settings icon
share icon
கேள்வி

இயேசுவின் குழந்தை பருவத்தில் என்ன சம்பவித்தது?

பதில்


லூக்கா 2:41-52 இல் கொடுக்கப்பட்டதைத் தவிர, வேதாகமத்தில் இயேசுவின் இளமைக் காலம் பற்றிய வேறே எதுவும் சொல்லப்படவில்லை. இந்த சம்பவத்திலிருந்து இயேசுவின் குழந்தைப் பருவம் பற்றிய சில விஷயங்கள் நமக்குத் தெரியும். முதலில், அவர் பெற்றோரின் மகனாக இருந்தார், அவர்களுடைய மத சடங்குகளில் பக்தியுள்ளவராக இருந்தார். அவர்களின் நம்பிக்கையின் படி, யோசேப்பும் மரியாளும் ஆண்டுதோறும் பஸ்கா பண்டிகைக்கு எருசலேமுக்கு யாத்திரை மேற்கொண்டனர். கூடுதலாக, அவர்கள் தங்கள் 12 வயது மகனை 13 வது வயதில் யூத சிறுவர்கள் நினைவுகூரும் போது அவரது பார் மிட்ஜ்வாஹ்க்காக தனது முதல் விருந்தைக் கொண்டாட அழைத்து வந்தனர். அன்றைய காலத்தில் ஒரு சாதாரண குடும்பத்தில் ஒரு சாதாரண பையனை இங்கே பார்க்கிறோம்.

இந்த கதையில் இயேசு தேவாலயத்தில் நீடிப்பது குறும்புத்தனமாகவோ அல்லது கீழ்ப்படியாதவராகவோ இல்லை, ஆனால் அவர் தனது பிதாவின் காரியத்தில் இருக்க வேண்டும் என்ற அவரது அறிவின் இயல்பான விளைவாகும். அவர் தனது ஞானம் மற்றும் அறிவால் தேவாலய ஆசிரியர்களை வியப்பில் ஆழ்த்தியது அவரது அசாதாரண திறன்களைப் பேசுகிறது, அதே சமயம் அவருடைய வயது வந்தோரின் கேள்விகளைக் கேட்பது மற்றும் அவர் கேட்கும் கேள்விகள் அவர் ஒரு மாணவரின் பாத்திரத்தில் அவரது வயதுக்கு ஏற்றவாறு நடந்துகொண்டார் என்பதையும் இதுக் காண்பிக்கிறது.

இந்த சம்பவத்திலிருந்து 30-ஆம் வயதில் அவருடைய ஞானஸ்நானம் வரை, இயேசுவின் இளமைக் காலம் குறித்து நமக்குத் தெரிந்ததெல்லாம், அவர் எருசலேமை விட்டு தனது பெற்றோருடன் நாசரேத்துக்குத் திரும்பினார் மற்றும் "அவர்களுக்குக் கீழ்ப்படிந்திருந்தார்" (லூக் 2:51) என்பதாகும். அவர் நம் சார்பாக வழங்கிய மோசேயின் நியாயப்பிரமாணத்திற்கு சரியான கீழ்ப்படிதலின் ஒரு முக்கிய அங்கமான 5 வது கட்டளைக்கு அடிபணிந்து தனது பூமிக்குரிய பெற்றோருக்கு தனது கடமையை நிறைவேற்றினார். அதையும் தாண்டி, நமக்குத் தெரிந்ததெல்லாம் "இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும், தேவகிருபையிலும், மனுஷர் தயவிலும் அதிகமதிகமாய் விருத்தியடைந்தார்" (லூக் 2:52).

வெளிப்படையாக, இவை அனைத்தும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று தேவன் தீர்மானித்தார். வேதாகமத்தில் கொடுக்கப்படாத இயேசுவின் இளமைக் கால கதைகளைக் கொண்ட சில கூடுதல் எழுத்துக்கள் உள்ளன (உதாரணமாக தோமாவின் நற்செய்தி நூல்). ஆனால் இந்த கதைகளில் ஏதேனும் உண்மை இருக்கிறதா மற்றும் நம்பகமானதா என்பதை அறிய நமக்கு ஒரு வழியும் இல்லை. இயேசுவின் குழந்தைப் பருவத்தைப் பற்றி அதிகம் சொல்லாமல் இருக்கவே தேவன் தேர்ந்தெடுத்தார். எனவே நாம் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தையும் அவர் நமக்கு அறிவித்தார் என்று நாம் அவரை நம்ப வேண்டும்.

English



முகப்பு பக்கம்

இயேசுவின் குழந்தை பருவத்தில் என்ன சம்பவித்தது?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries