settings icon
share icon
கேள்வி

நோவா பேழையை கட்ட எவ்வளவு காலம் எடுத்தது? நோவா பேழையில் எவ்வளவு காலம் இருந்தார்?

பதில்


நோவா பேழையைக் கட்ட எவ்வளவு காலம் எடுத்தது? நோவா பேழையைக் கட்ட எவ்வளவு காலம் எடுத்தது என்று வேதாகமம் குறிப்பாகக் கூறவில்லை. ஆதியாகமம் 5:32-ல் நோவாவை முதன்முதலில் குறிப்பிடும்போது, அவருக்கு 500 வயது. நோவா பேழைக்குள் நுழையும் போது, அவருக்கு 600 வயது. பேழையைக் கட்டுவதற்கு எடுக்கும் நேரம், ஆதியாகமம் 5:32க்கும், நோவாவுக்கு பேழையைக் கட்டும்படி தேவன் கட்டளையிட்ட நேரத்திற்கும் (ஆதியாகமம் 6:14-21) இடையே எவ்வளவு காலம் கடந்துவிட்டது என்பதைப் பொறுத்தது. அதிகபட்சமாக, இது 100 ஆண்டுகள் ஆனது.

நோவா பேழையில் எவ்வளவு காலம் இருந்தார்? நோவா தனது வாழ்க்கையின் 600-வது ஆண்டில், 2-வது மாதம் 17-வது நாளில் பேழைக்குள் பிரவேசித்தார் (ஆதியாகமம் 7:11-13). நோவா அடுத்த வருடத்தின் 2-வது மாதத்தின் 27-வது நாளில் பேழையை விட்டு வெளியேறினார் (ஆதியாகமம் 8:14-15). எனவே, 360 நாட்கள் சந்திர நாட்காட்டியை எடுத்துக் கொண்டால், நோவா சுமார் 370 நாட்கள் பேழையில் இருந்தார்.

நோவா பேழையில் எத்தனை வகையான விலங்குகளை எடுத்துக்கொண்டார்? ஒவ்வொரு வகையான சுத்தமான விலங்குகளின் ஏழு ஜோடிகளும் ஒவ்வொரு வகையான மற்ற விலங்குகளின் இரண்டு ஜோடிகளும் பேழையில் எடுக்கப்பட்டன (ஆதியாகமம் 6:19-20; 7:2-3). "சுத்தம்" என்பதன் மூலம் வேதாகமம் என்பது "பலிக்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட" விலங்குகளை குறிக்கிறது. அதனால்தான் ஏழு ஜோடி சுத்தமான விலங்குகள் எடுக்கப்பட்டன - ஜலப்பிரளயம் முடிந்ததும் அவற்றில் சில அவற்றின் இனங்களுக்கு ஆபத்து இல்லாமல் பலியிடப்படலாம்.

நோவாவின் பேழையில் எத்தனை பேர் இருந்தனர்? ஆதியாகமம் 6-8 அதிகாரங்களின்படி, நோவா, அவனது மனைவி, நோவாவின் மூன்று மகன்கள் (சேம், காம் மற்றும் யாப்பேத்) மற்றும் அவர்களது மனைவிகள் பேழையில் இருந்தனர். எனவே, பேழையில் எட்டு பேர் இருந்தனர்.

நோவாவின் மனைவி யார்? நோவாவின் மனைவியின் பெயரையோ அடையாளத்தையோ வேதாகமம் எங்கும் குறிப்பாகக் கொடுக்கவில்லை. அவள் நாமாள் என்கிற ஒரு மரபு உள்ளது (ஆதியாகமம் 4:22). அப்படி இருந்தாலும், இது வேதாகமத்தில் வெளிப்படையாகக் கற்பிக்கப்படவில்லை.

English



முகப்பு பக்கம்

நோவா பேழையை கட்ட எவ்வளவு காலம் எடுத்தது? நோவா பேழையில் எவ்வளவு காலம் இருந்தார்?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries