settings icon
share icon
கேள்வி

யோவான் 1:1, 14 ஆகிய வேதப்பகுதி இயேசு தேவனுடைய வார்த்தை என்று அறிவிப்பதன் அர்த்தம் என்ன?

பதில்


யோவான் தனது நற்செய்தி நூலை எழுதியதற்கான காரணத்தை முதலில் புரிந்துகொள்வதன் மூலம் இந்த கேள்விக்கான பதிலைப் பெறலாம். அவருடைய நோக்கம் யோவான் 20:30-31 இல் தெளிவாகக் கூறப்பட்டிருப்பதைக் காண்கிறோம். "இந்தப் புஸ்தகத்தில் எழுதியிராத வேறு அநேக அற்புதங்களையும் இயேசு தமது சீஷருக்கு முன்பாகச் செய்தார். இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவனை அடையும்படியாகவும், இவைகள் எழுதப்பட்டிருக்கிறது”. யோவானின் நோக்கம் இயேசு கிறிஸ்துவை தனது நற்செய்தியின் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துவதாகும், அதாவது இயேசு யார் (மாம்சத்தில் வந்த தேவன்) மற்றும் அவர் என்ன செய்தார் என்பதை நிறுவுவதாகும். யோவானின் ஒரே குறிக்கோள், மக்களை கிறிஸ்துவின் இரட்சிக்கும் கிரியையை நம்பிக்கையுடன் ஏற்றுக்கொள்ள வைப்பதாகும். இதை நாம் புரிந்துகொள்ளும்போது, யோவான் 1:1 இல் இயேசுவை "வார்த்தை" என்று ஏன் அறிமுகப்படுத்துகிறார் என்பதை நாம் நன்கு புரிந்துகொள்ள முடிகிறது.

"ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது" என்று அவருடைய நற்செய்தியைத் தொடங்குவதன் மூலம், யோவான் தனது யூத மற்றும் புறஜாதிய வாசகர்களுக்கு நன்கு தெரிந்த ஒரு வார்த்தையைக் கூறி அதனோடு இயேசுவை நிகராக்கி அவரை அறிமுகப்படுத்துகிறார். இந்த வேதப்பகுதியில் "வார்த்தை" என்று மொழிபெயர்க்கப்பட்ட கிரேக்க வார்த்தை லோகோஸ், அது அன்றைய கிரேக்க தத்துவம் மற்றும் யூத சிந்தனை இரண்டிற்கும் பொதுவானதாய் இருந்தது. உதாரணமாக, பழைய ஏற்பாட்டில் தேவனுடைய "வார்த்தை" பெரும்பாலும் தேவனுடைய விருப்பத்தை நிறைவேற்றுவதற்கான ஒரு ஆள்தன்மையாக உருவகப்படுத்தப்படுகிறது (சங்கீதம் 33:6, 107:20, 119:89, 147:15-18). எனவே, அவருடைய யூத வாசகர்களுக்கு, இயேசுவை "வார்த்தை" என்று அறிமுகப்படுத்துவதன் மூலம், யோவான் ஒரு விதத்தில் பழைய ஏற்பாட்டிற்கு அவர்களை சுட்டிக்காட்டுகிறார் அல்லது தேவனுடைய "வார்த்தை" தேவனுடைய வெளிப்பாட்டின் ஆள்தன்மையுடன் தொடர்புடையது ஆகும். மேலும் கிரேக்க தத்துவத்தில், லோகோஸ் என்ற சொல் இடைநிலை செயலாண்மையை விவரிக்க பயன்படுத்தப்பட்டது, இதன் மூலம் தேவன் பொருட்களை உருவாக்கி அவர்களுடன் தொடர்பு கொண்டார் என்பதாகும். கிரேக்க உலக கண்ணோட்டத்தில், லோகோஸ் என்பது ஆழ்ந்த தேவன் மற்றும் பொருள் பிரபஞ்சத்திற்கு இடையே ஒரு பாலமாக கருதப்பட்டது. எனவே, அவரது கிரேக்க வாசகர்களுக்கு, லோகோஸ் என்ற வார்த்தையின் பயன்பாடு தேவனுக்கும் உலகத்திற்கும் இடையில் ஒரு மத்தியஸ்தக் கொள்கை பற்றிய யோசனையை முன்வைத்ததாக இருந்தது.

எனவே, அடிப்படையில், யோவான் இயேசுவை லோகோஸ் என்று அறிமுகப்படுத்துவதன் மூலம் என்ன செய்கிறார் என்பது அவருடைய காலத்தின் யூதர்களும் புறஜாதியாரும் நன்கு அறிந்திருக்க வேண்டும் என்று ஒரு வார்த்தை மற்றும் கருத்தை வரையறுத்து அதிலிருந்து தொடங்க அதனை ஒரு தொடக்கப் புள்ளியாகப் பயன்படுத்துகின்றார். அவ்வாறாக யோவான் அவர்களுக்கு இயேசு கிறிஸ்துவை அறிமுகப்படுத்துகிறார். ஆனால் யோவான் தனது யூத மற்றும் புறஜாதிய வாசகர்கள் அறிந்திருக்கும் லோகோஸ் என்ற பழக்கமான கருத்தை மீறி, இயேசு கிறிஸ்துவை கிரேக்கர்கள் உணர்ந்தது போல் ஒரு மத்தியஸ்தக் கொள்கையாக அல்ல, மாறாக ஒரு தனி மனிதராக, முற்றிலும் தெய்வீக தன்மையுள்ளவராக, முழு மனிதராக காண்பிக்கிறார். மேலும், யூதர்கள் நினைத்தபடி கிறிஸ்து வெறுமனே தேவனுடைய வெளிப்பாட்டின் ஒரு உருவமாக அல்லது ஆள்தன்மையாக இல்லை, ஆனால் உண்மையில் தேவன் தம்மை மாம்சத்தில் வெளிப்படுத்தினார் என்பதாகும், அதனால் யோவான் பிலிப்புக்கு இயேசு கூறிய சொந்த வார்த்தைகளை அப்படியே பதிவு செய்கிறார்: "பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்; அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படி சொல்லுகிறாய்?" (யோவான் 14:9). யோவான் 1:1 இல் லோகோஸ் அல்லது “வார்த்தை” என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதன் மூலம், யோவான் தனது வாசகர்களுக்கு நன்கு தெரிந்த ஒரு கருத்தை விரிவுபடுத்திப் பயன்படுத்துகிறார் மற்றும் அதைப் பயன்படுத்தி தனது வாசகர்களுக்கு உண்மையான லோகோஸை அறிமுகப்படுத்தினார், அதாவது தேவனுடைய ஜீவனுள்ள வார்த்தையான இயேசு கிறிஸ்துவில் தேவன், முழுமையாக தேவன் மற்றும் இன்னும் முழுமையாக மனிதன், தேவனை மனிதனுக்கு வெளிப்படுத்தவும், அவரை நம்பும் அனைவரையும் அவர்களுடைய பாவத்திலிருந்து மீட்கவும் வந்தார் என்பதை விவரிக்கிறார்.

English



முகப்பு பக்கம்

யோவான் 1:1, 14 ஆகிய வேதப்பகுதி இயேசு தேவனுடைய வார்த்தை என்று அறிவிப்பதன் அர்த்தம் என்ன?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries