இயேசு தனது மரணத்திற்கும் உயிர்த்தெழுதலுக்கும் இடையில் நரகத்திற்குச் சென்றாரா?


கேள்வி: இயேசு தனது மரணத்திற்கும் உயிர்த்தெழுதலுக்கும் இடையில் நரகத்திற்குச் சென்றாரா?

பதில்:
இந்தக் கேள்வியைக் குறித்து பெரிய குழப்பம் உள்ளது. இயேசு சிலுவையில் மரித்தபிறகு நரகத்திற்குச் சென்றார் என்கிற கருத்து அப்போஸ்தலருடைய விசுவாச அறிக்கையிலிருந்துதான் முதலாவது வருகிறது. அது சொல்லுகிறது, “நரகத்தில் இறங்கினார்”. சில வேத வாக்கியங்கள் அவைகள் மொழிபெயர்க்கப்பட்ட முறையில் இயேசு நரகத்திற்கு சென்றதாக விளக்குகிறது. இந்தக் காரியத்தை நாம் படிப்பதற்கு முன்பாக, பரிசுத்த வேதாகமம் மரித்தோருடைய தேசத்தைக் குறித்து என்ன போதிக்கின்றது என்று புரிந்து கொள்ள வேண்டும்.

எபிரேய வேத வாக்கியங்களில், மரித்தோர்கள் இருக்கிற தேசத்தை விளக்க ஷேயோல் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. அதனுடைய அர்த்தம் “மரித்தோருடைய இடம்” அல்லது “இறந்துபோன ஆத்துமாக்களின் இருப்பிடம்”. ஷேயோல் என்ற வார்த்தைக்கு புதிய ஏற்பாட்டில் கிரேக்கச் சொல் “ஹேட்ஸ்” அதுவும் “மரித்தோருடைய இடம்” என்று பொருள்படுகின்றது. மற்ற புதிய ஏற்பாட்டின் வேத வாக்கியங்கள் ஷேயோல்/ஹேட்ஸ் என்பது ஒரு தற்காலிகமான இடம் என்றும் அங்கு இறுதியான உயிர்த்தெழுதல் மற்றும் நியாயத்தீர்ப்பிற்காக ஆத்துமாக்கள் வைக்கப்பட்டிருக்கிற இடம் என்றும் கூறுகின்றது. வெளிப்படுத்தின விசேஷம் 20:11-15 வரை ‘ஹேட்ஸ்’க்கும் அக்கனி கடலுக்கும் தெளிவான வித்தியாசத்தை கொடுக்கின்றது. அக்கினிக்கடல் என்பது ஒரு நிரந்தரமான இடம், அது இரட்சிக்கிப்படாதவர்களுடைய கடைசி நியாத்தீர்ப்பிற்கு பிறகு அவர்கள் சென்றடையும் இடமாகும். அநேகர் ஹேட்ஸ்’ மற்றும் அக்கினி கடல் இவை இரண்டையுமே ‘நரகம்’ என்று கூறுகிறதினாலேதான் இந்த குழப்பம் வருகிறது. இயேசு அவருடைய மரணத்திற்குப் பிறகு வாதிக்கப்படுகின்ற வேதனையுள்ள இடத்திற்குச் செல்லவில்லை, மாறாக ஹேட்ஸ்’-க்குச் சென்றார்.

ஷேயோல் / ஹேட்ஸ் இரண்டு பிரிவுகள் கொண்ட ஒரு இடமாகும். ஆசீர்வாதமான இடம் மற்றும் நியாயந்தீர்க்கப்படுகிற இடம் (மத்தேயு 11:23; 16:18; லூக்கா10.15; 16:23; அப்போஸ்தலர் 2:27-31). இரட்சிக்கப்பட்டவர்கள் மற்றும் இரட்சிக்கப்படாதவர்கள் ஆகிய இந்த இருகூட்டத்தாரும் இருக்கின்ற இடத்திற்கு ‘ஹேட்ஸ்’ என்றே வேதாகத்தில் அழைக்கப்படுகின்றது. இரட்சிக்கப்பட்டவர்கள் இருக்கிற இடத்தை 16:22 -இல் ‘ஆபிரகாமுடைய மடி’ என்றும் லூக்கா 23:43-இல் ‘பரதீசு’ என்றும் அழைக்கப்படுகின்றது. இரட்சிக்கப்படாதவர்களுடைய இருப்பிடம் ‘நரகம்’ அல்லது ‘ஹேட்ஸ்’ என்றும் லூக்கா 16:23-இல் அழைக்கப்படுகின்றது. இரட்சிக்கப்பட்டவர்கள் இருக்கிற இருப்பிடத்திற்கும், இரட்சிக்கப்படாதவர்கள் இருக்கிற இருப்பிடத்திற்கும் இடையே ‘பெரும்பிளவு’ இருக்கின்றது (லூக்கா 16.26). இயேசு மரித்த பின்னர் ஷேயோலின் ஆசீர்வாதமான இடத்திற்குச் சென்றார். அங்கிருந்து விசுவாசிகளை அவரோடுகூட பரலோகத்திற்குக் கொண்டு சென்றார் (எபேசியர் 4:8-10). ஷேயோலின் நியாந்தீர்க்கப்படுகிற பகுதி மாறாமல் அப்படியே இருந்தது. இரட்சிக்கப்படாமல் மரித்தவர்கள் அங்கு கடைசி நியாயத்தீரப்புக்காக காத்திருக்கின்றனர். இயேசு ஷேயோல்/ ஹேட்ஸ்க்கு சென்றாரா? ஆம் எபேசியர் 4:8-10 மற்றும் 1 பேதுரு 3:18-20 ஆகிய வேதபகுதிகள் இப்படி கூறுகிறது.

சங்கீதம் 16:10-11 போன்ற சில வசனங்கள் மொழிப்பெயர்க்கப்பட்ட விதத்தில் சில குழப்பம் இருகின்றது “என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடீர்; உம்முடைய பரிசுத்தவானை அழிவை காணவொட்டீர், ஜீவமார்க்கத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர்”. இங்கே “பாதாளம்” என்பது சரியான மொழிபெயர்ப்பு கிடையாது. சரியான வார்த்தை “கல்லறை” அல்லது “ஷேயோல்”. இயேசு தனது பக்கத்தில் இருந்த கள்ளனிடம் “இன்றைக்கு நீ என்னுடனே கூட பரதீசிலிருப்பாய்” (லூக்கா23:43); அவர் “பாதாளத்தில் / நரகத்தில் பார்ப்போம்” என்று சொல்லவில்லை. இயேசுவின் சரீரம் கல்லறையில் இருந்தது, அவருடைய ஆவி/ஆத்துமா ஆசீர்வதிக்கப்பட்ட இடமான ஷேயோல்/ஹேட்ஸ் என்ற இடத்திரகு சென்றது. துரதிஷ்டவசமாக வேதாகமத்தின் பல பதிப்புகளில் மொழிபெயர்ப்பாளர்கள் சரியாக அல்லது ஒரே மாதிரியாக “ஷேயோல்”, “ஹேட்ஸ்” “நரகம்” என்ற எபிரேய மற்றும் கிரேக்க வார்த்தைகளை மொழிபெயர்க்கவில்லை.

சிலர் வேறொரு கண்ணோட்டத்தை உடையவளாயிருக்கிறார்கள். இயேசு நரகத்திற்குச் சென்று மேலும் நம் பாவத்திற்கு தண்டிக்கப்பட்டார் என்று கூறுகிறார்கள். இது முற்றிலும் வேதத்திற்கு புறம்பானது ஆகும். சிலுவையில் இயேசு மரித்தது நம்முடைய மீட்புக்கு போதுமானது ஆகும். அவருடைய சிந்தப்பட்ட இரத்தமே நம்முடைய பாவம் கழுவப்பட போதுமானது (1 யோவான் 1:7-9). அவர் சிலுவையில் தொங்கும் போது அவர் மொத்த மனுக்குலத்தின் பாவச்சுமையைச் சுமந்தார். அவர் நமக்காக பாவமானார் “நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு பாவம் அறியாத அவரை நமக்காக பாவமாக்கினார்” (2 கொரிந்தியர் 5:21). இயேசு பாவத்திற்காக குற்றஞ்சாட்டப்பட்ட இந்த காரியம் அவர் கெத்சமனே தோட்டத்தில் இந்தப் பாவத்தின் பாத்திரம் தன்மேல் சிலுவையில் ஊற்றப்படப் போகிறதை நினைத்து தத்தளித்தது ஏன் என்று நமக்கும் புரியும்.

இயேசு மரணத்தை நெருங்கியபோது, அவர் “எல்லாம் முடிந்தது” (யோவான் 19:30) என்று கூறினார். அவருடைய ஆத்துமா/ஆவி ஹேட்ஸ் (மரித்தோருடைய இடம்) என்ற இடத்திற்குச் சென்றது. இயேசு “நரகம்” அல்லது தண்டிக்கப்படுகிற இடத்திற்குச் செல்லவில்லை. அவர் “ஆபிரகாமின் மடி” அல்லது “ஹேட்ஸின்” ஆசீர்வாதமான இடத்திற்குச் சென்றார். பாவத்திற்காக விலைக்கிரயம் ஏற்கனவே கொடுக்கப்பட்டாயிற்று. அவர் அதன்பின் சரீரத்தின் உயிர்தெழுதலுக்காகவும் மகிமையில் எடுத்துக் கொள்ளப்படவும் காத்துக் கொண்டிருந்தார். இயேசு நரகத்திற்குச் சென்றாரா? இல்லை, இயேசு நரகத்திற்குச் செல்லவில்லை. இயேசு ஷேயோல் அல்லது ஹேட்ஸ் என்ற இடத்திற்குச் சென்றாரா? ஆம்.

English
முகப்பு பக்கம்
இயேசு தனது மரணத்திற்கும் உயிர்த்தெழுதலுக்கும் இடையில் நரகத்திற்குச் சென்றாரா?