இயேசு கிறிஸ்துவின் உயிர்தெழுதல் உண்மையா?


கேள்வி: இயேசு கிறிஸ்துவின் உயிர்தெழுதல் உண்மையா?

பதில்:
வேத வாக்கியங்கள் உயிர்தெழுதலைக் குறித்து முழுமையானச் சான்றுகளை அளிக்கிறது. கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் குறித்து மத்தேயு 28:1-20, மாற்கு 16:1-20 லூக்கா 24:1-53 மற்றும் யோவான் 20:1-21:5 இல் குறிப்பிடப்பட்டுள்ளது. உயிர்த்தெழுந்த இயேசு அப்போஸ்தலருடைய நடபடிகள் புஸ்தகத்திலும் தரிசனம் ஆனார் (அப்போஸ்தலர் 1:1-11). இந்த வாக்கியங்களிலிருந்து இயேசுகிறிஸ்து உயிர்தெழுந்த்தற்கு அநேக ”சாட்சிகள்” நமக்கு கிடைக்கும். முதலாவது சீஷர்களுடைய வியப்பூட்டுகிற மாற்றமே. ஒரு கூட்டமாய் பயந்து ஒலிந்து இருந்ததிலிருந்து திடமான, தைரியமான சாட்சிகளாய் உலகமுழுவதிலும் சுவிசேஷத்தை பிரசங்கிக்கிறவர்களானார்கள். இந்த வியப்பூட்டுகிற மாற்றத்தை உயிர்தெழுந்த இயேசு அவர்களுக்கு தரிசனமாகிய நிகழ்ச்சிதான் கொண்டு வந்திருக்க வேண்டும்.

இரண்டாவது அப்போஸ்தலர் பவுலுடைய வாழ்க்கை. அவரை எது சபையை துன்புறுத்துபவனாய் இருந்ததிலிருந்து சபையின் அப்போஸ்தலனாக மாற்றியது? உயிர்த்தெழுந்த கிறிஸ்து அவருக்கு தமஸ்கு போகிற வழியில் தரிசனமானதுதான். (ஆப்பஸ்தலர் 9:1-6). மூன்றாவது உறுதியானச்சான்று காலியாயிருந்த கல்லறைதான். ஒருவேளை கிறிஸ்து உயிர்த்தெழவில்லையென்றால் அவருடைய சரீரம் எங்கே? சீஷர்களும் மற்றவர்களும் அவர் அடக்கம்பண்ணப்படும்போது கல்லறையை கண்டார்களே. அவர்கள் மறுபடியும் வரும்பொது, அவருடைய சரீரம் அங்கே இல்லை. தூதர்கள் “அவர் இங்கே இல்லை, தான் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்,” என்று கூறினார்கள். நான்காவது அவர் அநேகருக்கு தரிசனமானதும் அவருடைய உயிர்தெழுதலுக்கு சாட்சியே (மத்தேயு 28:5,9, 16-17; மாற்கு 16:9; லூக்கா 24:13-35;யோவான் 20:19,24,26-29, 21:1-14; அப்போஸ்தலர் நடபடிகள் 1:6-8; I கொரிந்தியர் 15:5-7)

அப்போஸ்தலர்கள் இயேசுவின் உயிர்த்தெழுதலுக்கு கொடுக்கின்ற முக்கியத்துவமும் ஒரு சான்றுதான். இயேசுவின் உயிர்த்தெழுதலுடைய முக்கிய வசனம் 1 கொரிந்தியர் 15. இந்த அதிகாரத்தில் அப்போஸ்தலர் பவுல் கிறிஸ்துவின் உயிர்தெழுதலை புரிந்துகொண்டு நம்புவது எவ்வளவு இன்றியமையாதது என்று விளக்கியுள்ளார். உயிர்த்தெழுதல் கீழ்வரும் காரியங்களினால் முக்கியமானது

1. கிறிஸ்து மரித்தோரிலிருந்து உயிர்தெழாதிருந்தால் விசுவாசிகளும் உயிர்தெழ இயலாது.(I கொரிந்தியர் 15:12-15)

2. கிறிஸ்து மரித்தோரிலிருந்து உயிர்தழுந்திருந்தால் அவர் பாவத்திற்கு தன்னை பலியாக ஒப்புக்கொடுத்தது போதுமானதில்லை என்று ஆகியிருக்கும். (I கொரிந்தியர் 15:16-19). இயேசுவின் உயிர்தெழுதல் தேவன் அவருடைய மரணத்தை நம்முடைய பாவத்திற்காக பாவநிவாரணமாக ஏற்றுக்கொண்டார் என்று தெளிவுப்படுத்துகிறது. அவர் ஒருவேளை மரித்து மரித்தவர்களோடு இருந்திருப்பாரானால் அவருடைய மரணம் போதுமானதாக இருந்திருக்காது. அதன் விளைவாக விசுவாசிகள் பாவம் மன்னிக்கப்படாமல், அவர்கள் இறந்தப்பின் மரித்து கிடந்திருப்பார்கள். (I கொரிந்தியர் 15:16-19) நித்திய ஜீவன் என்று ஒன்று இருந்திருக்காது (யோவன்3:16) “கிறிஸ்துவோ மரித்தோரிலிருந்தெழுந்து நித்திரையடைந்தவர்களில் முதற்பலனானார்’’ ( I கொரிந்தியர்15:20)

முடிவாக, வேதவாக்கியம் இயேசுகிறிஸ்துவின் மீது விசுவாசம் வைப்பவர்கள் நித்திய ஜீவனுக்குள் அவர் உயிர்த்தெழுந்தது போல எழுப்பப்படுவார்கள் என்று தெளிவாகிறது (I கொரிந்தியர் 15:20-23) ஒன்று கொரிந்தியர் 15-வது அதிகாரம் மேலும் அவர் பாவத்தை வென்று நமக்கும் பாவத்தை மெற்கொண்டு ஜெயத்தோடு வாழ்கிற வல்லமையைக் கொடுத்திருப்பதை விளக்குகின்றது. (I கொரிந்தியர்15:24-34) அது பெறப்போகிற மகிமையான உயிர்த்தெழுந்த சரீரத்தைக் குறித்து விளக்குகின்றது. ( கொரிந்தியர் 15:35-49)

அது மேலும் கிறிஸ்துவின் உயிர்தெழுதலினால், அவரை விசுவாசிக்கிறவர்கள் மரணத்தின்மீது ஜெயம் எடுப்பார்கள் என்றும் கூறுகின்றது. ( I கொரிந்தியர்15:50-58)

எவ்வளவு ஒரு மகிமையானது இந்த உயிர்த்தெழுதலைக்குறித்த சத்தியம்! ‘‘ஆகையால் எனக்குப் பிரியமான சாகோதரரே, கர்த்தருக்குள் நீங்கள் படுகிற பிரயாசம் விருதாவாயிராதென்று அறிந்து, நீங்கள் உறுதிப்பட்டவர்களாயும், அசையாதவர்காளாயும், கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாயும் இருப்பீர்களாக’’ ( I கொரிந்தியர்15:58) . பரிசுத்த வேதாகமத்தின்படி இயேசுகிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் ஒரு நிதர்சனமான உண்மை. வேதம் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை பதிவு செய்கின்றது. மேலும் நானூற்றுக்கும் மேற்பட்டோருடைய சாட்சிகளும், இயேசுவின் உயிர்தெழுதலின் உண்மையின் மீது முக்கியமான கிறிஸ்தவ உபதேசத்தைக் கட்டி எழுப்புயுள்ளது.

English
தமிழ் முதற் பக்கத்திற்குச் செல்க
இயேசு கிறிஸ்துவின் உயிர்தெழுதல் உண்மையா?