வேற்று கிரக வாசிகள் அல்லது யுஎஃப்ஓக்கள் என்பவர்கள் இருக்கிறார்களா?


கேள்வி: வேற்று கிரக வாசிகள் அல்லது யுஎஃப்ஓக்கள் என்பவர்கள் இருக்கிறார்களா?

பதில்:
முதலாவது வேற்று கிரக வாசிகள் ஒழுக்கநெறிகளை தேர்ந்தெடுக்கும் ஆற்றளுள்ளவர்கள், அறிவுத்திறன், உணர்வு மற்றும் விருப்பத்தை உடையவர்கள் என்று வரையறுக்கப்படுகின்றனர். அடுத்து சில அறிவியல் உண்மைகள்:

1. மனிதன் சூரிய மண்டலத்திலுள்ள கிட்டதட்ட அனைத்து கிரகத்திற்கும் விண்கலத்தை அனுப்ப உள்ளான். இந்த கிரகங்ளை கவனித்த பின்பு எல்லாவற்றையும் ஆளத்துவங்கினான் ஆனால் செவ்வாய் கிரகம் மற்றும் வியாழன் கிரகத்தின் நிலவு ஆகியவைகள் மட்டுமே வாழ்வதற்கு தகுந்த இடமாக உள்ளது.

2. 1976ம் ஆண்டு அமெரிக்க ஐக்கிய நாடுகள் செவ்வாய் கிரகத்திற்கு இரண்டு நபர்களை அனுப்பினார்கள். செவ்வாய் கிரகத்தின் மணலை தொட்டுப்பார்த்து அதில் உயிரினம் இருக்கிறதா என்பதை அறிந்து கொள்ள அவர்கள் ஒவ்வொருவரிடமும் கருவிகள் இருந்தது. அவர்கள் எதையும் கண்டுபிடிக்கவில்லை. இதற்கு முரணாக நீங்கள் பூமியின் மிகவும் தரிசான பாலைவனத்தின் மணலை அல்லது அண்டார்டிகாவின் மிக உறைந்த அழுக்கு மிகுந்த மணலை ஆய்வு செய்தால் அது நுண்ணிய உயிரினங்கள் பெருக்கம் உடையதாக இருக்கிறது என்று கண்டுபிடிக்கலாம். 1997ல் அமெரிக்கா பாதை கண்டுபிடிப்பவர்களை செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்புக்கு அனுப்பியது. இவர்கள் அழைந்து திரிந்து அநேக மாதிரிகளையும் இன்னும் பல சோதனைகளையும் மேற்கொண்டனர். அவர்களும் உயிர்களுக்கான எந்த அடையாளமும் கண்டுபிடிக்கவில்லை. அந்த நேரம் முதல் செவ்வாய் கிரகத்திற்கு இன்னும் பலர் பிரயாணப்பட ஆரம்பித்தனர். எப்பொழுதுமே முடிவு ஒரே மாதிரியாக தான் உள்ளது.

3. வானியல் ஆராய்ச்சியாளர்கள் தொலைவில் உள்ள சூரிய மண்டலத்தில் புதிய கிரகங்களை தொடர்ந்து கண்டுபிடித்துக் கொண்டு இருக்கின்றனர். அநேக கிரகங்கள் இருக்கிறபடியால் பிரபஞ்சத்தில் எங்காவது உயிரினங்கள் ஜீவிக்கலாம் என்பதற்கான ஆதாரத்தை தருகின்றனர் என்று சிலர் கூறுகின்றனர். இவைகளில் எந்த கிரகமும் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்றது என்று நிறுபிக்கப்படவில்லை என்பதே உண்மை. பூமிக்கும் இந்த கிரகங்களுக்கும் இடையே உள்ள இந்த மிகப்பெரிய இடைவேளியே இந்த கிரகங்களில் உயிரினங்கள் வாழ்வதற்கு சாத்தியமிருக்கிறது என்பதை தீர்மானிக்க சாத்தியமில்லாததாக மாற்றுகிறது. பூமிமட்டும் தான் சூரிய மண்டலத்தின் மூலம் உயிரினங்கள் வாழ ஆதரிக்கிறது என்பதை அறிந்து, பரிணாமவாதிகள் இந்த வாழ்க்கை பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கிறது என்பதை ஆதரிக்கும்வண்ணமாக மற்றோரு சூரிய மண்டலதில் கிரகத்தை தேடுகின்றனர். அநேக கிரகங்கள் அங்கு உள்ளன. ஆனால் அவைகள் உயிரினங்கள் ஜீவிக்க ஏதுவானவைகளா என்பதை ஆய்வு செய்ய அந்த கிரகங்களை பற்றி நமக்கு போதுமான அறிவு இல்லை.

எனவே வேதாகமம் என்ன சொல்கிறது? பூமியும் மனிதனும் தேவனுடைய படைப்பிலே தனித்தன்மை வாய்ந்தவர்கள். தேவன் சூரியன், சந்திரன், அல்லது நட்சத்திரங்களை படைப்பதற்கு முன்னதாகவே பூமியை படைத்தார் என்று ஆதியாகமம் 1ம் அதிகாரம் போதிக்கிறது. அப்போஸ்தலர் 17:24,26 இப்படியாக சொல்கிறது: “உலகத்தையும் அதிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின தேவனானவர் வானத்திற்கும் பூமிக்கும் ஆண்டவராயிருக்கிறபடியால் கைகளினால் கட்டப்பட்ட கோவில்களில் அவர் வாசம்பண்ணுகிறதில்லை…மனுஷஜாதியான சகல ஜனங்களையும் அவர் ஒரே இரத்தத்தினாலே தோன்றப்பண்ணி, பூமியின்மீதெங்கும் குடியிருக்கச்செய்து, முன் தீர்மானிக்கப்பட்ட காலங்களையும் அவர்கள் குடியிருப்பின் எல்லைகளையும் குறித்திருக்கிறார்.”

ஆதியில் மனிதன் பாவமற்றவனகவே இருந்தான் மற்றும் இந்த உலகத்தில் எல்லாம் “மிக நன்றாகவே” இருந்தது (ஆதியாகமம் 1:31). முதல் மனிதன் பாவம் செய்தபோது (ஆதியாகமம் 3) அதனுடைய விளைவாகவே நோய், மரணம் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டது. விளங்குகள் (அவைகள் தார்மீக மனிதர் அல்ல) தேவனுக்கு முன்பாக எந்த பாவமும் செய்யாத போதும் அவைகளும் பாடுபட்டு மரிக்கின்றன (ரோமர் 8:19-22). நும்முடைய பாவங்களுக்காக நாம் அடையவேண்டிய தண்டனையை இயேசு மரணத்தின் மூலம் நீக்கினார். அவர் திரும்ப வரும்போது ஆதாம் முதல் இருந்துவருகிற சாபங்களை நீக்கிவிடுவார் (வெளிப்படுத்தின விசேஷம் 21-22). ரோமர் 8:19-22 சொல்கிறது எல்லா ஜீவராசிகளும் இந்த நேரத்திற்காக காத்திருக்கின்றன என்று. நாம் எல்லோரும் கவனிக்க வேண்டியது இயேசு மனுகுலத்திற்காக மரிப்பதற்காகவே வந்தார் அவர் ஒரேதரம் மட்டுமே மரித்தார் (எபிரெயர் 7:27; 9:26; 10:10).

சிருஷ்டிப்புகள் எல்லாம் சாபத்தினாலே பாடு அனுபவித்தால், இந்த பூமிக்கு அப்பார்பட்ட உயிரினங்களும்; பாடு அனுபவிக்கவேண்டும். விவாதத்திற்காக மற்ற கிரகனங்களிலும் உயிரினங்கள் இருக்குமே ஆனால் அவைகளும் நிச்சயம் பாடு அனுபவிக்க வேண்டும். இப்பொழுது இல்லை என்றால் வானங்கள் மடமட என்று அகன்று, பூதங்கள் வெந்து உருகிப்போகும் நாளில் (2பேதுரு 3:10) அவர்கள் பாடு அனுபவிப்பார்கள். அவர்கள் பாவம் செய்யவே இல்லை என்றால் அவர்களை தண்டிப்பதன் மூலம் தேவன் அநீதி செய்தவராகிறார். அவர்கள் பாவம் செய்திருந்தால், கிறிஸ்து ஒரேதரம் மட்டுமே மரிக்க முடியும் (அதை அவர் இப்பூமியில் செய்தார்), எனவே அவர்கள் பாவத்தில் இருப்பார்கள் அது தேவனுடைய குணாதிசயத்திற்கு முரண்பாடானது ஆகும் (2பேதுரு 3:9). நிச்சயமாக பூமிக்கு அப்பால் உயிரினங்கள் இருக்குமே ஆனால் இது நமக்கு தீர்க்க முடியாத முரண்பாடாகவே இருக்கிறது.

பிற கிரகத்தில் உள்ள அறநெறியில்லாத மற்றும் உணர்வற்ற வடிவமுள்ள உயிரினங்களை குறித்து என்ன சொல்வது? பாசிகள், நாய்கள், மற்றும் பூனைகள் அறியப்படாத கிரகத்தில் இப்பொழுது இருக்குமா? தோரயமாக இது வேதாகமத்தின் வசனங்களுக்கு எந்த தீங்கும் விளைவிக்காது. ஆனால் இது “எல்லா சிருஷ்டிகளும் பாடுஅனுபவிப்பதனால், தொலைவிலுள்ள பிற கிரகத்தில் உள்ள அறநெறியில்லாத மற்றும் உணர்வற்ற வடிவமுள்ள உயிரினங்கள் பாடுகளை அனுபவிக்க தேவனுடைய நோக்கம் என்ன?” என்ற கேள்விக்கு பதிலளிக்கும் போது இது மிகுந்த பிரச்சனையாக இருக்கும்.

முடிவாக, பிரபஞ்சத்தில் மற்ற இடங்களில் உயிரினங்கள் இருக்கின்றன என்பதற்கான காரணத்தை வேதாகமம் நமக்கு தரவில்லை. உண்மையில் மற்ற கிரகங்களில் உயிரினங்கள் இல்லை என்பதற்கு வேதாகமம் சில காரணங்களை தருகின்றன. ஆம் அநேக விசித்திரமான மற்றும் விளக்கமுடியாத காரியங்கள் நிறைவேறியிருக்கின்றன. அதனால் இவைகள் வேற்று கிரக வாசிகள் அல்லது யுஎஃப்ஓக்களால் தான் நடந்தன என்று கூற காரணங்கள் கிடையாது. நடந்த நிகழ்வுகளுக்கு காணக்கூடியதான காரணங்கள் இருக்குமேயானால், அது அவிக்குரியதாக தோற்றத்தோடு இருக்கும் மேலும் குறிப்பாக இது சாத்தானிடத்தில் இருந்து ஆரம்பித்ததாக இருக்கும்.

English
தமிழ் முதற் பக்கத்திற்குச் செல்க
வேற்று கிரக வாசிகள் அல்லது யுஎஃப்ஓக்கள் என்பவர்கள் இருக்கிறார்களா?