ஏற்படுத்துகிறார் அல்லது வெறுமனே அவதானிக்கிறார்—அந்த நபரின் ஆத்துமாவை இறந்தவர்களின் உறைவிடம் கொண்டு செல்லும் நோக்கத்துடன் இது சம்பவிக்கிறது.

இந்த "மரண தேவதூதன்" குறித்த கருத்து வேதாகமத்தில் போதிக்கப்படவில்லை. மரணத்திற்குப் பொறுப்பான ஒரு குறிப்பிட்ட தேவதூதன் அல்லது ஒருவர் மரிக்கும் போதெல்லாம் உடனிருப்பதாக வேதாகமம் எங்கும் போதிக்கவில்லை. 2 ராஜாக்கள் 19:35 இஸ்ரேல் மீது படையெடுத்த 185,000 அசிரியர்களை ஒரு தேவதூதன் கொன்றதை விவரிக்கிறது. சிலர் யாத்திராகமம் 12 ஆம் அதிகாரம், எகிப்தின் தலைச்சன் பிள்ளைகளின் மரணம், ஒரு தேவதூதனின் வேலையாகவும் பார்க்கிறார்கள். இது சாத்தியம் என்றாலும், வேதாகமம் எங்கும் ஒரு தேவதூதனுக்கு முதலில பிறந்த தலைச்சன் குழந்தை இறந்ததாகக் கூறவில்லை. எது எப்படி இருந்தாலும், தேவனுடைய கட்டளையின் பேரில் தேவதூதர்கள் மரணத்தை ஏற்படுத்துவதை வேதாகமம் விவரிக்கிறது, வேதம் எங்கும் மரணத்தின் ஒரு குறிப்பிட்ட தேவதூதன் இருப்பதாக போதிக்கவில்லை.

தேவன், தேவன் மட்டுமே, நம்முடைய மரிக்கும் நேரத்தின் மீது இறையாண்மை கொண்டவர். தேவன் விரும்பிய காலத்திற்கு முன்பே எந்த ஒரு தேவதூதனோ அல்லது பிசாசோ நம் மரணத்தை ஏற்படுத்த முடியாது. ரோமர் 6:23 மற்றும் வெளிப்படுத்துதல் 20:11-15 படி, மரணம் என்பது நமது உடலிலிருந்து நம் ஆத்துமா-ஆவியைப் பிரித்தல் (சரீர மரணம்) மற்றும் அவிசுவாசிகளின் விஷயத்தில், தேவனிடமிருந்து நித்தியமாக பிரிந்துபோகுதல் (நித்திய மரணம்) ஆகும். மரணம் என்பது நிகழும் ஒன்று. மரணம் ஒரு தேவதூதன் அல்ல, பிசாசு, ஒரு நபர் அல்லது வேறு எந்த உயிரினமும் அல்ல. தேவதூதர்கள் மரணத்தை ஏற்படுத்தலாம், மேலும் மரணத்திற்குப் பிறகு நமக்கு என்ன நடக்கிறது என்பதிலும் ஈடுபடலாம்—ஆனால் "மரணத்தின் தேவதூதன்" என்று எதுவும் இல்லை.

English



முகப்பு பக்கம்

மரணத்தின் தேவதூதன் இருக்கிறாரா?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries