settings icon
share icon
கேள்வி

அம்மில்லினியனிசம் (amillennialism) என்றால் என்ன?

பதில்


எழுத்தியல் பிரகாரமான நிலையில் இப்பூமியில் கிறிஸ்து ஆளுகை செய்கிற ஆயிரமாண்டு அரசாட்சி இல்லை என்கிற நம்பிக்கையைக் கொண்ட கோட்பாட்டிற்கு அம்மில்லினியனிசம் (amillennialism) என்று பெயர். இந்த நம்பிக்கையை கொண்டிருக்கும் ஜனங்கள் அம்மில்லினியலிஸ்ட்ஸ் (amillennialists) என்று அழைக்கப்படுகிறார்கள். அம்மிலினியலிசத்தில் “a-” என்ற முன்னொட்டு “இல்லை” என்று பொருள்படும். ஆகவே, “அம்மிலினியலிசம்” என்றால் “மில்லினியம் இல்லை” என்று பொருள். இது மிகவும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரிமில்லினியலிசம் என்னும் பார்வையில் இருந்து வேறுபடுகிறது (அதாவது கிறிஸ்துவின் இரண்டாவது வருகை அவருடைய ஆயிர வருட ராஜ்யத்திற்கு முன்பே நிகழும் என்பதாகும், அதாவது ஆயிரமாண்டு அரசாட்சி என்பது எழுத்தியல் பூர்வமான 1000-ஆண்டு ஆட்சி என்பதாகும்) மற்றும் மிகவும் குறைவானோர் நம்புகிற போஸ்ட் மில்லினியலிசம் (அதாவது கிறிஸ்து தானே ராஜ்யத்தை ஸ்தாபிக்காமல் கிறிஸ்தவர்கள் இந்த பூமியில் ராஜ்யத்தை ஸ்தாபித்தபின் கிறிஸ்து இந்த பூமிக்கு திரும்புவார் என்பதாகும்) என்னும் கோட்பாட்டிலிருந்தும் வேறுபடுகிறது.

இருப்பினும், அம்மில்லினியலிஸ்டுகளுக்கு நியாயமாக, மில்லினியமே இல்லை என்று அவர்கள் நம்பவில்லை. மாறாக அவர்கள் ஒரு எழுத்தியல் பிரகாரமான மில்லினியத்தை நம்பவில்லை - அதாவது பூமியில் கிறிஸ்துவின் 1000 ஆண்டு ஆட்சி இருக்கும் என்பதை அவர்கள் நம்பவில்லை. அதற்கு பதிலாக, கிறிஸ்து இப்போது தாவீதின் சிங்காசனத்தில் அமர்ந்திருப்பதாகவும், இந்த தற்போதைய சபையின் யுகம் கிறிஸ்து ஆட்சி செய்யும் ராஜ்யம் என்றும் அவர்கள் நம்புகிறார்கள். கிறிஸ்து இப்போது ஒரு சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிறார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, ஆனால் அது தாவீதின் சிங்காசனம் என்று வேதாகமம் குறிப்பிடுகிறது என்று எடுத்துகொள்வது சரியல்ல. கிறிஸ்து இப்போது ஆட்சி செய்கிறார் என்பதில் சந்தேகமில்லை, ஏனென்றால் அவர் தேவனாக இருக்கிறார். அதற்காக அவர் ஆயிரம் ஆண்டு அரசாட்சி புரிகிறார் என்று எடுத்துக்கொள்வது சரியான அர்த்தமல்ல.

தேவன் இஸ்ரவேலர்களுடன் பண்ணின வாக்குறுதிகளை நிறைவேற்றவும், தாவீதுடன் பண்ணின அவருடைய உடன்படிக்கையை நிறைவேற்றவும் (2 சாமுவேல் 7:8-16, 23:5; சங்கீதம் 89:3-4), இந்த பூமியில் ஒரு எழுத்தியல் பிரகாரமான, சரீர ராஜ்யம் இருக்க வேண்டும். இதில் சந்தேகம் கொள்வது என்பது தேவனுடைய விருப்பம் மற்றும் / அல்லது அவரது வாக்குறுதிகளை நிறைவேற்றும் திறனைக் கேள்விக்குள்ளாக்குவதாகும், இது மற்ற இறையியல் சிக்கல்களின் புரவலன்களை திறக்கிறது. உதாரணமாக, அந்த வாக்குறுதிகளை “நித்தியம்” என்று அறிவித்தபின், தேவன் இஸ்ரவேலுக்கு அளித்த வாக்குறுதிகளை மறுத்துவிட்டால், கர்த்தராகிய இயேசுவில் விசுவாசிகளுக்கு இரட்சிப்பின் வாக்குறுதிகள் உட்பட அவர் வாக்குறுதியளித்த எதையும் நாம் எவ்வாறு உறுதியாக நம்ப முடியும்? ஒரே தீர்வு, அவருடைய வார்த்தையை ஏற்றுக்கொண்டு, அவருடைய வாக்குறுதிகள் உண்மையில் நிறைவேறும் என்பதை புரிந்துகொள்வதுதான்.

ராஜ்யம் ஒரு எழுத்தியல் பிரகாரமான பூமியில் ஸ்தாபிக்கப்போகிற ராஜ்யமாக இருக்கும் என்பதற்கான வேதாகம அறிகுறிகள் யாதென்றால்:

1) கிறிஸ்துவின் பாதங்கள் மெய்யாகவே அவருடைய ராஜ்யத்தை ஸ்தாபிப்பதற்கு முன்பு ஒலிவ மலையில் மேல்வந்து தொடும் (சகரியா 14:4, 9).

2) ராஜ்யத்தின் போது, மேசியா பூமியில் நீதியையும் நியாயத்தையும் வழங்குவார் (எரேமியா 23:5-8).

3) ராஜ்யமானது வானத்தின் கீழ் இருப்பதாக விவரிக்கப்படுகிறது (தானியேல் 7:13-14, 27).

4) ராஜ்யத்தின் போது சம்பவிக்கப்போகிற பூமிக்குரிய மாற்றங்கள் குறித்து தீர்க்கதரிசிகள் முன்னறிவித்தனர் (அப்போஸ்தலர் 3:21; ஏசாயா 35:1-2; 11:6-9; 29:18; 65:20-22; எசேக்கியேல் 47:1-12; ஆமோஸ் 9:11-15).

5) வெளிப்படுத்துதல் புத்தகத்தின் முறையான மற்றும் கிரமமான நிகழ்வுகளின் காலவரிசை ஒழுங்கு உலக வரலாற்றின் (வெளிப்படுத்துதல் 20) முடிவுக்கு முன்பாக பூமிக்குரிய ராஜ்யம் இருப்பதை சுட்டிக்காட்டுகிறது.

முரண்பாடான நிலையில் நிறைவேறாத தீர்க்கதரிசனத்திற்கு ஒரு வியாக்கியான முறையையும், தீர்க்கதரிசனமல்லாத வேதவாக்கியத்திற்கு மற்றொரு வியாக்கியான முறையையும் மற்றும் நிறைவேறின தீர்க்கதரிசனம் என ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு முறையைப் பயன்படுத்தி விளக்கம் கொடுப்பதில் இருந்து வருகிறது. தீர்க்கதரிசனமற்ற வேதவாக்கியமும் நிறைவேறிய தீர்க்கதரிசனமும் எழுத்தியல் பிரகாரம் அல்லது சாதாரணமான நிலையில் விளக்கப்படுகின்றன. ஆனால், அமில்லினியலிஸ்ட்டின் கூற்றுப்படி, நிறைவேறாத தீர்க்கதரிசனம் ஆவிக்குரிய ரீதியில் அல்லது எழுத்தியல் பிரகாரம் அல்லாததாக விளக்கப்பட வேண்டும் என்று கூறுகிறார்கள். இந்த கொள்கையை நம்புகிறவர்கள் நிறைவேறாத தீர்க்கதரிசனத்தை ஆவிக்குரிய நிலையில் எடுத்துக்கொண்டு வாசிப்பதுதான் சாதாரண அல்லது இயல்பான வாசிப்பு என்று நம்புகிறார்கள். இது இரட்டை வியாக்கியான முறை என்னும் வியாக்கியான முறையைப் பின்பற்றுகிறது. ஆகையால், அம்மில்லினியலிஸ்ட்கள் பொருத்தமட்டில், நிறைவேறாத தீர்க்கதரிசனம் அடையாளமாக, உருவகமாக, ஆவிக்குரிய மொழியில் எழுதப்பட்டுள்ளது என்பதாகும். ஆகையால், அந்த வேதவாக்கியங்களுக்கு சாதாரண, சூழ்நிலை அர்த்தங்களுக்குப் பதிலாக அந்த வேதாகமத்தின் பகுதிகளுக்கு வெவ்வேறு அர்த்தங்களை ஒதுக்க வேண்டும் என்பதாகும்.

இந்த முறையில் நிறைவேறாத தீர்க்கதரிசனத்தை விளக்கும் செயல் அநேக சிக்கல்கள் இருக்கிறது, அதாவது இது ஒரு பரவலான அர்த்தங்களை அனுமதிக்கிறதாய் இருக்கிறது. நீங்கள் சாதாரணமான அர்த்தத்தில் வேதவாக்கியங்களை புரிந்துகொள்ளாவிட்டால், பிறகு அதில் ஒரு அர்த்தம் இருக்காது. வேதவாக்கியங்களின் முடிவான எழுத்தாளர் தேவனாக இருக்கிறபடியால், அவர் மனித எழுத்தாளர்களைக்கொண்டு எழுதும்போது ஒரு குறிப்பிட்ட அர்த்தத்தை மனதில் வைத்திருந்தார். வேதத்தின் ஒரு பத்தியில் பல வாழ்க்கை பயன்பாடுகள் இருக்கலாம் என்றாலும், ஒரே ஒரு அர்த்தம் மட்டுமே உள்ளது, அந்த அர்த்தத்தையே தேவன் அர்த்தப்படுத்த விரும்பினார். மேலும், நிறைவேறிய தீர்க்கதரிசனம் எழுத்தியல் பிரகாரம் நிறைவேறியது என்கிற உண்மை மற்ற நிறைவேறாத தீர்க்கதரிசனமும் எழுத்தியல் பிரகாரம் நிறைவேறும் என்பதற்கு சிறந்த காரணம் ஆகும். கிறிஸ்துவின் முதல் வருகையைப் பற்றிய தீர்க்கதரிசனங்கள் அனைத்தும் உண்மையில் நிறைவேறின. ஆகையால், கிறிஸ்துவின் இரண்டாவது வருகையைப் பற்றிய தீர்க்கதரிசனங்களும் உண்மையில் நிறைவேறும் என்று நாம் எதிர்பார்க்க வேண்டும். இந்த காரணங்களுக்காக, நிறைவேறாத தீர்க்கதரிசனத்தின் ஒரு உருவகமான விளக்கம் நிராகரிக்கப்பட வேண்டும் மற்றும் நிறைவேறாத தீர்க்கதரிசனத்தின் நேரடி அல்லது சாதாரண விளக்கம் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். அம்மில்லினியலிசம் தோல்வியுற்றது, அது சீரற்ற வியாக்கியான கோட்பாடுகளைப் பயன்படுத்துகிறது, அதாவது நிறைவேறாத தீர்க்கதரிசனத்தை நிறைவேறிய தீர்க்கதரிசனத்திலிருந்து வித்தியாசமாக அர்த்தம் கொடுத்து விளக்குகிறது.

English



முகப்பு பக்கம்

அம்மில்லினியனிசம் (amillennialism) என்றால் என்ன?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries