நான் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படுவது எப்படி?


கேள்வி: நான் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படுவது எப்படி?

பதில்:
யோவான் 14:16 மிக முக்கியமான வசனம் இது. பரிசுத்த ஆவியில் நிரப்பப்படுவதைக் குறித்து புரிந்து கொள்ள உதவும் இந்த வசனத்தில் இயேசு பரிசுத்த ஆவியானவர் விசுவாசிகளுக்குள் வாசம் செய்வார் அதுவும் நிரந்தரமாக வாசம் செய்வார் என்று வாக்குப் பண்ணியிருக்கிறார். பரிசுத்த ஆவியில் நிரப்பப்படுதல் மற்றும் வாசம் செய்தல் இவை இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தை நாம் தெரிந்துக் கொள்வது மிகவும் அவசியம். நிரந்தரமாக பரிசுத்த ஆவி வாசம் செய்தல் என்பது சிலருக்கு மாத்திரம் கிடையாது. எல்லாத விசுவாசிகளுக்குமானது. வேதவாக்கியங்களில் அநேக வசனங்கள் இந்த கருத்தை ஆதரிக்கின்றன. முதலாவது பரிசுத்த ஆவி என்பது எல்லா விசுவாசிகளுக்கும் கொடுக்கப்பட்ட ஈவு, இயேசுவை விசுவசிப்பதை தவிர வேறு எந்த நிபந்தனையும் இதற்குக் கிடையாது (யோவன் 7:37-39).

இரண்டாவது பரிசுத்த ஆவி இரட்சிக்கப்படும்போது கொடுக்கப் படுகின்றது. (எபேசியர்1:13) கலாத்தியர்3:2 இந்த சத்தியத்தையே வலியுறுத்துகின்றது. விசுவசிக்கும்போதே ஆவியின் வாசம் செய்தலும் முத்தரிக்கப்படுதலும் நடந்துவிடுகின்றன. மூன்றாவது பரிசுத்த ஆவியானவர் விசுவாசிகளுக்குள் நிரந்தரமாக வாசம் செய்கிறார். பரிசுத்த ஆவி விசுவாசிகளுக்கு ஒரு அச்சாரமாகவும் அல்லது கிறிஸ்துவுக்குள் எதிர்காலத்தில் மருரூபமாக்கப்பட ஒரு அடையாளமாகவும் கொடுக்கப்படுகின்றது. ( 2கொரிந்தியர் 1:22, எபேசியர் 4:30).

இது எபேசியர் 5:18 –ல் சொல்லப்பட்ட பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படுதலும் முற்றிலும் வேற்றுமையானது. நாம் பரிசுத்த ஆவிக்கு முற்றிலும் சமர்ப்பணிக்கப்பட்டிருக்கும்போது நம்மை அவர் ஆளுகை செய்வதன் மூலம் நம்மை நிரப்புவார். ரோம் 8:9 மற்றும் எபேசியர்1:13,14, ஆவியானவர் எல்லா விசுவாசிகளுக்குள்ளும் வாசம் செய்கிறார் என்று சொல்லுகிறது. ஆனால் அவரை துக்கப்படுத்தி (எபேசியர் 4:30) அவருடைய கிரிகைகளை நாம் தடைச்செய்யவும் முடியும். ( I தெசலோனிக்கியர் 5:19) நாம் இதை அனுமதிக்கும்போது ஆவியின் பரிபூரணமான கிரியை நமக்குள்ளும், நம் மூலமாகவும் நடப்பதை நாம் உணரமுடியாது.

பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படுதல் என்கிற போது அவர் நம் வாழ்க்கையின் எல்லா பகுதிகளையும் ஆட்கொண்டு, வழி நடத்தி, கட்டுப்படுத்துவது என்று பொருள்படும். அப்பொழுது அவருடைய வல்லமை நம்மூலமாக வெளிப்பட்டு நாம் தேவனுக்காக செய்கிற காரியங்கள் மிகுந்த பலன் தருகிறதாயிருக்கும். பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படுவது என்பது வெளியரங்கமான செய்கை மட்டும் அல்ல. நம்முடைய எண்ணம், நோக்கம் முழுவதையும் மாற்றக்கூடியதாயிருக்கிறது. சங்கீதம் 19:4 ‘‘ என் கன்மலையும்“ என் மீட்பருமாகிய கர்த்தாவே, என் வாயின் வார்த்தைகளும், என் இருதயத்தின் தியானமும் உமது சமூகத்தில் பிரீதியாயிருப்பதாக என்று கூறுகின்றது.

பாவம் மாத்திரமே பரிசுத்த ஆவியில் நிரப்பப்படுதலை தடுக்கும், கீழ்படிதலினால் மட்டுமே பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட முடியும். எபேசியர் 5:18. நாம் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படுவோம் என்று கட்டளையாய் சொல்லுகிறது. எனினும் ஜெபிப்பதால் நிரப்படுகிறோம் என்று அர்த்தம் ஆகாது. தேவனுடைய கட்டளைகளுக்கு நம்முடைய கீழ்படிதலே பரிசுத்த ஆவியை விடுதலையாய் நமக்குள் விரியைச் செய்ய வைக்கும்.

நாம் பாவத்தினால் கரைப்பட்டிருக்கிறதினால்தான் எல்லா நேரத்திலேயும் ஆவியில் நிரப்பப்படுதல் கூடாத காரியமாயிருக்கின்றது. நாம் பாவம் செய்யும்போது உடனே அதை தேவனிடத்தில் அறிக்கை செய்து நம்முடைய அர்ப்பணிப்பை ஆவியில் நிரப்பப்படவும், நடத்தப்படவும் நாம் புதிப்பித்துக் கொள்ள வேண்டும்.

English
தமிழ் முதற் பக்கத்திற்குச் செல்க
நான் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படுவது எப்படி?