settings icon
share icon
கேள்வி

கர்த்தருடைய இராப்போஜனம் கிறிஸ்தவ திருவிருந்தினுடைய முக்கியத்துவம் என்ன?

பதில்


கர்த்தருடைய இராப்போஜனத்தைக் குறித்து நாம் ஆராய்வது நம்முடைய ஆத்துமாவை கலக்குகிற ஒரு அனுபவமாக இருக்கும். ஏனென்றால் அதனுடைய அர்த்தம் அவ்வளவு ஆழமானது. தொன்மைமிக்க பஸ்கா அனுசரிக்கப்பட்டுக்கொண்டிருந்தபோது இயேசு அவர் மரிக்கவிருந்த நாளின்போது ஒரு புதிய ஐக்கியத்தின் பந்தியை ஏற்பாடு செய்தார். அதைத்தான் நாம் இன்றுவரைக் கடைப்பிடித்துக் கொண்டிருக்கிறோம். இது கிறிஸ்தவ ஆராதனையின் மிக முக்கியமான பாகமாகும். இது கர்த்தருடைய மரணத்தையும், உயிர்த்தெழுதலையும் மற்றும் எதிர்காலத்தில் அவருடைய மகிமையான வருகையையும் நினைவு கூறச் செய்கின்றது.

பஸ்கா என்பது யூதமத வருஷத்தின் மிகவும் புனிதமான பண்டிகையாகும். இது எகிப்தின் மீது அனுப்பப்பட்ட கடைசி வாதையான, எகிப்தியரின் தலையீற்றெல்லாம் சங்கரிக்கப்பட்டதையும், இஸ்ரவேலருடையவைகள் மாத்திரம் நிலைக்காலில் தெளிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினால் காப்பாற்றப்பட்டதையும் நினைவுக் கூறுகிறதாயிருந்தது. அந்த ஆட்டுகுட்டி பின்பு சுடப்பட்டு புளிப்பில்லாத அப்பத்தோடு உட்கொள்ளப்பட்டது. தலைமுறைகள்தோறும் இந்த பண்டிகை கொண்டாடப்பட வேண்டும் என்று தேவன் கட்டளையிட்டிருந்தார். இது யாத்திராகமம் 12-ஆம் அதிகாரத்தில் எழுதப்பட்டிருக்கிறது.

கடைசி பந்தியான பஸ்காவின் கொண்டாட்டதின்போது, இயேசு அப்பத்தை எடுத்து தேவனுக்கு நன்றி செலுத்தினார். அதைப்பிட்டு தன் சீஷர்களுக்கு கொடுக்கும்போது அவர் சொன்னதாவது ‘‘இது உங்களுக்காகக் கொடுக்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது, என்னை நினைவுகூறும்படி இதைச் செய்யுங்கள் என்றார். போஜனம் பண்ணினபின்பு அவர் அந்தபடியே பாத்திரத்தையும் கொடுத்து, இந்தப் பாத்திரம் உங்களுக்காகச் சிந்தப்படுகிற என்னுடைய இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது என்றார்”. (லூக்கா22:19-20) அவர் ஸ்தோத்திரப்பாட்டை பாடி அந்தப் பந்தியை முடித்தார். (மத்தேயு 26:30) பின்பு ஒலிவமலைக்குச் சென்றார்கள். அங்குதான் இயேசு யூதாசினால் காட்டிக்கொடுக்கப்பட்டார். அடுத்த நாள் அவர் சிலுவையில் அறையப்பட்டார்.

கர்த்தருடைய இராப்போஜனம் குறித்து சுவிசேஷப் புஸ்தகங்களிலே எழுதப்பட்டிருக்கின்றது. (மத்தேயு 26:26-29, மாற்கு 14:17-25, லூக்கா 22:7-22 மற்றும் யோவான் 13:21-30). பவுல் அப்போஸ்தலர் கர்த்தருடைய இராப்போஜனத்தைக் குறித்து I கொரிந்தியர் 11:23-29 –ல் எழுதியிருக்கிறார். பவுல் சுவிசேஷப் புஸ்தகங்களில் இல்லாத ஒரு வாக்கியத்தை எழுதியிருக்கிறார் ‘‘இப்படியிருக்க, எவன் அபாத்திரமாய்க் கர்த்தருடைய அப்பத்தை புசித்து, அவருடைய பாத்திரத்தில் பாணம் பண்ணுகிறானோ, அவன் கர்த்தருடைய சரீரத்தையும் இரத்தத்தையும் குறித்துக் குற்றமுள்ளவனாயிருப்பான். எந்த மனுஷனும் தன்னைத்தானே சோதித்தறிந்து இந்த அப்பத்தில் புசித்து, இந்த பாத்திரத்தில் பானம் பண்ணக்கடவன். என்னத்தினாலெனில், அபாத்திரமாய்ப் போஜன பானம் பண்ணுகிறவன், கர்த்தருடைய சரீரம் இன்னதென்று நிதானித்து அறியாத்தினால், தனக்கு ஆக்கினைத் தீர்ப்பு வரும்படி போஜனபானம் பண்ணுகிறான்’’ ( I கொரிந்தியா 11:27-29). நாம் அப்பத்தையும் பாத்திரத்தையும் ‘அபாத்திரமாய்’ பங்கு கொள்வது என்றால் என்ன என்று நாம் கேட்கலாம்.

அப்பத்தைக்குறித்தும் பாத்திரத்தைக் குறித்தும் உண்மையான அர்த்தம் அறியாமல், நம்முடைய இரட்சிப்புக்காக இரட்சகர் செலுத்தின விலைக்கிரயத்தை மறந்து பங்குகொள்வது என்று பொருள்படும். அல்லது அந்த ஆராதனையில் ஒரு செத்ததாகவும், ஒரு சடங்காச்சாரம் போலவும், அறிக்கையிடப்படாத பாவத்தோடும் பங்கு கொள்வது என்றும் பொருள்படும். பவுலுடைய கட்டளையின்படி நம்மைநாமே நிதானித்து பின்பு அப்பத்தையும் திராட்சை இரசத்தையும் பானம் பண்ண வேண்டும்.

இன்னொரு சுவிசேஷங்களிலில்லாத பவுல் எழுதியிருக்கிற வாக்கியம் என்னவென்றால் ‘‘ ஆகையால் நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம் பண்ணும்போதெல்லாம் கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தை தெரிவிக்கிறீர்கள்’’ என்பதே .

இந்த வசனம் நம்முடைய அனுசரிப்பிற்கு ஒரு கால அவசாகம் கொடுத்துவிடுகின்றது, அதாவது கர்த்தருடைய வருகை வரைக்கும். இந்த சிறிய காரியங்களை இயேசு தன்னுடைய சரீரத்தைக் குறித்தும் இரத்தத்தைக் குறித்தும் அடையாளமாக பயன்டுத்தினார் என்று நாம் கற்றுக்கொள்ள முடிகின்றது. இந்த அடையாளம் ஒரு பளிங்குகல்லினால் செதுக்கப்பட்டதாகவோ அல்லது ஒரு வெண்கலத்தினாலோ இல்லை, அப்பமும், திராட்சை ரசமுமே!.

அவர் அப்பம் தன்னுடைய சரீரம் கிழிக்கப்படுவதைக்குறித்து பேசுகிறது என்று கூறினார். அவருடைய எலும்பு உடைக்கப்படவில்லை, ஆனால் அவருடைய சரீரம் அடையாளம் தெரியாத அளவிற்கு பாதிக்கப்பட்டது. (சங்கீதம் 22:12-17, ஏசாயா 53:4-7) திராட்சை ரசம் அவருடைய அடையப்போகிற கொடூர மரணத்தைக் குறித்துப் பேசியது. அவர் பரிபூரணமான தேவனுடைய குமாரனாக, எண்ணிலடங்கா மீட்பரைக்குறித்தான பழைய ஏற்பாட்டு தீர்க்தரிசனங்களின் நிறைவேறுதலாய் மாறினார். (ஆதியாகமம் 3:15 சங்கீதம் 22, ஏசாயா 53). அவர் ”என்னை நினைவுகூறும்படி” என்று சொல்லும்போது அது எதிர்காலத்திலும் கடைபிடிக்கப்படவேண்டியது ஒன்று என்று சுட்டிக்காட்டினார். இது பாஸ்காவைக் குறிக்கிறது, அதற்கு ஒரு ஆட்டுக்குட்டியின் மரணம் தேவைப்பட்டது. உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கிற ஒரு ஆட்டுக்குட்டியை எதிர்பார்த்து காத்திருந்ததும், இந்த கர்த்தருடைய இராப்போஜனத்தில் நிறைவேறினது. பழைய உடன் படிக்கை கிறிஸ்துவாகிய பஸ்கா (கொரிந்தியர் 5:7 ) ஆட்டுக்குட்டி பலியானபோது புதிய உடன்படிக்கையாய் மாறினது (எபிரெயர்8:8-13 ). பலி செலுத்துகிற முறை இன்று தேவைப்படாமல் போனது. (எபிரேயர் 9:25-28). கர்த்தருடைய இராப்போஜனம் / கிறிஸ்தவ திருவிருந்து என்பது கிறிஸ்து செய்ததை நினைவுகூர்ந்து அவருடைய பலியினால் நமக்குக் கிடைத்த பலனைக் கொண்டாடுவது ஆகும்.

English



முகப்பு பக்கம்

கர்த்தருடைய இராப்போஜனம் கிறிஸ்தவ திருவிருந்தினுடைய முக்கியத்துவம் என்ன?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries