settings icon
share icon
கேள்வி

இயேசு ஏன் உவமைகளில் போதித்தார்?

பதில்


ஒரு உவமை என்பது பரலோக அர்த்தமுள்ள ஒரு பூமிக்குரிய கதை என்று கூறப்பட்டுள்ளது. கர்த்தராகிய இயேசு ஆழமான, தெய்வீக சத்தியங்களை விளக்கும் வழிமுறையாக அடிக்கடி உவமைகளைப் பயன்படுத்தினார். இது போன்ற கதைகள் எளிதில் நினைவில் வைக்கப்படுகின்றன, கதாபாத்திரங்கள் தைரியமானவை, மற்றும் பொருள் நிறைந்த அடையாளங்களாகும். யூத மதத்தில் போதனைகளில் உவமைகள் பயன்படுத்துவது ஒரு பொதுவான ம்சுரையாகும். இயேசுவின் ஊழியத்தில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு முன், இயேசு அனைவருக்கும் தெரிந்த பொதுவான விஷயங்களைப் (உப்பு, அப்பம், செம்மறியாடு, முதலியன) பயன்படுத்தி பல விவரங்களை ஒப்புமைகளைப் பயன்படுத்தி கூறினார், மேலும் அவருடைய போதனையின் பின்னணியில் அவற்றின் பொருள் மிகவும் தெளிவாக இருந்தது. உவமைகளுக்கு அதிக விளக்கம் தேவைப்பட்டது, அவருடைய ஊழியத்தின் ஒரு கட்டத்தில், இயேசு உவமைகளை பிரத்தியேகமாகப் பயன்படுத்தி கற்பிக்கத் தொடங்கினார்.

கேள்வி என்னவென்றால், இயேசு ஏன் தன் உவமைகளின் பொருளைப் பற்றி அறிந்துகொள்ள பெரும்பாலானவர்களை ஆச்சரியப்பட அனுமதிக்கிறார்? இதன் முதல் உதாரணம் விதை மற்றும் நிலங்களைக் குறித்த உவமையை அவர் கூறுவதில் கண்டு கொள்ளலாம். அவர் இந்த உவமையை விளக்குவதற்கு முன்பாக, அவர் தனது சீஷர்களை மட்டும் கூட்டத்திலிருந்து தனியாக விலக்கினார். அப்பொழுது, சீஷர்கள் அவரிடத்தில் வந்து: "ஏன் அவர்களோடே உவமைகளாகப் பேசுகிறீர்?” என்று கேட்டார்கள். அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: பரலோகராஜ்யத்தின் ரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது. அவர்களுக்கோ அருளப்படவில்லை. உள்ளவன் எவனோ அவனுக்குக் கொடுக்கப்படும், பரிபூரணமும் அடைவான்; இல்லாதவன் எவனோ அவனிடத்திலிருந்து உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும் அவர்கள் கண்டும் காணாதவர்களாயும், கேட்டும் கேளாதவர்களாயும், உணர்ந்துகொள்ளாதவர்களாயும் இருக்கிறபடியினால், நான் உவமைகளாக அவர்களோடே பேசுகிறேன். ஏசாயாவின் தீர்க்கதரிசனம் அவர்களிடத்தில் நிறைவேறுகிறது; அதாவது:

காதாரக்கேட்டும் உணராதிருப்பீர்கள்; கண்ணாரக்கண்டும் அறியாதிருப்பீர்கள். இந்த ஜனங்கள் கண்களினால் காணாமலும், காதுகளினால் கேளாமலும், இருதயத்தினால் உணர்ந்து மனந்திரும்பாமலும், நான் அவர்களை ஆரோக்கியமாக்காமலும் இருக்கும்படியாக, அவர்கள் இருதயம் கொழுத்திருக்கிறது; காதால் மந்தமாய்க் கேட்டு, தங்கள் கண்களை மூடிக்கொண்டார்கள் என்பதே. உங்கள் கண்கள் காண்கிறதினாலும், உங்கள் காதுகள் கேட்கிறதினாலும், அவைகள் பாக்கியமுள்ளவைகள். அநேக தீர்க்கதரிசிகளும் நீதிமான்களும் நீங்கள் காண்கிறவைகளைக் காணவும், நீங்கள் கேட்கிறவைகளைக் கேட்கவும் விரும்பியும், காணாமலும் கேளாமலும் போனார்களென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்" (மத்தேயு 13:10-17).

இந்த கட்டத்தில் இருந்து இயேசுவின் ஊழியத்தில், அவர் உவமைகளில் பேசியபோது, அவர் அவற்றை தனது சீடர்களுக்கு மட்டுமே விளக்கினார். ஆனால் அவருடைய செய்தியை தொடர்ச்சியாக நிராகரித்தவர்கள் அவர்களுடைய ஆவிக்குரிய குருட்டுத்தன்மையில் அவருடைய அர்த்தத்தைப் பற்றி ஆச்சரியப்பட்டார்கள். "கேட்கிறதற்கு காதுகள்" உள்ளவர்களுக்கும் அவிசுவாசத்தில் நிலைத்திருப்பவர்களுக்கும் இடையே அவர் ஒரு தெளிவான வேறுபாட்டை ஏற்படுத்தினார் அதாவது எப்போதும் கேட்டும், ஆனால் உண்மையில் உணராமல் மற்றும் "எப்போதும் கற்றாலும் ஒருபோதும் சத்தியத்தை அறிந்து உணராதவர்களாயிருக்கிறார்கள்" (2 தீமோத்தேயு 3:7). சீஷர்களுக்கு ஆவிக்குரிய பகுத்தறிவு வரம் வழங்கப்பட்டது, இதன் மூலம் ஆவியின் காரியங்கள் அவர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டன. அவர்கள் இயேசுவிடம் சத்தியத்தை ஏற்றுக்கொண்டதால், அவர்களுக்கு அதிக சத்தியங்கள் வழங்கப்பட்டது. பரிசுத்த ஆவியின் வரம் கொடுக்கப்பட்ட விசுவாசிகளின் எல்லா சத்தியங்களும் இன்றும் பொருந்தும், அவர் நம்மை சகல சத்தியத்திற்குள்ளும் வழிநடத்துகிறார் (யோவான் 16:13). அவர் சத்தியத்தின் வெளிச்சத்திற்கு நம் கண்களையும், நித்திய ஜீவனின் இனிமையான வார்த்தைகளுக்கு நம் காதுகளையும் திறந்திருக்கிறார்.

எல்லா காதுகளுக்கும் சத்தியம் இனிமையான இசை அல்ல என்பதை நம்முடைய கர்த்தராகிய இயேசு புரிந்து கொண்டார். எளிமையாகச் சொன்னால், தேவனுடைய ஆழமான காரியங்களில் ஆர்வம் அல்லது அக்கறை இல்லாதவர்கள் இருக்கிறார்கள். ஏன், அவர் உவமைகளில் பேசினார்? தேவனுக்கு உண்மையான பசி உள்ளவர்களுக்கு, உவமையானது தெய்வீக சத்தியங்களை உணர்த்துவதற்கான பயனுள்ள மற்றும் மறக்கமுடியாத முகாந்தரம் ஆகும். நம்முடைய கர்த்தரின் உவமைகள் மிகச் சில சொற்களில் பெரும் உண்மைகளைக் கொண்டிருக்கின்றன அதாவது மேலும் அவருடைய உவமைகள், உருவங்கள் நிறைந்தவை, எளிதில் மறக்க முடியாததாக இருக்கிறது. எனவே, உவமை காது உள்ளவர்களுக்கு ஆசீர்வாதம். ஆனால் மந்தமான இருதயங்கள் மற்றும் காதுகள் அடைத்துக்கொண்டு மெதுவாகக் கேட்பவர்களுக்கு, உவமை ஒரு நியாயத்தீர்ப்பின் அறிவிப்பாகும்.

Englishமுகப்பு பக்கம்

இயேசு ஏன் உவமைகளில் போதித்தார்?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries