பரமண்டல ஜெபம் என்றால் என்ன மற்றும் நாம் அந்த ஜெபத்தை செய்ய வேண்டுமா?


கேள்வி: பரமண்டல ஜெபம் என்றால் என்ன மற்றும் நாம் அந்த ஜெபத்தை செய்ய வேண்டுமா?

பதில்:
பரமண்டல ஜெபம் என்பது இயேசு தமது சீஷர்களுக்கு கற்றுகொடுத்த ஜெபமாகும் (மத்தேயு 6:9-13 மற்றும் லூக்கா 11:2-4). மத்தேயு 6:9-13 சொல்லுகிறது, “பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக; உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக. எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும். எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும். எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும்.” அநேகர் இந்த ஜெபத்தை நாம் மனப்பாடம் செய்து அதை அப்படியே சொல்லி ஜெபிக்க வேண்டும் என்று தவறாக புரிந்துகொண்டு இருக்கிறார்கள். சிலர் பரமண்டல ஜெபத்தை ஒரு மந்திரம் சூத்திரத்தை போல நினைத்து அந்த வார்த்தைகளில் ஏதோ வல்லமை இருப்பதை போல எண்ணி உபயோகிக்கிறார்கள்.

வேதம் இதற்க்கு எதிர் மாறாக நமக்கு கற்றுக்கொடுக்கின்றது. நாம் ஜெபம் செய்யும்போது, தேவன் நமது வார்த்தைகளில் கவனம் செலுத்துவதைவிட, நாம் இருதயத்தையே கவனிக்கிறார் (மத்தேயு 6:6-7). ஜெபிக்கும்போது, நமது இருதயத்தை தேவனிடம் ஊற்ற வேண்டும் (பிலிபியர் 4:6-7), வெறும் மனப்பாடம் செய்த வார்த்தைகளை உச்சரிக்க உதவாது.

பரமண்டல ஜெபம் நாம் எப்படி ஜெபிக்க வேண்டும் என்பதற்க்கான ஒரு மாதிரி, ஒரு முறை. ஜெபத்தில் இருக்க வேண்டிய “பொருட்களை” அது காட்டுகிறது. இதை விரிவாக பார்ப்போம். “பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே” என்பது நாம் யாரிடம் ஜெபம் செய்யவேண்டும் என்று சொல்லுகிறது—பிதாவானவரிடம். “உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக”—இது நாம் தேவனை துதித்து ஆராதிக்க வேண்டும் என்று சொல்லுகிறது. “உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக” என்ற வார்த்தைகள் நாம் நமது வாழ்கையில் மற்றும் உலகத்தின் மேல், நம் திட்டங்கள் அல்ல, தேவன் வைத்துள்ள திட்டங்கள் நடக்கும்படி ஜெபிக்க வேண்டும் என்று நமக்கு ஞாபகப்படுத்துகிறது. “எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்” நமது தேவைக்கு தேவனிடம் கேட்க வேண்டும் என்று உணர்த்துகிறது “எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்” என்ற வார்த்தைகள் நமது பாவங்களை தேவனிடம் அறிக்கை செய்ய வேண்டும் என்றும் நாம் மற்றவர்களை மண்ணிக்க வேண்டும் என்றும் சொல்லுகிறது. ஜெபத்தின் முடிவில் இருக்கும் இந்த வார்த்தைகள் “எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும்,” நாம் பாவத்தின் மேல் வெற்றி அடையும்படி தேவனின் உதவிக்காக மற்றும் பிசாசின் தாக்குதல்கள் அனுகாமல் பாதுகாப்பிற்காக தேவனிடம் செய்யும் வேண்டுதலே.

இப்படியாக, பரமண்டல ஜெபம் என்பது ஏதோ மனப்பாடம் செய்து தேவனிடம் ஒப்புவிக்கின்ற ஒன்று அல்ல. அது நாம் எப்படி ஜெபிக்க வேண்டும் என்ற மாதிரியே. பரமண்டல ஜெபத்தை மனப்பாடம் செய்வது தவறு? அது தவரல்ல? அதே ஜெபத்தை நாம் தேவனிடம் திரும்பவும் ஏறெடுப்பது தவறா? அதை உண்மையாக மற்றும் அதின் அர்த்தத்தை புரிந்து ஜெபிக்கின்றது தவறானது அல்ல. தேவன், நாம் அவரிடம் உறவாடுவதிலும் மற்றும் நாம் உள்ளத்தில் இருந்து அவரிடம் பேசுவதிலும் தான் அதிக கவனமுள்ளவராய் இருக்கிறாரே அன்றி நாம் உபயோகிக்கிற வார்த்தைகளில் அல்ல. பிலிப்பியா் 4:6-7 சொல்லுகிறது, “நீங்கள் ஒன்றுக்குங்கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது, எல்லாப் புத்திக்கும்மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக காத்துக்கொள்ளும்.”

English
தமிழ் முதற் பக்கத்திற்குச் செல்க
பரமண்டல ஜெபம் என்றால் என்ன மற்றும் நாம் அந்த ஜெபத்தை செய்ய வேண்டுமா?